பழைய பொன்மொழிகள்

This entry is part [part not set] of 31 in the series 20020623_Issue


மதுக்கடையில் – மறப்பதற்காக குடிப்பவர்கள், குடிப்பதற்கு முன்பே பணம் கொடுத்துவிடும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

***

ஒவ்வொரு மாபெரும் மனிதனுக்குப் பின்னாலும், ஒரு பெண் ஆச்சரியத்துடன்.

***

மனைவி என்பவள் உனக்கு வரும் கஷ்டங்களைத் தாங்க உன்னுடன் துணையாக இருப்பவள். (நீ தனியாக இருந்திருந்தால் அந்த கஷ்டங்களே வந்திருக்காது என்பது வேறுவிஷயம்)

***

புகை பிடிப்பது எடை குறைய உதவும்…ஒவ்வொரு நுரையீரலாக

***

குடிப்பதில் உள்ள தீமைகளைப் பற்றிப் படித்ததும், நான் விட்டுவிட்டேன்.. படிப்பதை.

***

உன்னுடைய குழந்தைகள் பெரியவர்கள் ஆகிறார்கள் என்பதை நீ உணர்வது, உன்னுடைய மகள் லிப்ஸ்டிக் போட்டிருக்கும்போதோ, உன் மகன் லிப்ஸ்டிக்கை அழிக்கும்போதோ…

***

நான் எப்போதும் ஒரு காலியான பால்டப்பாவை பிரிட்ஜில் வைத்திருப்பேன். யாரேனும் கடுங்காப்பி கேட்டால் என்ன செய்வதென்றுதான்.

***

கண்டுபிடிப்பின் தாய், மாட்டிக்கொள்வதுதான்

***

சிரித்தால் உலகம் கூட சிரிக்கும். குரட்டைவிட்டால் தனியாகத்தான் தூங்க வேண்டும்.

***

இந்த பிரபஞ்சத்தில் புத்திசாலியான உயிர்கள் இருக்கின்றன என்பதன் நிரூபணம், யாரும் நம்மை இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்பதுதான்.

***

குழந்தைகளைப் பெறும்போது தங்கப்புதையல் போலத்தான் தோன்றுகிறது. கடைசியில் பார்த்தால், பைத்தியம் பிடித்த பெற்றோரும், எதற்கெடுத்தாலும் அழுதுகொண்டே உன்னை உதைக்கும் பிள்ளைதான் கிடைக்கிறது..

***

தேவையான வயது வரும்முன்னர் உங்கள் குழந்தைகளை வண்டியோட்ட அனுமதிக்காதீர்கள். இல்லையென்றால் அவர்களால் எப்போதுமே வண்டி ஓட்ட முடியாது.

***

பியூட்டி பார்லர் முன்பு இருந்த வாசகம். ‘இங்கிருந்து வெளியே செல்லும் அழகிகளைப் பார்த்து விசிலடிக்க வேண்டாம். அவள் ஒருவேளை உன் பாட்டியாக இருக்கலாம் ‘

***

கையிலே சுத்தியல் தான் இருந்தால் பார்ப்பதெல்லாம் ஆணிபோலத்தான் இருக்கும்.

***

Series Navigation

செய்தி

செய்தி