‘பதிவுகள் ‘/ ‘தமிழர் மத்தியில் ‘ ஆதரவுச் சிறுகதைபோட்டி முடிவுகள் 2004!

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

அறிவிப்பு


முதற் பரிசு (200 கனேடிய டாலர்கள்): ‘எல்லாம் இழந்த பின்னும்.. ‘

எழுதியவர்: சாந்தினி வரதராஜன் (ஜேர்மனி)

மின்னஞ்சல்: svaratharajah@hotmail.com

இரண்டாம் பரிசு (100 கனேடிய டாலர்கள்): ‘நான், நீங்கள் மற்றும் சதாம் ‘

எழுதியவர்: ஆதவன் தீட்சண்யா (தமிழ்நாடு)

மின்னஞ்சல்: :visaiaadhavan@yahoo.co.in

மூன்றாம் பரிசு (75 கனேடிய டாலர்கள்): ‘தீதும் நன்றும் ‘

எழுதியவர்: அலர்மேல் மங்கை (அமெரிக்கா).

மின்னஞ்சல்: alamuperumal@yahoo.com

பதிவுகள் நந்தா பதிப்பகத்தின் ‘தமிழர் மத்தியில் ‘ ஆதரவுடன் நடாத்திய சிறுகதைப் போட்டிக்கு உலகின் பல பாகங்களிலிருந்தும் கலந்துகொண்ட படைப்பாளிகள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகள். போட்டிக் கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்கு நடுவர்களாக இருக்க முடியுமா எனக் கேட்டபோது, தயக்கமின்றி மகிழ்ச்சியுடன் சம்மதித்தார்கள் எழுத்தாளர்களான திரு.அ.முத்துலிங்கமும், திரு.என்.கே.மகாலிங்கமும். இவர்களிருவரைப் பற்றி ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகு மட்டுமல்ல, தமிழக இலக்கிய உலகும் நன்கறியும். பதிவுகள் நடாத்தும் சிறுகதைபோட்டி பற்றிக் குறிப்பிட்டதும் அதற்குரிய பரிசுப் பணத்துக்குத் தானே பொறுப்பு என மகிழ்ச்சியுடன் முன்வந்தார் ‘நந்தா பப்ளிகேஷன்ஸ் ‘ அதிபரான கட்டடக்கலைஞர் திரு. நந்தகுமார் இராஜேந்திரம். இவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.

நாம் போட்டிக் கதைகளைத் தெரிவு செய்வதில் பின்வரும் முறையினைக் கையாண்டோம். நடுவர்களிடம் எழுத்தாளர்களின் பெயர்களை நீக்கிவிட்டுக் கதைகளை மட்டுமே கொடுத்தோம். எழுத்தாளர்களின் பெயர்கள் எந்தவிதத்திலும் கதைகளைத் தேர்வு செய்வதில் பாதிப்பினை ஏற்படுத்தி விடக்கூடாதென்பற்காகவே அவ்விதம் செய்தோம். அதற்கு நடுவர்களும் மனப்பூர்வமாகச் சம்மதித்தார்கள். அதற்கும் எமது நன்றிகள்.

போட்டிக்கு வந்த கதைகளைத் தெரிவு செய்வதில் நடுவர்கள் சிறிது திணறிப்போய் விட்டார்களென்றும் கூறலாம். பெரும்பாலான கதைகள் மிகவும் தரமாகவிருந்தன. போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு, போட்டியினையும் வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவிய அனைத்துப் படைப்பாளிகளுக்கும், நடுவர்களாகவிருந்து பரிசுக் கதைகளைத் தேர்ந்தெடுத்த திரு. அ.முத்துலிங்கம், திரு.என்.கே.மகாலிங்கம் அவர்களுக்கும் மற்றும், முதல் மூன்று பரிசுக்கதைகளுக்குரிய பரிசுகளை வழங்கச் சம்மதித்த நந்தா பதிப்பக உரிமையாளர் திரு.நந்தா இராஜேந்திரம் அவர்களுக்கும் மீண்டுமொருமுறை எமது மனப்பூர்வமான நன்றிகள் உரித்தாகுக. பரிசுபெற்ற படைப்பாளிகளுக்குப் பரிசுப் பணமும், சான்றிதழும் அனுப்பி வைக்கப்படும்

மேலதிக விபரங்களுக்கு:

– பதிவுகள்.காம் –

ngiri2704@rogers.com

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு