தேடுகிறேன் தோழி

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

பாஷா


தொலைபேசியால் நான்
சிருஷ்டித்த என் தோழியே
நிஜமுகம் எடுத்து என்
நினைவுகளில் சிலையென
வடித்த உன்னை
உடைத்தெடுத்தாயேன் ?

குரலா கொலுசொலியா ?
வண்டு செல்கிறதா இல்லை உன்
தோடு சொல்கிறதா ?
தொலைபேசி எடுத்து
குழம்பிய தருணங்கள் மீண்டும்
நிகழப்போவதில்லை!

இனி
உன் ஊர்செல்லும் இரயிலில்
என்தேடல் தொடர்ந்துகொண்டிருக்கும்
தொடரும் தேடலில்
தென்படலாம் நீ
உன்னை உன் சம்பிரதாய
சிரிப்புக்குள் ஒளித்தபடி!
—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation