நிகழ்கால குறிப்புகள் – மே 2008 -1

This entry is part [part not set] of 40 in the series 20080522_Issue

ரவி ஸ்ரீநிவாஸ்


நிகழ்கால குறிப்புகள் – மே 2008

1) அரசியல் கைதிகள்-பினாயக் சென்-அ.மார்க்ஸ்: ஒரு எச்சரிக்கைக் குறிப்பு

மருத்துவர் பினாயக் சென்னை விடுதலைச் செய்யக் கோரி மனி உரிமை ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர். நோபல் பரிசு பெற்றவர்கள் பலர் உட்பட பல்வேறு தரப்பிலிருந்து அவர் விடுதலைச் செய்யப் பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. பினாயக் சென் வன்முறைக்கு ஆதரவாக இருந்தவர் அல்ல. அவர் மருத்துவர், மனித உரிமை ஆர்வலர் என்ற முறையில் செயல்பட்டவை அனைத்தும் நியாயமானவை. உச்சநீதி மன்றம் டிசம்பர் 10ம் தேதி அவரது பிணை மனுவை நிராகரித்தது ஒரு துரதிருஷ்டம். இப்போது அஜய் என்பவரையும் கைது செய்துள்ளார், சல்வா ஜுடும் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அது குறித்த வழக்கொன்றும் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

மே மாத தீராநதியில் அ.மார்க்ஸ் தன் கட்டுரையில் சிலவற்றை முன் வைத்துள்ளார். பினாயக் சென்னின் கைது, வழக்கு குறித்து எழுதியுள்ள அவர் இந்தியாவில் அரசியல் கைதிகள் என்பது குறித்தும் எழுதியிருக்கிறார். அக்கட்டுரையில் தமிழ் நாட்டில் 166 பேர் அரசியல் கைதிகளாக உள்ளதாக குறிப்பிடுகிறார். அவர்களில் எத்தனை பேர் தண்டனைக் கைதிகள், எத்தனை பேர் விசாரணை கைதிகள் என்பதை அவர் தெரிவிக்கவில்லை. அவர் எழுதியிருப்பதில் பல சர்ச்சைக்குரியவை. எனினும் இந்தக் குறிப்பில் நான் ஒரு சிலவற்றையே விவாதிக்க விரும்புகிறேன். அவர் அரசியல் கைதிகள் என்று வகைப்படுத்தியிருக்கும் முஸ்லீம்களில் எத்தனை பேர் என்னென்ன குற்றச்சாட்டுகளின் கீழ் சிறையிலிருக்கிறார்கள், எத்தனை பேர் நீதிமன்றங்களால் தண்டனை தரப்பட்டவர்கள் என்பதை அவர் குறிப்பிடவில்லை. அரசியல் கைதிகள் குறித்த அவர் வரையரை என்ன என்பதையும் அவர் குறிப்பிடவில்லை.

சர்வதேச மன்னிப்பு இயக்கம் வன்முறையை ஆதரிப்போர் அல்லது வன்முறையில் ஈடுபட்டோரை அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையின் கீழ் கொண்டு வருவதில்லை. பொதுவாக தங்கள் அரசியல்/கோட்பாடு/நிலைப்பாடுகளுக்காக, மத நம்பிக்கைகளுக்காக சிறையிலிடப்பட்டோரை அரசியல் கைதிகள் என்று கொள்ளலாம். இயக்கங்களும், அரசுகளும் எப்படி யாரை அரசியல் கைதிகளாக வகைப்படுத்துகின்றன என்பதையும் பார்க்க வேண்டும். இயக்கங்களை பொறுத்த வரை ‘விடுதலைப் போருக்காக’ செயல்பட்டவர்கள் அரசியல் கைதிகளாக இருக்கலாம், ஆனால் சட்டத்தின் முன் அவர்கள் செய்தது குற்றமாக அறிவிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கலாம். தன்னுடைய வரையரை என்ன என்பதை அ.மார்கஸ் கூறாவிட்டாலும் அவர் குறிப்பிடும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான மாநாட்டுக் குழு தன்னுடைய பார்வையில் யார் யார் அரசியல் கைதிகள் என்பதைத் தெரிவித்துள்ளது. அகில இந்திய மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையின் கடைசி பத்தி கூறுகிறது

