பாலி- சகிப்புத்தன்மையும் அழகும் கொண்ட ஒரு பிம்பத்தை வெடிகுண்டுகள் உடைக்கின்றன

This entry is part [part not set] of 35 in the series 20021022_Issue

டேவிட் ஃபிக்லிங்


ஆஸ்திரேலிய அலை விளையாட்டுக்காரர்கள் பாலித்தீவுக்கு 70களில் வந்தபோது, ஜலன் லெஜியன் (சனிக்கிழமை இரவு வெடிப்பு நடந்த இடம்) வெறும் சைக்கிள் போகும் நெல்வயலாக இருந்தது. குடா கடற்கரையில் அவர்கள் பின்னால் பல்லாயிரம் பேர்கள் அலைவிளையாட்டு செய்ய வந்தார்கள்.

அலைவிளையாட்டு பற்றி எழுதும் பீட்டர் நீயெலி இங்கு 1975இல் வந்தார். அதற்கு முன்னர் இங்கு வந்தவர்கள் ஜகார்த்தாவின் மேல்தட்டு வர்க்கம்தான். அவர்களுக்கு இங்கு இரண்டாவது ஓய்வு வீடு இருந்தது. இன்று இருப்பது போன்ற ஹோட்டல்களோ, நைட் கிளப்புகளோ, மதுபான விடுதிகளோ அப்போது இல்லை.

கடற்கரைக்கு அருகில் தங்குவதற்காக அன்று நீயெலி அருகாமையிலிருந்த ஒரு விவசாயிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. ஒரு வருட வாடகையை முன்னமே கொடுத்துவிடுவதன் மூலம், விவசாயி ஒரு தண்ணீர் கோபுரம் கட்டுவதும், தன் வீட்டில் இருக்கும் ஒரு அறையை வாடகைக்கு கொடுப்பதும் செய்தார்.

அலை விளையாட்டாளர்கள் வந்ததும், விடுமுறை கொண்டாட வருபவர்களும் கோடிக்கணக்கில் வர ஆரம்பித்தனர். 2000த்தில் இந்தோனேஷிய அரசாங்கத்தின் கணக்குப்படி 10 லட்சம் டூரிஸ்டுகள் இங்கு வந்தார்கள். இதில் 3.5 லட்சம் ஆஸ்திரேலியர்களும், 2.5 லட்சம் ஜப்பானியர்களும், 1.7 லட்சம் தைவானியர்களும், 1.5 லட்சம் ஆங்கிலேயர்கலும் அடக்கம்.

பாலியில் இருக்கும் தென்பசர் விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு மாட்டிக்கொண்ட நெயெலி எழுதிய பாலி கடற்கரை அலை விளையாட்டு பற்றிய புத்தகம் 30 பதிப்புகள் வந்துவிட்டது.

பாலிக்குள் வரும் டாலரின் எண்ணிக்கை, பாலியை இந்தோனேஷியாவின் டூரிஸ்ட் சொர்க்கமாக மாற்றி இருக்கிறது. இந்த இடத்தில் இந்தோனேஷியாவின் சட்டதிட்டங்கள் அவ்வளவாகச் செயல்படுத்தப்படுவதில்லை. இந்தோனேஷியாவில் அடிக்கடி நடக்கும் கலவரங்களும் இந்த இடத்தை பாதிப்பதில்லை. வெளிநாட்டு தூதரகங்களில் இந்தோனேசியாவில் பயங்கரவாதம் என எச்சரிக்கை செய்து போவதை தடுத்தாலும் பாலியை விதிவிலக்கு என்று குறிப்பிடத்தவறுவதில்லை.

1999இல், திமோர் தீவு சுதந்திரத்துக்கு ஆஸ்திரேலியா ஆதரவு கொடுத்ததும், ஆஸ்திரேலிய-இந்தோனேஷிய உறவு அதள பாதாளத்தில் வீழ்ந்தது. அந்த டூரிஸ்ட் வறட்சியின் போது, பாலி மட்டுமே அந்த டூரிஸ்ட் வறட்சிக்குள் வரவில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்த தீவின் தனிப்பட்ட கலாச்சாரம். இந்து மதமும், அனிமிஸமும் கலந்த ஒரு மதம் இங்கு இருப்பதால், அது இந்தோனேஷியாவின் மற்ற பிரதேசங்களில் நடைமுறையில் இருக்கும் இஸ்லாமை விட சகிப்புத்தன்மை மிகுந்ததாக கருதப்படுகிறது.

ந்த தீவில் தான் இந்தோனேஷியாவிலேயே மிகவும் வெளிப்படையாக நடத்தப்படும் ஒருபாலின மதுவிடுதிகள் இருக்கின்றன. இந்தோனேஷியாவின் மற்ற பகுதிகளில் தீவிரமாக தடை செய்யப்பட்ட மேலாடை அற்ற குளியல் இங்கு சகித்துக்கொள்ளப்படுகிறது.

இந்தோனேஷியாவின் பொருளாதார வீழ்ச்சிக்கு நடுவிலும், இந்தோனேஷியாவின் மத, இன, பிரிவினைவாத வன்முறைக்கு நடுவில் தன்னுடைய சொர்க்கத்தீவு தன்மையை பாலி காப்பாற்றி வந்துள்ளது. இந்தோனேஷிய அரசாங்கம் பாலியின் டூரிஸ்ட் தொழிற்சாலையை பணம் கறக்கும் பசுவாக கருதி வந்துள்ளது. அதனாலேயே இந்த இடத்தில். இந்தோனேஷியவின் மற்ற இடங்களில் வந்தது போன்று எந்த விதமான கலவரம் வராமலும் ஒத்துழைத்து வந்துள்ளது.

ஆனால், பாலி உட்கார்ந்திருக்கும் இடம் வன்முறை சுற்றிச்சுழலும் ஒரு இடம். இதன் அருகாமை தீவான லோம்போக்கில் 2000ஆம் ஆண்டு, மூஸ்லீம் கும்பல்கள் கிரிஸ்தவ, இந்து, சீன வீடுகளை கொளுத்தி கொள்ளையிட்டன. பாலியின் மேற்கே இருக்கும் கிழக்கு ஜாவா தீவில் அடிக்கடி சீன சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை நடக்கிறது. இரண்டு கலவரங்களிலும், பாலி தீவு மட்டுமே, அந்த கலவரங்களிலிருந்து தப்பி வருபவர்களுக்கு அடைக்கலமாக இருந்து வந்துள்ளது. அதனாலேயே, இந்தத் தீவு, பல புயல்களுக்கு பாதுகாப்பான தீவாக இந்தோனேஷிய சமூகத்தில் 1997இலிருந்து கருதப்பட்டு வந்துள்ளது. அந்த பெயர் சென்ற வாரம் மீட்டெடுக்க முடியாமல் சிதைந்து போனது.

* பாலித்தீவின் 30 லட்சம் மக்களில் பெரும்பான்மையினர் இந்துக்கள். மற்ற இந்தோனேஷியாவின் சுமார் 20 கோடி மக்கள் முஸ்லீம்கள். நகரங்களில் இந்திய, அராபிய சீன சிறுபான்மையினர் வாழ்கிறார்கள். பாலி சகிப்புத்தன்மை மிகுந்த கலாச்சாரம். இங்கு மதுவும், மேற்கத்திய முறை இரவு வாழ்க்கையும் சகித்துக்கொள்ளப்படுகிறது.

* பாலியின் சமூக வாழ்க்கை, சென்ற பத்தாண்டுகளில் இந்தோனேஷியாவில் நடந்திருக்கும் அரசியல் மத இன வன்முறை போராட்டங்களிலிருந்து வெகுவாக விலகி இருந்து வருகிறது.

* குடா என்ற கடற்கரையில் நடந்த வெடிகுண்டு வெடிப்பு நடந்த இடம் மிகவும் புகழ்பெற்ற டூரிஸ்ட் இடம். இதுவே டூரிஸ்ட் வியாபாரத்தின் மையம். இங்கு மிகவும் சிறப்பான உணவுவிடுதிகளும், ஹோட்டல்களும், பரிசுப்பொருள் விற்பனை நிலையங்களும் இருக்கின்றன

* இந்த தீவு 90 மைல் நீளமும் 60 மைல் அகலமும் கொண்டது. இது இந்தோனேஷியாவில் இருக்கும் 17,508 தீவுகளில் ஒன்று. இது இந்தோனேஷியாவின் தலைநகரான ஜகர்தாவிலிருந்து 560 மைல் கிழக்கே இருக்கிறது

**

Blasts shatter image of beauty and tolerance

The Guardian, Monday October 14, 2002

http://www.guardian.co.uk/international/story/0,3604,811235,00.html

***

Series Navigation