நடுமுள்
அபிமன்யு ராஜராஜன்

அந்தப் பக்கம்
சுழல்கிற கோள்களூம்
நகர்கிற சதுரங்களுமாய்
மாற்றி வைத்தன
வாழ்க்கையை!
இந்தப் பக்கம்
ஒன்பது சுற்றுகளும்
பரிகாரங்களுமாய்
ஏற்றி வைத்தன
வாழ்க்கையை!
ஏற்ற இறக்கங்கள்
பாவங்களிலும்
பரிகாரங்களிலும்
எப்படியோ
நடுமுள் தொட
பாவம்…
ஏறி
இறங்கிய
மனிதன் தான்
கட்டங்களுக்கும்
சட்டங்களுக்கும்
நடுவில்….
ஆடிக் கொண்டே…
வாழ்க்கையின்
நடுமுள் மட்டும்
நழுவிக்கொண்டே!