தைரியலட்சுமியின் பக்தர் – ஃபோட்டோ செய்தி – ஒரு விளக்கம்

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

ரா. ராஜா


மூப்பனார், மீண்டும் ஜெயுடன் அணி கண்டபோதுதான் அவரை ரஜினி விலக்கினாரா ? நல்ல வேடிக்கைதான். 1996 தேர்தலுக்கு பின்னர் நடந்த பஞ்சாயத்து தேர்தலிலேயே தன்னுடைய ரசிகர்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியோடு நெருக்கமாக இருந்து அரசியல் முலாம் பூசிக்கொள்ளாமல் ரசிகர்களை விலகியிருக்க சொன்னவர் ரஜினிகாந்த். 1998 தேர்தலிலேயே மக்கள் உணர்ச்சிவசப்படாமல் யோசித்து ஓட்டுப்போடுமாறு கோரிக்கை விடுத்தவரை, கோவை குண்டுவெடிப்பு பதட்டத்தில் வாய்ஸ் கொடுக்குமாறு கெஞ்சியது யாரென்பது மக்களுக்கு தெரியும். 1999 தேர்தலில் அணிகள் மாறி அமைந்த புதிய அரசியல் சூழலில், தான் வாய் திறக்க வேண்டிய அவசியமில்லை என்று மெளனத்தின் சாட்சியாக நின்றவர். 1998ல் தான் பட்டபாட்டை மறந்துவிடாமல்தான் 1999ல் மட்டுமல்ல 2001லும் யாரையும் விலக்காமலும் யாரையும் ஆதரிக்காமலும் அரசியலிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு தமிழக மக்களோடு தனித்து நின்றார்.

காவிரி பிரச்னையில் எந்த நபரையும் குறை சொல்லியோ, தனிநபர் தாக்குதலில் இறங்காமலோ உணர்ச்சி பூர்வமாக அல்லாமல் அறிவுப்பூர்வமாக காவிரி பிரச்னையை அணுகிய ஓரே சினிமாக்காரர் (ஓரே தமிழக தலைவர்) என்று ரஜினிகாந்தை மட்டுமே சொல்ல முடியும். ஆனால், காவிரி பிரச்னையில் ரஜினிகாந்த் என்கிற தனிநபரை மையமாக வைத்தே சினிமாக்காரர்கள் கூட அரசியல் விளையாட்டு விளையாடியதை தமிழகம் மறந்து விடாது. பாரதிராஜாவை ஜெவின் ஆதரவாளர் என்று ரஜினிகாந்த் சொன்னதாக போகிற போக்கில் சொல்வது பச்சைப் பொய்.

திருமண விழாக்களில் அரசியல் பேசுவது தமிழக அரசியல்வாதிகளுக்கு மட்டும்தான் ஆர்வமிருக்கிறது என்று நினைத்திருந்தோம். எங்கேயோ உட்கார்ந்துகொண்டு தமிழகத்தின் அன்றாட நிகழ்ச்சிகளிலும் அரசியலை கலக்கும் சில வெளிநாட்டு அன்பர்களின் வேலைகளை பார்க்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது.

ரா. ராஜா

raja_nmc@yahoo.com

Series Navigation

ரா. ராஜா

ரா. ராஜா