நீளப் போகும் பாதைகள்

This entry is part [part not set] of 52 in the series 20040108_Issue

திலகபாமா, சிவகாசி


எங்கே அடி எங்கே முடி

என்றறியா பாதைகள் நீளப் போகின்றன

நான் தொடங்கிய இடத்தில்

தொடங்கியதாகவும்

இடை வெட்டிய இடத்தில் முடிந்ததாகவும்

காண்பித்தபடி

இன்னும் நீளப் போகின்றன

வரை படங்கள்

தீர்மானித்த திருப்பங்கள்

நேரச் சந்திக்கும் போது

எப்போதும்

எதிர்பாரதவையாகவே இருந்து இடுகின்றன

திடுக்கிடல்களின் அதிர்ச்ச்ி நீங்குமுன்

அடுத்த திருப்பம் வந்து விடுகின்றன

போகுமிடம் வந்த பின்பும்

முடிவடையாத பாதைகள்

கால்களை கிழிக்கும்

சரளைக் கற்களுக்கிடையில்

ஓரத்து தங்க அரளிகளோடும்

தத்தி தாவி கொத்தித் இரை

தேடும் மைனாக்களோடும்

எதிர் காலங்களை நோக்கி

விரைகின்ற காலங்களில்

கண்களிலிருந்து சென்று மறையும்

நிகழ் காலங்கள்

புற்றேறிய மைல் கற்களை

நம்பாமலும்

காற்றுக்கும் மழைக்கும்

பாதை மாறியிருக்காது வழ்ிகாட்டிகல்

என்கின்ற நம்பிக்கையோடும்

போகின்றன பாதங்கள்

—————————————-
mathibama@yahoo.com

Series Navigation