நீ ஏன்…

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

பா.சத்தியமோகன்


ஆறாத புண்ணொன்று
உள் நெஞ்சில் கூவுகையில்
ஏன் இன்னும் உன் மருந்தை
வெளிப்புறமே தடவுகிறாய் ?
இழப்பின் வெற்றிடம் ஓர்
அருவமான சிங்கமென
தாவித்தாவி வீழ்த்துகையில்
வெளிப்புறம் ஏன் காவலிட்டாய் ?
‘யாவரும் நல்லோராக மாறலியே ‘
எனுன் ஏக்கத்தை மீண்டும் மீண்டும்
உனை ஏன் கடிக்க விட்டாய் ?
கிடைத்ததுதான் சிறப்பு நடப்பதுதான் வாழ்வு
எனும் சங்கதி புரியாமல்
நடுவானில் நீ ஏனோ பம்பரம்விட்டாய் !
————————————————————
cdl_lavi@sancharnet.in

Series Navigation