“The inaugural conference on political prisoners is a historic and definite step in this direction. Memories of the days of emergency revisit us as a cold reminder. This brings back memories of the days of the anti-colonial struggle, of the valiant resistance of Bahadur Shah against the East India Company and the attendant hanging to death of thousands of Muslims belonging to the slaughter community. It enlivens the spirit of the heroic martyrdom of Bhagat Singh, Rajguru, Sukhdev and Ashfaqullah; of Bhoomaiah and Kishta Goud in Telangana in the 1960s; the memory of Maqbool Bhat being shown the gallows in the 1980s. ”

http://sabrang.com/cc/archive/2008/april08/campaign.html

அந்த முழு அறிக்கையையும் படித்தால் அவர்கள் யார் யாருக்காக குரல் கொடுக்கிறார்கள், யார் யாரை, எந்தெந்த போராட்டங்களை ஆதரிக்கிறார்கள் என்பது தெளிவாகும். இந்தியாவில் லட்சக்கணக்கில் அரசியல் கைதிகள் இருப்பதாக கூறுபவர்கள் பினாயக் சென்னையும், குணங்குடி ஹனீபாவையும்,முகமது அப்சலையும் ஒரே பட்டியலில் சேர்க்கிறார்கள். இதில் உள்ள அரசியல் என்ன? எந்த அடிப்படையில் பினாயக் சென்னும், பொழிலனும், பேரறிவாளனும், முகமது அப்சலும் அரசியல் கைதிகள் எனற ஒரே வகையில் அடங்குவர். மேலும் பகத் சிங்கையும், மக்பூல் பட்டையும் எப்படி ஒரே மாதிரியானவர்கள் என்று கருத முடியும். மக்பூல் பட் JKLF அமைப்பினை உருவாக்கியவர். அவர் தூக்கிலிடப்பட்டார். அவர் செய்தவையும், பகத்சிங் செய்தவையும் ஒரே போன்றவையா இல்லை ஒரே மாதிரியான குறிக்கோள்களுக்காக அவர்கள் செயல்பட்டார்களா. நிச்சயமாக இல்லை.

சுருக்கமாகச் சொன்னால் அரசியல் கைதிகளை ஆதரிப்பது என்ற பெயரில் இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் எதிராக உள்ள இயக்கங்களை ஆதரிப்பது, அவற்றின் தலைவர்கள், ஆதரவாளர்களை விடுதலைச் செய்யக் கோருவது இந்த மாநாட்டின் நோக்கம். அதன் தொடர்புடையவர்கள் எழுத்தாளர்களாக இருக்கலாம். அதனாலேயே அதன் நோக்கங்கள் ஏற்கத்தக்கவையாகிவிடமாட்டா. இந்த ‘உயரிய’ நோக்கங்களை அ.,மார்க்ஸ் நேரடியாகவே எழுதி அதையெல்லாம் ஆதரிக்கிறேன் என்று எழுதியிருக்கலாம். ஆனால் அ.மார்கஸ் எதைச் சொல்லவேண்டுமா அதைச் சொல்வதில்லை. எதை ஆதரிப்பதாகச் சொன்னால் வாசகர்கள் ஏமாந்து போவார்களோ அதைச் சொல்கிறார். பினாயக் சென்னை முன்வைத்து அ.மார்கஸ் யார் சார்பாக வாதாடுகிறார் என்பது இப்போது தெளிவாகிறதா?.பினாயக் சென் குறித்த ஆதரவு கண் துடைப்பிற்காக, உண்மையான ஆதரவு இந்திய விரோத,வன்முறைச் சக்திகளுக்கு. இவர்கள் உதாரணம் காட்டும் மக்பூல் பட் ஒருவர் போதும், இவர்களின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்ள. கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு, அரசியல் கைதிகள் விடுதலை கோரிக்கை என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்ட மக்பூல் பட்களை முன்னிறுத்துவோருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது வேறு. கருத்து சுதந்திரத்திற்கு இன்று எதிராக இருப்பது அரசு மட்டும்தானா. இந்தியாவிற்குள் ருஷ்டி வரக்கூடாது, தஸ்லீமா இந்தியாவிற்குள் இருக்கக்கூடாது என்று கூறுவது கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவான நிலைப்பாடா. கருத்து சுதந்திரத்தில் நம்பிக்கையற்ற தமுமுக என்ற அமைப்பினை ஆதரித்துக் கொண்டு, அதனுடன் கூட்டாக செயல்படும் அ.மார்க்ஸ் யாருடைய கருத்து சுதந்திரத்திற்காக
யாரை குரல் கொடுக்கச் சொல்கிறார்.

