தொடரும் உல்டா.. தமிழ் சினிமாவில்…

This entry is part [part not set] of 51 in the series 20031120_Issue

ராஜ்உ


பிதாமகன் – நந்தவனத்தில் ஒரு ஆண்டி தொடர்பான கட்டுரைக்கு வந்த வாசகர் ஒருவரின் கட்டுரைக்கு சிறு பதிலுடன் இந்த வார இந்தக் கடிதம். நன்றி அவருக்கு.

நிச்சயமாக இந்த தமிழ் சினிமாவின் உல்டா கடிதங்கள், காழ்ப்புண்ர்ச்சி அல்லது வெறுப்பு இல்லாது ஏழுதப்படுகிறது.

காப்பி, தழுவல், உல்டா என பல வடிவங்களில் பிற மொழி படங்களையோ அல்லது தமிழ்க் கதைகளையோ தமிழ் சினிமாவின் இயக்குனர் கூட்டத்தில் சிலர் சுடுகிறார்கள். படைப்பாளிகளின் உரிமையை மதிக்க செய்வதும் , அதற்குண்டான விலையத் தரும் நிலை வர ஒரு சிறு பங்களிப்புமே இக் கடிதங்கள்.

சரி, இந்த மாதம் வந்துள்ள படம், ‘ஜே.ஜே ‘. படம் வரும் முன்னே இது ‘செரின்டிபட்டி ‘ ஆங்கிலப் படத்தின் தழுவல் என திரையுல பிரமுகர் ‘மோகன் பாபு ‘ கொந்தளித்தார். படம் வந்தது. ஆம், செரின்டிபட்டி ‘ படத்தின் மிக மிக பரபரப்பான ‘ரூபாய் ‘ நோட்டில் ஃபோன் நம்பர் எழுதி தரும் கதையமைப்பு அப்படியே வந்துள்ளது.

காப்பியடிக்கவில்லை, ‘just inspiration man.. ‘ எனச் சொல்ல வேண்டும் என்பதற்காக, செரின்டிபட்டியில் காதலன் ரூபாய் நோட்டிலும், காதலி ‘புத்தகத்திலும் ‘ ஃபோன் நம்பர் எழுதுவது போல் வருவதை, இதில் ஒரே ரூபாய் நோட்டில் இருவருமே எழுதுவது போல் வருகிறது.

இது எப்படி இருக்கு. சரி.. இதில் மோகன்பாபு கடுப்பானது ஞாயம்.. அவர், செரின்டிபட்டி யின், உரிமையை துட்டு கொடுத்து வாங்கியுள்ளார். இதில் அவரின் நண்பர் ரசினிகாந்த் ( தமிழிலில் வடமொழி தவிர்த்து பார்த்தேன்.. நல்லாவா இருக்கு ரஜினி பெயர்.. ? ) ‘நான் வேண்டுமானால் ‘ பேசட்டுமா என்றாராம்..!

தொடருவதைப் படித்து பின் ரஜினி வார்த்தைக்கு என்ன மரியாதை கொடுக்கலாம் எனப் பார்க்கலாம்.

நான் ‘ Brewsters Millions ‘ என்ற படம் பார்த்தேன். கதை என்ன தெரியுமா… ? கதாநாயகனின் மாமா ஒரு உயில் எழுதி செத்து விடுவார். உயில்.. ? 300 மில்லியன் சொத்து அவனுக்கு கிடைக்கும். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்.. 30 நாளில் 3 மில்லியனை செலவழிக்க வேண்டும். அதுவும் எப்படி.. ? சொத்து , பொருள் எதுவும் வாங்கக கூடாது… செலவு மட்டும் தான்.. அதும் போக இதை யாருக்கும் சொல்லாமல் இதைச் செயல்படுத்த வேண்டும்.

இது ஏதாவது ரஜினி படத்தை ஞாபகப் படுத்தினால் வாசகர் கடிதத்திற்கு எழுதலாம்…!!

அடுத்த வாரம், கமலின் சண்டியர் கதை பற்றியும்.. அந்தக் கதைக்களன் மூலம் பற்றியும் பார்க்கலாம்.

( வாசகர்கள், இந்த மாதிரி உல்டா விவரங்கள் பற்றி எனக்கு ஈ மெயில் அல்லது கொசு மெயில் செய்தால், நான் இக் கடிதத்தில் தொடருகிறேன்.. )

‘செரின்டிபட்டி ‘ பாருங்கள்… தமிழ்படம் மாதிரி ஆபாசக் காதல் காமக் களியாட்டம் இல்லாத கவிதை போன்ற அருமையான காதல் படம்.

raju_film@yahoo.com

Series Navigation

ராஜ்உ

ராஜ்உ