நேசகுமாரும்…. நல்லடியாரும்….

This entry is part [part not set] of 42 in the series 20080207_Issue

கால்கரி சிவாநேசகுமாரும்…. நல்லடியாரும்….

திரு நல்லடியார் என்ற நம்பிக்கையாளர் திரு நேசகுமார் என்ற விமர்சிகருக்கு கடந்த வார திண்ணையில் பதிலளிக்கும் விதத்தில் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில் நல்லடியார் நேசகுமாரை சரித்திர ஆதாரத்தோடு மறுக்காமல் அரபிகளுக்கே உரிய அகங்காரத்துடன் பதில் அளித்துள்ளார். அவர் எக்காளம் செய்த விஷயங்கள்:

1. இந்திய முன்னோர்கள் ஏன் தம் மகளிரை காக்கவில்லை

இந்திய முன்னோர்கள் தத்தம் மகளிரை முகலாய கற்பழிப்பிலிருந்து காக்க முடியவில்லை என ஏளனம் செய்கிறார்.அந்த கால சூழலை சற்றே சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

அந்த கால இந்திய அரசர்களும் போர்வீரர்களும் ஊருக்கு வெளியே சென்று ஏதோ ஒரு விளையாட்டு போல்தான் காலை முதல் மாலை வரை போரிடுவார்கள். அங்கே ஒரு யுத்த தர்மம் இருந்தது, ஆனால் இந்தியாவை கொள்ளையடிக்க வந்த முகமதியர்கள் நேரங்கெட்ட நேரத்தில் தீடிரென்று அப்பாவி பெண்களையும் குழந்தைகளையும் தாக்கினார்கள் கற்பழித்தார்கள். கொன்று தீர்த்தார்கள். . தர்மத்தையும் நேர்மையும் தம் உயிர் மூச்சாக கொண்டு வாழ்ந்து சாப்ட் ஆகி போகியிருந்த இந்திய முன்னோர்கள் தங்களின் மகளிரையும் குழந்தைகளையும் கொள்ளை அடிக்க வந்த மூர்க்கர்களிடமிருந்து காக்க முடியவில்லை. இதையும் இந்த நல்லாடியார் எக்காளம் செய்து எழுதியுள்ளார்.

மற்றவர்கள் ஏமாறும் நேரும் தாக்கும் உத்தியை இன்னும் அரேபியரிடம் காணலாம். நான் பார்த்தேன் என் சவூதி வாழ்க்கையில்

2. Yaroslav Trofimov என்பர் அட்ரஸ் இல்லாதவராம். இவர் மத்திய கிழக்கு விவாகரங்களைப் பற்றி உலகளாவிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியவர். வால் ஸ்ட்ரீட் ஜர்னலின் நிருபர். இவரின் நம்பிக்கைகளை கேள்வி கேட்பரெல்லாம் இவருக்கு அட்ரஸ் இல்லாதவர் ஆகிவிடுவார்கள் நல்லாடியாருக்கு.

3. பென்குயின் பதிப்பகம் : முகமதிய அரசர்கள் முதல் பேராசிரியர்களிருந்து தற்கொலை தீவிரவாதி வரை அனைவரும் விரும்பும் காரியம் சல்மான் ருஸ்டி என்ற கதாசிரியரின் தலையை கொய்வது. சல்மான் ருஸ்டி என்ற கதாசிரியரின் ஒரு கதை முகமதிஸத்தை நிறுவனரின் கதையை ஒத்து இருப்பதால் இந்த பதிப்பகமே கேவலமான பதிப்பகம். இவர்கள் பதிப்பதெல்லாம் படிக்ககூடாதவை என்ற தொனியில் எழுதியுள்ளார். இதே பதிப்பகம் கடவுளின் வார்த்தைகள் என இவர் நம்பும் குரானைக் கூட பதிப்பித்துள்ளது. இவர் குரானை படிக்காமல் இருந்துவிடுவாரா

4. குஷ்பு : குஷ்பு மேல் ஒரு மறைமுக பத்துவா விட்டுள்ளார். குஷ்பு முன்னாள் முஸ்லிமாம். குஷ்பு முன்னாள் முஸ்லிம் என அறிவித்துள்ளாரா? அவர் ஒரு இந்துவை மணந்து வாழ்கிறார். இதில் என்ன தவறு குஷ்பு முன்னாள் முஸ்லிம் என்று இவரே ஊகித்து இவரை உயிருடன் விட்டு வைத்திருக்கும் முஸ்லிம்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள் என சொல்வது போல் உள்ளது இவரது பதில்.

5. தினமலரின் ஆன்மிக மலர் : எத்தனை ஆயிரம் பேர் இந்த ஆன்மிக மலரை படித்து மன அமைதி பெருகின்றனர். அத்தகைய ஆன்மிக மலரை கிண்டல் அடிக்கும் தொனியில் இவர் எழுதியுள்ளார். இவர் எஜமான அரேபியரைப் பற்றி உண்மைகள் சொன்னாலே இவர் மனம்புண்படுமே இந்த ஆன்மிக மலரை படிப்பவர்களின் மனது என்ன பாடுபடும் என்பதை சிறிதே யோசித்தாரா நல்லடியார்?

அரேபியரை போல் எக்காளமும் ஏகாதிப்பத்தியமும் இல்லாமல் சரித்திர ஆதாரங்களை வைத்து சுன்னி-ஷியா மக்கள் சண்டையே இடுவதில்லை என்ற “உண்மை” யை சொல்லியிருந்தால் இவரின் நம்பகத்தன்மை அதிகரித்திருக்கும். ஆனால் என்ன செய்வது இவர்கள் சுயமாக சிந்திப்பதை நிறுத்தி நூற்றாண்டுகள் பதினாலு ஓடிவிட்டதல்லவா?


calgarysiva@gmail.com

http://sivacalgary.blogspot.com

Series Navigation

கால்கரி சிவா

கால்கரி சிவா