தென்னகத்தில் இனக்கலப்பா ?

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

தி. அன்பழகன்


இந்திய மேல்சாதியினர் எனக் கூறிக் கொள்ளும் ஆரியப் பார்ப்பனர்களின் டி-என்-ஏ க்களை ஆய்வு செய்ததில் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களால் தான் அந்த டி- என்-ஏ க்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன எனும் உண்மையைப் பேராசிரியர் பார்த்தாமஜிம் தார் தலைமையிலான ஆய்வர் குழு கண்டறிந்துள்ளது. மேலும், தென்னிந்தியாவைவிட

வடஇந்தியாவில் இந்த இனக்கலப்பு அம்சம் தூக்கலாக இருக்கிறது என்றும் இக்குழு சுட்டிக் காட்டியுள்ளது. மேற்கண்ட இக்கருத்துக்கள் ‘இந்திய மக்களின் ரிஷமூலங்கள் ‘- எனும் கே. என். ராமசந்திரனின் கட்டுரையில்(தினமணி, 9.11.2004) தெரிவிக்கப்பட்டுள்ளன. இதே கட்டுரையில் தென்னிந்தியாவில் தற்போதுள்ளவர்களின் டி-என்-ஏ க்களை வைத்து ஒவ்வொருவரும் எந்த இனத்தின் வழித் தோன்றல் ? என்பதை கண்டுபிடிக்க முடியாது- எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மையைச் சொல்ல விரும்புவதுபோல காட்டும் தந்திர முயற்சி எனலாம். கட்டுரையாளர் குறிப்பிடுவது போல தென்னகத்தில் இனங்களைக் கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு அப்படி யொன்றும் இனக்கலப்பு ஏற்பட்டு விடவில்லை என்பதே உண்மை நிலையாகும்.

இந்திய ஐரோப்பிய மொழிக் குழுவினரான ஆரியப் பார்ப்னர்கள் சுமார் கி.மு. 4000 ண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நுழைந்தனர் என்றும் கி.மு. 2000 அளவில் தென்னகத்தில் பரவினர் என்றும் கருதப்படுகிறது.

இக்காலக் கட்டத்தில் எழுந்த தமிழ் இலக்கியமான மதுரைக் காஞ்சியில் ஆரியப்பார்ப்பனர்களின் வைதீக மதமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

ஆரியப்பார்ப்பனர்கள் தங்கள் இனத்தூய்மையைக் கட்டிக் காப்பதற்காக தங்கள் இரத்தஉறவுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் அகமானமுறை, இனக்கலப்பிற்கு

எதிரான குழந்தைத் திருமணம், சதி எனும் உடன் கட்டை ஏறுதல், விதவைக் கோலம், சாதிக் கேற்ற தனித்தனி குடியிருப்புகள், தீண்டாமை, மதநிபந்தனைகள், வட்டாரக் கட்டுப்பாடுகள் ஆகியவை நிலை நிறுத்தப்பட்டன.

ஆரிய இனத்தூய்மையைக் கட்டிக்காப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்ட இப்பாதுகாப்புக் கவசங்களுக்கு மேலும் வலுவூட்டும் வகையில் உருவாக்கப்பட்டவை தான் வர்ண தர்மம், கெளடில்யரின் தர்ம சூத்திரம், மனுஸ்மிருதி போன்றவையாகும். .இவை அனைத்தும் ஆரிய இனத்தூய்மையைக் கட்டிக் காப்பதோடு திராவிட இன ஒற்றுமையைச் சீர் குலைக்கவுமான

வகையில் அமைள்நதவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும், இவை மனிதர்கள் சேர்ந்து வாழும் சமூக இலக்கணத்திற்கு எதிராக மனிதர்கள் பல்வேறு சாதிப்பிரிவுகளாகப்பிரிந்து வாழ நிர்பந்திப்பவையாகும். அகமண முறையும், உடன் கட்டை ஏறுதலும் உயர்சாதிக்குரிய இவ்விலக்கணத்திற்கேற்ப திராவிட இனத்தவர்களும் நடந்து

கொள்ள முற்படலாயினர். இதன் விளைவால் கி.பி. 1794-ல் தஞ்சை புதுப்பேட்டை கிராமத்தில் 30-வயதுத்தக்க கோமுட்டி சாதியைச் சார்ந்த பெண் உடன் கட்டை ஏறினார். இதே போல கி. பி. 1800-ல் தஞ்சை அரசர் மரணம் அடைந்ததை அடுத்து அவரது நான்கு மனைவிகளில் இருவர் உடன் கட்டை ஏறினர்.

