தீர்மானம்

This entry is part [part not set] of 52 in the series 20040617_Issue

தீபம் கோபி, சிங்கப்பூர்


பருவ வயதில்
பற்றவைத்த நெருப்பு
தினம் புகைத்து..
புகைந்து.. புறையோடி..
புற்றுநோய் ஆகுமுன்பே..,

மகிழ்ச்சி, துயரமென
ஏதேதோ காரணம் சொல்லி
திகட்டாமல் அருந்திய
ஆல்கஹால் கரைசலில்
குடலரித்து வெந்து -வெறுங்
கூடாய் போகுமுன்பே…,

நானெடுத்த
புத்தாண்டு தீர்மானம்!
நீண்டநாள் நண்பனை
நேற்று கண்ட பூரிப்பில்,
வெண்புகையில் வீழ்ந்து..
மதுவுக்குள் மூழ்கியது ! -அந்த
‘நிலையில்லா தீர்மானம் ‘!

– –
(dewwinds@yahoo.com)

Series Navigation

தீபம் கோபி - சிங்கப்பூர்.

தீபம் கோபி - சிங்கப்பூர்.