நேசக்குமார் அவர்களின் கட்டுரை

This entry is part [part not set] of 32 in the series 20090512_Issue

ஹமீது ஜாஃபர்


புலம்பவேண்டாம் ஐயா!

திருவாளர் நேசக்குமார் அவர்களின் கட்டுரையைப் படித்தபோது சிரிப்புத்தான் வந்தது. வழக்கம்போல புலப்பம், ஒப்பாரி என்ன செய்வது? சிலருக்கு SATURATED MIND.

இவருக்கு காஃபிர் என்று சொன்னால் தீயை மிதித்ததுபோல் குதிக்கிறார். இறைநிராகரிப்பவருக்கு காஃபிர் என்று அரபுச்சொல். காஃபிருக்கு காஃபிர் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வது?

நேசக்குமாரை நேசக்குமார் என்றுதான் அழைக்கமுடியுமே தவிர நோஞ்சக்குமார் என்று அழைக்கமுடியாது அழைக்கவும்கூடாது. எனவே சகோதரர் இஸ்லாத்தின்மீது எரிந்து விழுவதை விட்டுவிட்டு தாம் சார்ந்திருக்கும் இந்து மதத்தில் மறைக்கப்பட்ட; குழித்தோண்டிப் புதைக்கப்பட்ட உண்மையை; இறைக்கொள்கையை வெளிக்கொணருங்கள். சைவ சித்தாந்தம் இறைவனைப் பற்றி என்ன சொல்கிறது? “அருவமா? அருஉருவமா? உருவமா? இல்லை அதற்கும் அப்பாற்பட்டதா?” உண்மைக்கொள்கையை விளக்குங்களேன்! பட்டிணத்தாரையும் கரூராரையும் காட்டுங்களேன்!

இவண்,
ஹமீது ஜாஃபர்


email: maricar@eim.ae

Series Navigation