அ.மார்க்ஸின் எழுத்துக்களை, செயல்பாடுகளை பற்றி இங்கு விரிவாக விமர்சிக்கப்ப் போவதில்லை. அவரது எழுத்துக்களை படித்து ஏமாற வேண்டாம். அ.மார்க்ஸ் மனித உரிமை, கருத்து சுதந்திரம் போன்றவை குறித்து பேசினாலும், எழுதினாலும் அதில் உள்ள (அறிவிக்கப்படாத) உள்நோக்கங்களை புரிந்து கொள்ள வேண்டும். இன்று தேசிய விரோத, மானுட விரோத சக்திகள் பல்வேறு பெயர்களில், பல்வேறு நோக்கங்களை முன் வைத்து செயல்படுகின்றன. அவை முன் வைப்பது ஒன்று, ஆனால் உண்மையான நோக்கங்கள் வேறு. அதே போல்தான் அ.மார்க்ஸின் எழுத்துக்களும்,செயல்பாடுகளும். இதைப் புரிந்து கொள்ளாதவர்கள் ஒன்று அரசியல் அப்பாவிகளாக இருப்பார்கள் அல்லது ‘எல்லாம் தெரிந்த’ மூடர்களாக இருப்பார்கள்.

நாகார்ஜுனன் தன் வலைப்பதிவில் அரசியல் கைதிகள் குறித்து எழுதியிருக்கிறார். நாகார்ஜுனன் எழுதியுள்ளது ஒரு பொதுவான புரிதலைத் தருகிறது. அரசியல் கைதிகள் குறித்த வரையரை, சட்ட,மனித உரிமை பரிமாணங்கள் குறித்து விவாதிக்க பல உள்ளன.

2)S.N. நாகராஜன் – கீழை மார்க்ஸியம்- ஆங்கில நூல்

S.N.நாகராஜனின் ஆங்கில கட்டுரைகள் நூலாக தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளன.
Eastern Marxism and Other Essays: S. N. Nagarajan; Odyssey, Harrington House, Peyton Road, Ootacamund-643001. Rs. 325 [Editors- Jacob, T. G; Bandhu, P: ]

Contents

Editor’s Note 4
Foreword by V.K. Natraj 7
Introduction 10

Part I – On Marxism
1. What it is to be a Marxist and Why Marx Failed 15
2- Living Marx 21
3. Marx, Lenin, Stalin and Mao 35
4. Working Class and Freedom 42
5. Crisis in the Socialist (Communist) Movement 45
6. Some Misconceptions 56
7. Marxism in the Period of Neocolonialism 60

Part II – On Eastern Marxism
1. Marxism and the Indian Tradition 64
2. An Unpopular or Eastern Marxist Approach 67
3. The Other Voice and the Other Way 79
Addendum: Answers to Denis Hanusek 119
4. Antbodaja—Eastern Marxist 124
5. Towards a New Programme 131

Part III — On Neo-colonialism
1. Agriculture, a Test Case of Neo-colonialism 140
2. Green revolution or Neo-colonial War 150
3. Problem of Nationalism 155
4. Evaluation of the Modern West 157

Part IV — Marxism and Science and Technology
1. Marxism and Science 160
2. The Dialectics of Tools 164
3. Eccentric Ideas 174
4. Intervention October Revolutioncits Impact 178
5. Modern Science, Marxism and Human
Freedom—An Evaluation 181
6. Scientific Temper 196

Glossary of non-English Words and Phrases 202
Biographical Notes 209

இதில் உள்ள கட்டுரை ஒன்றை பிரான்டியர் அண்மையில் வெளியிட்டுள்ளது, அது இங்கே
www.geocities.com/frontierweekly/recent-issues/vol-40-39/science-40-39.pdf
(ஆம், பிரான்டியர் இணையத்தில், பழைய இதழ்களும் உள்ளன ).

நாகராஜனின் வலைப்பதிவு

http://theeasternvoice.blogspot.com/

இணையத்தில் தேடியதில் பெங்களுரில் அனந்தமூர்த்தி இதை ஒரு நிகழச்சியில் வெளியிட்டிருப்பதாக தெரிகிறது. நாகராஜனின் கட்டுரைகள் ஆங்கிலத்தில் நூல் வடிவில் வெளியாவது மகிழ்ச்சி தருகிறது. ஒரு காலத்தில் அவருடன் பழகியிருக்கிறேன், தொடர்பும் இருந்தது. இப்போது தொடர்பில்லை. தமிழில் அவர் கட்டுரைகள் நூற்களாக வெளியாகியுள்ளன. ஆங்கில நூலை நான் பார்க்க வாய்ப்பில்லை. நாகராஜனின் நூலுக்கு எத்தகைய மதிப்புரைகள் வெளியாகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அகில இந்திய அளவில் நாகராஜன் அறியப்பட்டவர் என்பதால் இந்நூல் நல்ல கவனம் பெற வாய்ப்பிருக்கிறது. ஆங்கிலத்தில் நூல் வெளியாகியிருப்பதால் அஷிஸ் நந்தி, சைலேன் கோஷ் போன்ற நண்பர்கள் தங்கள் எழுத்துக்களில் அவர் கருத்துக்களை மேற்கோள் காட்ட/சுட்ட முடியும். கோவை ஞானிதான் நாகராஜனின் கட்டுரைகளை தமிழில் முதலில் வெளியிட்டார். இன்னும் சொல்லப் போனால் அவர் முயற்சி செய்திராவிட்டால் அவை வெளியாவது சில பத்தாண்டுகளேனும் தள்ளிப் போயிருக்கும். நாகராஜனை எழுத வைத்து கட்டுரை வாங்குவது என்பது எளிதல்ல. அதைச் செய்யும் திறனுள்ளவர்கள் வெகு சிலரே, அதில் ஞானி முதன்மையானவர். ஒரு காலத்தில் நாகராஜன், ராஜதுரை,ஞானி மூவரும் பரிமாணம் என்ற இதழில் எழுதி வந்தனர். இன்று ராஜதுரை வேறு திசையில் பயணித்து விட்டார். வரட்டு ஸ்டாலினியத்தை அன்று தீவிரமாக எதிர்த்தவர் பின்னர் வரட்டு பெரியாரியவாதியானது ஒரு பெரிய முரண்பாடுதான்.

நாகராஜனின் கட்டுரைகள் கிட்டதட்ட பத்தாண்டுகள் முன்பு ஒரு தொகுப்பாக எனக்கு கிடைத்தன. ஆங்கிலத்தில் நூலாக கொண்டு வரும் திட்டம் அப்போதே இருந்தது. அவற்றைப் படித்து விட்டு பல மாற்றங்களை பரிந்துரைத்தேன். மூல நூல்களில் நாகராஜன் மேற்கோள் காட்டுபவை எங்கு இடம் பெற்றுள்ளன என்பதை தர வேண்டும், பல கருத்துக்களை விரிவாக எழுத வேண்டும், ஆங்கில வாசகர்களை மனதில் கொண்டு நடையிலும், உள்ளடகத்தில் மாற்றம் வேண்டும் என்பவை அவற்றுள் முக்கியமானவை. நாகராஜன் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை. லெனின் எந்த நூலில் இதை எழுதியிருக்கிறார் என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும், பக்கம், பதிப்பு விபரங்கள் வேண்டும். ஆனால் நாகராஜனுக்கு இதையெல்லாம் தரும்
பொறுமை இல்லை. ஒரு சில நாட்கள் தங்கினால் விவாதித்து கட்டுரைகளை செம்மைப்படுத்தலாம் என்று சொன்னாலும் ஒன்றும் நடக்கவில்லை. அவர் எப்போது எங்கிருப்பார், எங்கே பயணம் மேற்கொள்வார் என்பது அவருக்கே தெரியாது :). பின்னர் அத்தொகுப்பு என் கையை விட்டு சென்றுவிட்டது.