அகமணமுறை கொடிக்கட்டிப் பறந்த தோடு அவ்வகமண முறையில் புறமணவகுப்பும் மிகத் துல்லியமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. அதன் எச்சங்கள் இன்றளவும் இலைமறைவு காய் மறையாகப் பின்பற்றப் பட்டுவருகிறது. என்பது மறுக்க முடியாத உண்மையாகும். ஒரு

சாதிக் குள்ளேயே இந்த வகுப்பார் இந்த வகுப்பினரோடு மட்டும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே புறமணவகுப்பு என்பதற்கான விளக்கமாகும்

எடுத்துக்காட்டாக வேளாளர்களில் 930- உட்பிரிவுகள் உள்ளன. இவற்றில் 10-உட்பிரிவுகள் மிக முக்கியமானவையாகும். அவையாவன.

1. கார்காத்த (காரைக்கட்டு) வேளாளர்

2.கொங்குவேளாளர்

3. சோழிய வேளாளர்

4. தொண்டை மண்டல வேளாளர்

5. துளு வேளாளர்

6. பாண்டிய வேளாளர்

7. நாங்குடி வேளாளர்

8. நாஞ்சில் நாட்டு வேளாளர்

9. நீர்ப்பூசி வேளாளர்

10. வீரக்கோடி வேளாளர்

இவ்உப்பிரிவுகள் ஒவ்வொன்றிற்கும் புறமணவகுப்புகள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேல் சாதிக்கரான்தான் கற்க வேண்டும், கீழ் சாதிக்காரர்கள் கற்கக் கூடாது. படிக்க அவர்களுக்கு உரிமையில்லை, உழைக்கத்தான் வேண்டும் என்பது கெளடில்யரின் தர்ம சூத்திரம் (1,2,3) கூற்றாகும். சூத்திரர்களான இன்றைய பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கடவுள் விடுத்துள்ள ஒரே வேலை பிராமணர்,

சத்ரியர், வைசியர் ஆகிய 3-பிரிவினர்களுக்குப் பணிவோடு ஊழியம் செய்வதேயாகும் என மனுஸ்ரருதி(1-91) கற்பிப்பது கவனத்திற்குரியதாகும். தீண்டப்படாத மக்களுக்கு உடை என்பதே பிணத்தின் மீது போடப்பட்ட உடைதான். அதைத்தான் இவர்கள் அணிய வேண்டும் என்றும் அதே மனுஸ்மிருதி (10, 15, 2) கற்பிக்கிறது.

திராவிட இனத்திற்குள்ளேயே ஒற்றுமையைச் சீரழித்து அவ்வினைத்திற்குள்ளேயே சாதிக்கலப்பு ஏற்படாத வகையில் அனைத்து வழிகளையும் அடைத்து, தன்னை அந்நில இனமாக இனமாகத் தனிமைப் படுத்திக்கொண்ட ஆரிய இனத்தாருடன் திராவிட இனத்தார் எப்படி இனம் கண்டறியாத வகையில் இனக்கலப்பில் ஈடுபட்டிருக்க முடியும் ?.

