நொக்கியாபோனும் எழுபத்தைந்துரூபா சோடாவும்

This entry is part [part not set] of 26 in the series 20080626_Issue

தீபச்செல்வன்ஜீன்ஸ்க்குள் கிடந்த
நோக்கியாபோன் அலருகிறது.

இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்கியருந்திய
முந்நூறுமில்லி சோடாவை
எழுபத்தைந்து ரூபாய்க்கு
வாங்கி அருந்திக்கொண்டிருந்தேன்.

இருபது ரூபாய்க்கு
வாங்கிய சிகரட்
வாயில்
கொலுந்து விட்டெறிகிறது
இன்னும் ஜந்து ரூபாவால்
அதிகரித்தபோதும்
வாய் எரியாமல் இருக்கிறது.

தெருவில் சிகரட்டை
சப்பியபடி
பியர்போத்தலை
தூக்கி அருந்தியபடி திரிய முடிகிறது.


எப்போதாவது வரும்
நெட்வேர்க்கில்
வியர்வையை காசுகளை
குடிக்கும்
நொக்கியாபோன் திரும்ப
பேரூந்தில் அலருகிறது
மேலதிக காசில் வாங்கும்
ரேசர் கோட் கார்ட்டுக்காக.

யாருடனாவது
பேசிக்கொண்டிருக்கலாம்
யாராவது அழைப்பார்கள்
யாரையாவது அழைக்கலாம்
எதாவது பேசலாம்.

பக்கத்திலிருக்கும் தோழனுடன்
பேசவேண்டியவை பேசாமல்
புரியவேண்டியவை புரியால் இருக்கிறது
அவனின் கேள்விகளும்
உரையாடலும்
வெறுமையில் அடிபட்டுக் கிடக்கின்றன

கசை குடித்துவிட்டு
பசிகளின் முன்னால்
நொக்கியாபோன் காலை நீட்டி படுத்திருக்கிறது
சொற்களும் உரையாடல்களும்
கம்பிகளிலிருந்து
வெளிறே எங்கும் சூன்யம் நிறைந்தது


Series Navigation

தீபச்செல்வன்

தீபச்செல்வன்