இப்போது வெளியாகியுள்ள நூலில் இந்தப் பிரச்சினைகளை எப்படி கையாண்டிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் எனக்கு நாகராஜனின் கருத்துக்கள் ஆர்வமூட்டக் கூடியவையாக இருந்தன இன்று இல்லை. ஒரு கட்டத்தில் அவற்றின் போதாமைகள் எனக்கு தெளிவான பின் அவற்றின் மீதான ஆர்வம் குறைந்து விட்டது. நாகராஜனிடம் புதிய கருத்துக்களை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த நூலில் அவர் முன்வைத்துள்ள கருத்துகள் மீதான விவாதம் நடைபெறவும், அவை முன்னெடுத்துச் செல்லப்பட்டு மாற்றமும், கவனமும் பெறவும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த நூல் மூலம் நாகராஜனின் கருத்துக்களை மேற்கை சென்றடைய வாய்ப்பிருக்கிறது, நாகராஜன் மாஒ வின் கருத்துக்களை, கலாச்சாரப் புரட்சியை ஆதரிப்பவர். ஆனால் 1980களிலேயே மாஒவின் பாட்டாளி வர்க்க அறிவியல் குறித்து விமர்சனங்கள் வந்துவிட்டன. இன்று இன்னும் புதிய கருத்துக்கள் வெளியாகியுள்ளன (உ-ம் On the Appropriate Use of Rose-Colored Glasses : Reflections on Science in Socialist China -Sigrid Schmalzer-Isis, 2007, 98: 571–583). நாகராஜன் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். இன்னும் தொடர்ந்து எழுத வேண்டும். அப்படியே எழுதினாலும் அதை உள்வாங்கி விவாதிக்க எத்தனை வாசகர்கள் இருக்கிறார்கள். நானறிந்தவரை தமிழ்ச் சூழலில் மார்க்ஸியம் அறிவியல் தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் குறித்த விவாதங்கள் மிகவும் குறைவு. இவை குறித்து மன் திலி ரிவியு, நியு லெப்ட் ரிவியு போன்றவற்றில் வெளியான கருத்துக்கள்/கட்டுரைகள் கூட இங்கு அறிமுகம் ஆகவில்லை. இந்நிலையில் Rethinking Marxism, Science and Society, Science as Culture, Capitalism, Nature and Socialism, Organisation & Environment போன்றவற்றில் வெளியாகும் கட்டுரைகள், லைசென்கோ குறித்து அண்மைக்கால ஆய்வுகளோ அல்லது சோவியத் அறிவியல், சீன அறிவியல் குறித்த புதிய பார்வைகளோ அறிமுகம் ஆக வாய்ப்பே இல்லை என்றே தோன்றுகிறது. இது வருந்ததக்க நிலை. அண்மையில் ‘Marx/Engels, the Heat Death of the Universe Hypothesis, and the Origins of Ecological Economics’ John Bellamy Foster and Paul Burkett என்ற கட்டுரையை, தரவிறக்கினேன். இது போன்ற கட்டுரைகளை நான் இன்று தேடிப் பிடித்து படிக்க ஒரு முக்கியமான காரணம் நாகராஜன். நன்றி S.N. நாகராஜன்.

