மீனா
நான் விழித்தெழுந்த பெண்
நான் எழுந்துவிட்டேன்; எரிந்த என் குழ்ந்தைகளின் சாம்பல் வழியே புயலாய் ஆனேன்
நான் என் சகோதரனின் குருதிப்புனலிலிருந்து எழுந்துவிட்டேன்
என் நாட்டின் கோபம் எனக்கு சக்தி கொடுத்தது
எனது அழிந்த எரிந்த கிராமங்கள் எதிரியின் மீதுள்ள வெறுப்பாக என்னை நிரப்பின
நான் விழித்தெழுந்த பெண்
நான் என் வழியைக் கண்டுகொண்டேன்; நான் திரும்பி வரமாட்டேன்
நான் அறியாமையின் கதவுகளை மூடிவிட்டேன்
நான் என் தங்கவளையல்களுக்கு விடை கொடுத்துவிட்டேன்
ஓ என் நாட்டவனே, நான் முன்னிருந்தவள் அல்ல
நான் விழித்தெழுந்த பெண்
நான் என் வழியைக் கண்டுகொண்டேன்; நான் திரும்பி வரமாட்டேன்
நான் செருப்பற்ற, அலைந்துதிரியும் வீடற்ற குழந்தைகளை பார்த்திருக்கிறேன்
நான் மருதாணி அணிந்த திருமணப்பெண்கள் மரண உடை தரித்திருப்பதை பார்த்திருக்கிறேன்
நான் சிறைகளின் ராட்சத சுவர்கள் சுதந்திரத்தை தன் பசியடங்காத வயிறுகளில் விழுங்குவதைப் பார்த்திருக்கிறேன்
நான் எதிர்ப்பின் தைர்யத்தின் காவியங்களிலிருந்து மீண்டும் பிறந்திருக்கிறேன்
குருதியின் அலைகளிலும், வெற்றியிலும் இறுதி மூச்சுகளில் பாடப்பட்ட சுதந்திரப்பாடலை கற்றிருக்கிறேன்
என் நாட்டவனே, என் சகோதரனே, என்னை வலிமையற்றவளென்றும், சாதிக்க முடியாதவளென்றும் எண்ணாதே
என் தேசத்தின் விடுதலைக்காக என் சக்தியோடு உன்னுடன் இருக்கிறேன்
ஆயிரக்கணக்கான் விழிப்புற்ற பெண்களின் குரலோடு என் குரலும் இணைகிறது
ஆயிரக்கணக்கான என்னாட்டவர்களின் முஷ்டியோடு என் முஷ்டியும் இணைகிறது
என் தேசத்தின் வழியில் நானும் உன்னோடு இணைகிறேன்
அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைப்பதற்கும் சோகங்களைக் களைவதற்கும்
என் நாட்டவனே, என் சகோதரனே, நான் முன்னிருந்தவள் அல்ல
நான் விழித்தெழுந்த பெண்
நான் என் வழியைக் கண்டுகொண்டேன்; நான் திரும்பி வரமாட்டேன்
***
மீனா ஒரு ஆஃப்கானிய அரசியல் தலைவர். பெண்களின் கூட்டமைப்பாக ஒரு சேவை நிறுவனத்தை துவக்கி அது பின்னர் அரசியல் கட்சியானது. இஸ்லாமியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டார். இவர் துவக்கிய அமைப்பு இன்று ஆஃப்கானிய மக்களிடையே முக்கியமாக பெண்களிடையே சேவை நிறுவனமாகவும், உதவும் நிறுவனமாகவும் இருக்கிறது. இது RAWA என்று அழைக்கப்படுகிறது. இதன் இணையப் பக்கம் http://www.rawa.org
***
I ‘ll never return
Meena
I ‘m the woman who has awoken
I ‘ve arisen and become a tempest through the ashes of my burnt children
I ‘ve arisen from the rivulets of my brother ‘s blood
My nation ‘s wrath has empowered me
My ruined and burnt villages fill me with hatred against the enemy,
I ‘m the woman who has awoken,
I ‘ve found my path and will never return.
I ‘ve opened closed doors of ignorance
I ‘ve said farewell to all golden bracelets
Oh compatriot, I ‘m not what I was
I ‘m the woman who has awoken
I ‘ve found my path and will never return.
I ‘ve seen barefoot, wandering and homeless children
I ‘ve seen henna-handed brides with mourning clothes
I ‘ve seen giant walls of the prisons swallow freedom in their ravenous stomach
I ‘ve been reborn amidst epics of resistance and courage
I ‘ve learned the song of freedom in the last breaths, in the waves of blood and in victory
Oh compatriot, Oh brother, no longer regard me as weak and incapable
With all my strength I ‘m with you on the path of my land ‘s liberation.
My voice has mingled with thousands of arisen women
My fists are clenched with the fists of thousands compatriots
Along with you I ‘ve stepped up to the path of my nation,
To break all these sufferings all these fetters of slavery,
Oh compatriot, Oh brother, I ‘m not what I was
I ‘m the woman who has awoken
I ‘ve found my path and will never return.
- செக்குமாடு (குறுநாவல் கடைசிப்பகுதி)
- அஹிம்சையில் எதிர்ப்பு -1
- இந்த வாரம் இப்படி – சூலை 7, 2001
- நான் திரும்பி வரமாட்டேன்
- தொடர்ச்சியாய் சில தவறுகள்.
- நாட்டு நடப்பு
- நகரத்து மனிதாின் புலம்பல்
- எதிர்நிலைகள்
- எதிர் வினைகள்
- க்ரெக் மக்கா (McCaw) செய்த செல்லுலார் தொலைபேசி புரட்சி
- செவ்வாய்: ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரின் கதை
- நம் எதிர்காலத்தை புரட்சிகரமாக மாற்றும் ஒரு புதிய சில்லு(chip)
- காய்கறி சூப்
- எலும்பு சூப்
- ஜெயமோகனின் ‘கன்னியாகுமாி ‘