ஒருவரின் டி-என்-ஏ க்களைக் கொண்டு அவரது பூர்வீக இனம் எது ? என்பதைக் கண்டறிவதற்கு இன்றைய அறிவியல் பேருதவியாக விளங்குகிறது. இவை மனித செல்களின் கருவிற்று வெளியே அமைந்துள்ள மைட்டோ காண்டிரியாவில் உள்ள டி-என்- ஏ க்களேயாகும். இவை தாய் வழி மூலம் மட்டுமே வரும் டி-என்- ஏ க்களாகும். இந்தத்தாய்விழி

மூலமான டி-என்-ஏ க்கள் 1500 ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது பண்புகளின் மூலக்கூறுகளில் சிறிதளவு மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளும் இயல்பான தன்மை கொண்டவையாகும்.இரண்டு இனம் சார்ந்த நபர்களின் டி-என்-ஏ க்களிடையே எத்தனை முறை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்ற எண்ணிக்கையையும் டி-என்- ஏக்கள் மாற்றத்திற்குள்ளாகும்

ஆண்டுக்கணக்கான1500-யையும் பெருக்கினால் வரும் பெருக்குத் தொகையைக் கணக்கிட்டால் அந்தப் பெருக்கத்தொகையே அந்த இரண்டு நபர்களும் ஒருதாய் வயிற்று வம்சாவழிப் பிள்ளைகளாக இருந்த ஆண்டாகும்.

இப்படிப்பட்ட முறையில் கண்டறியப்பட்ட அறிவியல் உண்டை என்னவென்றால், சுமார் இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உள்ள மக்கள் அனைவரும் ஒருதாய் மக்கள் என்பதாகும். இவ்வுண்மையை த. ஜேகதீசனின் ஒருதாய் மக்கள் கட்டுரை (திணமணி.

18.8.1995) மூலம் நன்குணரலாம்.

1,30,000 ஆண்டுகளுக்கும் 50,000 ஆண்டுகளுக்கும் இடையிலான காலக்கட்டத்தில்தான் வம்சா வழி மரத்தில் (GENEALOGICAL TREE) முதல் பெரும் பிளவு ஏற்பட்டிருக்க வேண்டும் என்றும் அப்பிளவு கறுப்பர் மற்றும் கறுப்பரல்லாதார் எனும் வகையில் நடந்தேறியிருக்க வேண்டும் என்பது அறிவியலார் கருத்தாகும். 10,000 ஆண்டுகளுக்கு முன்புதான் ஐரோப்பியர் மற்றும் மங்கோலியர் உருவமைப்பு தோன்றியதாக மனித மரபணுவின் வரலாறும்

புவியியலும் எனும் நூலில் L.L. சுவாலி-ஸ்போர்ச்சா குறிப்பிட்டுள்ளனர். எனவே, மத்திய ஆசியாவில் உள்ள ஆரிய இனத்தவர்களுக்கும் இங்குள்ள தென்னக திராவிட இனத்தவர்களுக்கும் இடையே அதிகப்பட்சம் 7-டி-என்-ஏ க்களின் மூலக்கூறுகளாவது மாற்றம் பெற்றிருந்தாக வேண்டும். அப்போதுதான் தென்னகத்தில் இனம் கண்டறிய முடியாதவாறு

ஆரியர் மற்றும் திராவிடர் இனக்கலப்பு ஏற்பட்டிருப்பதாகக் கருத முடியும். இனக்கலப்பு அப்படியே ஏற்பட்டிருந்தாலும் அது அரிசியில் கல் கலந்தது போல இருக்க முடியுமே தவிர இனம் காணமுடியாதவாறு இருக்கவே முடியாது.

இனக்கலப்பிற்கு இடமளிக்காத வகையில் தென்னக சமூகச் சூழல் ஆரியர்களால் வார்த்தெடுக்கப்பட்டு இருந்துவருகிறது என்பது ஒளிவு மறைவற்ற வரலாற்று உண்மையாகும். இனங்கள் தோன்றியதாக கருதப்படும் 10,000 ஆண்டுகளுக்குள் ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் இனக்கலப்பு இனங்கண்டுகொள்ள முடியாத அளவுக்கு ஏற்பட்டுவிட்டதாகச் சொல்வதற்கு எவ்வித அடிப்டையும் இல்லை என்பது தெளிவு.

—-

neduyazhini@sancharnet.in

Series Navigation