3) 27% இட ஒதுக்கீடும் உச்சநீதிமன்றமும்- மண்டல் 3 மண்டல் 4

எதிர்பார்த்தது போல், கொல்கத்தா உயர்நீதிமன்றம் கொடுத்திருந்த இடைக்காலத் தடையை உச்சநீதிமன்றம் நீக்கியிருக்கிறது. மேலும் மும்பை,கொல்கத்தா, புது தில்லி உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளை உச்சநீதி மன்றத்திற்கு ஏன் மாற்றக் கூடாது என்று அந்தந்த நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்த மனுதாரார்களுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டிருக்கிறது. இந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றப்படும் என்றே தோன்றுகிறது. இங்கு சர்ச்சை எழுந்திருப்பது உச்சநீதி மன்றத் தீர்ப்பினை எப்படி புரிந்து கொண்டு நடைமுறைப்படுத்துவது குறித்தது. இந்த வழக்குகளை உச்சநீதி மன்றம் விசாரிப்பதே முறையாகும்.கடந்த மாதம் 10ம் தேதி அசோகா தாக்கர் வழக்கில் கொடுக்கப்பட்ட தீர்ப்பினை எதிர்த்து இன்னும் யாரும் மேல் முறையீடு செய்யப்படவில்லை. அவ்வாறு செய்யப்பட்டாலும் இடைக்காலத் தடை வழங்கப்பட வாய்ப்பில்லை. அந்த மேல்முறையீட்டினை 7 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க வாய்ப்பிருக்கிறது. இப்போது தீர்ப்பினை எப்படி பொருள் கொள்வது, பட்டதாரிகள் கிரிமி லேயரில் வருவார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 5 நீதிபதிகள் 4 தீர்ப்புகளை தந்துள்ளனர். தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் ஒரு தீர்ப்பு, நீதிபதி ரவீந்தரன் ஒரு தீர்ப்பு, நீதிபதி தல்வீர் பண்டாரி ஒரு தீர்ப்பு, நீதிபதிகள் அர்ஜித் பசாயத், தாக்கர் ஒரு தீர்ப்பு என நான்கு தீர்ப்புகள் தரப்பட்டுள்ளன. இவற்றை எப்படி பொருள் கொள்வது என்பதுதான் பிரச்சினை. சட்டதிருத்தம் செல்லும், இட ஒதுக்கீடு தர முடியும் என்று ஒருமித்து தீர்ப்பு தந்தாலும் கிரிமி லேயர் குறித்து இந்த தீர்ப்புகள் கூறுவதை எப்படிப் பொருள் கொள்வது, இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மத்திய அரசின் உத்தரவு செல்லுமா என்பதுதான் உயர்நீதி மன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகளின் முக்கியமான கேள்விகள். மண்டல் கமிஷன் அறிக்கையை அமுல் செய்ய வகை செய்யும் ஆணை செல்லுமா என்ற வழக்கு மண்டல் 1 (இந்த்ரா சஹானி Vs. Union of India) எனவும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில்/ நிதி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு குறித்த வழக்கு மண்டல் 2 என்றும் அழைக்கப்படுகின்றன. இப்போது தொடரபட்டுள்ள வழக்குகளை மண்டல் 3 என்று அழைக்கலாம். தலைமை நீதிபதி கொடுத்த விளக்கம் காரணமாகவும், இடைக்காலத்
தடை நீக்கப்பட்டதாலும் இந்த கல்வி ஆண்டில் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படும். தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு நிதி உதவி பெறாவிட்டாலும் அவையும் இட ஒதுக்கீடு தர வேண்டும் என்று சட்டம் கொண்டுவரப்பட்டால் அதை எதிர்த்து வழக்குகள் தொடரப்படும். அது மண்டல் 4 என்று அழைக்கப்படலாம். இந்த இட ஒதுக்கீட்டு சிக்கல் எளிதில் தீர்கிற சிக்கல் இல்லை. சமூக நீதி என்ற பெயரில் சமத்துவத்தை நிராகரிக்கும் ஆதிக்க சக்திகள் எந்த அளவு முடியுமோ அந்த அளவிற்கு இட ஒதுக்கீட்டினை விரிவாக்கவே விரும்புவர். எனவே இந்த வழக்குகளை சமத்துவம், சம வாய்ப்பு, பாரபட்சமின்மை குறித்த வழக்குகளாக கருதலாம்.

4) இட ஒதுக்கீடுகள் தொடரும் சர்ச்சைகள்

ஆந்திராவில் முஸ்லீம்களுக்கான இட ஒதுக்கீடு, தலித்களில் உள் ஒதுக்கீடு, கிறித்துவ தலித்கள், முஸ்லீம்
தலித்களை தலித்களாக கருதி இட ஒதுக்கீடு உட்பட தலித்கள் பெறும் சலுகைகள், உரிமைகளை வழங்குவது
உட்பட பல சர்ச்சைகள் தொடர்கின்றன. இந்தச் சர்ச்சைகள் உடனடியாக முடிவிற்கு வரும் என்று கூற
முடியாது. தலித்களில் உள் இடஒதுக்கீட்டினை பஸ்வானும்,மாயாவதியும் எதிர்க்கிறார்கள். மக்கள் தொகையில் தலித்களின் விகிதம் அதிகரித்துள்ளதால் 15% இட ஒதுக்கீட்டினை அதிகரிக்கக் கோரிக்கை
எழுப்பபட்டது. மத்திய அரசு இதை ஏற்கவில்லை. ஆந்திராவில் நீதிபதி உஷா மெஹ்ரா கமிஷன்
உள் இட ஒதுக்கீட்டினை பரிந்துரைத்துள்ளது. இதை மடிகாக்கள் வரவேற்றுள்ளனர், மலாக்கள்
எதிர்க்கிறார்கள். எளிதில் தீர்வுகாண முடியாத சிக்கல் இது. உச்சநீதி மன்ற தீர்ப்பு (சின்னையா
வழக்கு) உள் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருக்கிறது. உஷா மேஹ்றாவும் சில பரிந்துரைகளை
முன் வைத்துள்ளார். உள் இட ஒதுக்கீடு சிக்கலின்றி நிறைவேற மத்திய அரசு ஒத்துழைக்க
வேண்டும், அரசியல் சட்டத் திருத்தமும் தேவைப்படலாம். இது இப்போது சாத்தியமில்லை.
ஆந்திராவில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு குறித்து திண்ணையில் எழுதியிருக்கிறேன். ஆந்திர
அரசின் முயற்சிகளுக்கு உயர்நீதிமன்றம் பிறப்பித்த ஆணைகள் தடையாக உள்ளன. இப்போது
உச்சநீதி மன்றம் கலந்தாய்வு நடத்தலாம், சேர்க்கை கூடாது என்று கூறியிருக்கிறது.

5) காந்தி, காந்தியம்

காந்தி, காந்தியம் குறித்து நூல்கள், கட்டுரைகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இவற்றை தொடர்ந்து கவனித்து வருவதும், படிப்பதும் அதில் தீவிர அக்கறைக் கொண்டவர்களுக்கே சாத்தியம். இருப்பினும் இணையம் மூலம் ஒரளவாவது தெரிந்து கொள்ள முடிகிறது.Gandhi Marg இதழில் கட்டுரைகள் வெளியாகின்றன.ஆனால் நான் படித்த அளவில் அதில் வெளியாகும் கட்டுரைகளில் பெரும்பான்மையானவை சாதாரணமானவை. ஜர்னல்களில் வெளியாகும் பெரும்பாலான கட்டுரைகளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ள முடியாது. பல பல்கலைக்ழகங்களில் இப்போது ஆய்வேடுகளை தரவிறக்கிக்கொள்ள வசதி செய்திருக்கிறார்கள். இதன் மூலம் காந்தி/காந்தியம் குறித்து எத்தகைய ஆய்வுகள் செய்யப்படுகின்றன என்பதை ஒரளவேனும் அறிய முடிகிறது.

கடந்த சில ஆண்டுகளில் வெளியான காந்தி, காந்தியம் குறித்த நூல்களை குறித்து திரிதிப் ஷ்ருட் செமினார் ஜனவரி 2008 இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். காந்தியின் இன்றைய பொருத்தப்பாடு குறித்த கேள்விகளுக்கும் விடையளிக்கும் முயற்சியாக இதைக் காணலாம். அவர் எழுதுகிறார்

The real challenge for us is to re-imagine constructive programmes for our times, just as we re-imagine a personal Gandhi.
This would require that we give less primacy to the political realm, to free many categories like pain, suffering, loss, justice, forgiveness and even truth from the tyranny of the political. This might possibly allow us to think about our present equally through non-political metaphors. It might also unburden the political realm, if not free it from the desire to provide all answers. This could be our Lokniti.

காந்தியும் பின் நவீனத்துவமும் குறித்த ஒரு கட்டுரை இது.
Problem with Postmodern Gandhi-Upasana Pandey
http://www.mainstreamweekly.net/article341.html

காஷ்யப் ரய்னாவின் கட்டுரையை இணையத்தில் வேறு எதற்காகவோ தேடும் போது கண்டறிந்தேன்.
The Subversion of the Colonial System of Humiliation: A case study of the Gandhian Strategy
Kashyap, Rina (2005)
http://www.humiliationstudies.org/documents/KashyapNY05meetingRT3.pdf

காந்தி குறித்து அஷிஸ் நந்தி எழுதிய சிறிய,சுவாரசியமான கட்டுரை இது. பழசானாலும் படிக்கலாம்.
தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டிய கட்டுரையும் கூட.
Gandhi after Gandhi after Gandhi
www.littlemag.com/nandy.htm

அண்மையில் EPWவில் நீரா சந்தோக் Quest for Justice: The Gandhian Perspective
என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரை இது.
http://epw.org.in/epw//uploads/articles/12213.pdf

6) இணையம், இணைய அரசியல் குறித்து புருஸ் ஸ்டெர்லிங்

புருஸ் ஸ்டெர்லிங்குடனான ஒரு செவ்வியை இங்கே படிக்கலாம்.
http://www.kestudies.org/ojs/index.php/kes/article/view/36/47

தொழில்நுட்பம் குறித்து அதீத எதிர்பார்ப்புகள், நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு இந்த செவ்வி சிலவற்றை தெளிவுபடுத்தும். மேற்கோள் காட்ட வசதியான பல வாக்கியங்கள் இச்செவ்வியில் இருக்கின்றன :). பதிப்புரிமை, அறிவுசார் சொத்துரிமை, இணையம் குறித்து இச்செவ்வியில் விவாதம் இருந்தாலும் இன்னும் பலவற்றை அது தொடவில்லை, இந்தச் சர்ச்சையில் பல நிலைப்பாடுகள் உள்ளன, அவை விவாதிக்கப்படவில்லை. பல சமயங்களில் ஒருவர் நுகர்வோராக இருந்தாலும், சில சமயங்களில் படைப்பாளியாக பதிப்புரிமை குறித்து அக்கறை காட்ட வேண்டிவருவது தவிர்க்க இயலாதது. தொழில் நுட்பம் மூலம் பிரதி எடுத்து பரப்பல்/பகிர்தல் மிகவும் எளிதான, செலவு குறைவான ஒன்றாக மாறும் போது எழும் பிரச்சினைகள் சட்டம் சார்ந்தவை மட்டுமல்ல. இணையம் ஒரு திறந்த நூலகமாக கருதப்பட்டாலும் அதில் உள்ளவற்றை தகவமைப்பதில்,பயன்படுத்துவதில், சான்று காட்டுவதில் சிக்கல்கள் இருக்கின்றன. ஸ்டெர்லிங் இவற்றையும் தொட்டுப் பேசுகிறார். ஆர்வமுட்டக்கூடிய செவ்வி இது. லாரன்ஸ் லெசிக் போன்றவர்கள் இதில் எழுப்பட்டுள்ள பல கேள்விகளை தங்கள் எழுத்துக்களில் அலசியிருக்கிறார்கள். வேறொரு கோணத்தில் மார்க் போஸ்டர், மானுவல் காஸ்டெல்ஸ் உட்பட பலர் இணைய அரசியலை விரிவாக ஆராய்ந்திருக்கிறார்கள். இணையத்தினை மத அமைப்புகள், புலம் பெயர்ந்தோர் பயன் படுத்துவது, இணையமும் அடையாள அரசியலும், இணையம் பொதுக்களனா – இப்படி இணைய அரசியலின் பல்வேறு பரிமாணங்கள் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பிறிதொரு சந்தர்ப்பத்தில் இவற்றில் சிலவற்றை தொட்டுச் செல்ல முயல்வோம்.சேர்த்தே இங்கு குறிப்பிடுகிறேன்) ஆதரிக்கிறேன். அதற்காக அவர்களின் அனைத்து நிலைப்பாடுகளையும் நான் ஏற்கிறேன் என்று அர்த்தமில்லை. அறிவு ஜீவிகள் என்று சொல்லப்படுபவர்கள் பலர் இந்தப் பிரச்சினையில் எடுத்த நிலைப்பாடுகளில் வெளிப்பட்டது அவர்களது இந்து எதிர்ப்பு மனோபாவமே. இதில் ரோமிலாத் தாப்பரின் கட்டுரையை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். எனக்கு மிகுந்த எரிச்சலைத் தந்த கட்டுரை அது. மேற்கில் இருப்பது வரலாறு, கிழக்கில் இருப்பது புராணம் என்ற கண்ணோட்டத்தின் இன்னொரு வடிவம்தான் அதன் மையக்கருத்து. தமிழ்நாட்டில் கேட்கவே வேண்டாம். எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்றவர்களுக்கு தங்களது இந்து,பார்பன விரோதத்தினை வெளிக்காட்ட இது இன்னொரு வாய்ப்பாக அமைந்தது. இந்த திட்டத்தால் பாதிப்புறுவது இந்து அல்லாதோரின் வழிபாட்டிற்குரியதாக/மரியாதைக்குரியதாக இருந்திருந்தால் அவர்கள் கருத்து வேறுவிதமாக இருந்திருக்கும். அப்போது அதை சிதைப்பது மதச்சார்ப்பின்மைக்கு விரோதமான ஒன்றாக, சிறுபான்மையினர்க்கு எதிரான ஒன்றாக எதிர்க்கப்பட்டிருக்கும். நீதிமன்றத்தில் முன்வைக்கப்படும் வாதங்களையும் கருத்தில் கொண்டு வேறொரு தருணத்தில் விரிவாக எழுதுவோம். திண்ணையில் அரசியல் சட்டமும், மத நம்பிக்கை/உரிமை குறித்து நான் எழுதியிருப்பவற்றை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

Series Navigation

author

ரவி ஸ்ரீநிவாஸ்

ரவி ஸ்ரீநிவாஸ்

Similar Posts