திருக்குரானின் எதிர் கொள்ளல்கள்

This entry is part [part not set] of 43 in the series 20060602_Issue

ஹெச்.ஜி.ரசூல்


தமிழில் ஐவேளைத் தொழுகை நடத்துவது தொடர்பான சூபி முகமது விவாதத்தில் ஹமீது ஜாபர் ஒரு முக்கிய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். திருக்குரானிய தமிழ் மொழிபெயர்ப்பு அ.கா.அப்துல் ஹமீதுபாகவி அப்துல்வகாபு, ஐ.எப்.டியின் மெளதூதி, காதியானிப்பிரிவு, வகாபிகுழுமத்தின் பி.ஜெ அஹ்லேகுரானிகளின் ரஷாதி எனப் பலரின் வேறுபட்ட கொள்கைசார்ந்த மொழிபெயர்ப்புகள் வெளிவந்துள்ளன.இவற்றில் பல்வித அர்த்த தொனிகளில் உணர்ச்சிநிலைகளில் மொழிபெயர்ப்பின் வாசகங்கள் மாறுபட்டுள்ளன. இதில் எந்த மொழிபெயர்ப்பை பின்பற்றுவது என்று வினா தொடுத்திருந்தார். இது ஒரு சிக்கலான பிரச்சினைதான்.

இது தமிழுக்கு மட்டும் நேர்ந்த விஷயமல்ல. திருக்குரானை தொகுக்கும் போது ஏற்பட்ட நெருக்கடியும் இவ்வாறதானதாகவே இருந்துள்ளது.

நபிகள்நாயகத்தின் மறைவுக்குப் பிறகு ஏற்த்தாழ 12 ஆண்டுகள் கழித்து கலிபாஉதுமான் காலத்தில் திருகுரான் ஒற்றை வடிவத்தில் தொகுக்கப்ப்ட்டது.

முதற்கட்டமாக சைதுஇபுனு தாபித் தலைமையில் நான்குபேர் கொண்டதொரு குரானை தொகுத்து எழுதும் குழு உருவாக்கப்பட்டது.அராபிய பகுதிகளில் பல்வேறு மொழிவழக்குகளில் ஓதப்பட்டுவந்த குரான் பிரதிகளும் நபிமுகமதுவின் துணைவியார் ஹப்ஸா பாதுகாத்து வைத்திருந்த பிரதியும் பரிசீலிக்கப்பட்டது. திருக்குரானை தொகுத்து எழுதும் போது பல்வேறு வட்டாரமொழிகளில் அது இருந்துள்ளதால் எந்த மொழிவழக்கில் திருக்குரானை எழுதுவது என்ற பிரச்சினை எழுந்தது.பல்வேறு இனக்குழுக்களின்,குலங்களின் மொழிவழக்கினிடையே குறைஷி மொழிவழக்கை மட்டும் பயன்படுத்துமாறும், பிற வட்டார மொழி வழக்கில் இருந்த திருக்குரான் பிரதிகளை அழித்துவிடுமாறும் கலிபா உதுமான் ஆணையிட்டுள்ளார். குறைஷி மொழி வழக்கின்படி தயாரிக்கப்பட்ட குரானே அனைத்துமாகாணங்களுக்கும் அனுப்பப்பட்டு பின்பற்ற உத்தரவிடப்பட்டது.இன்று நாம் பின்பற்றுவதும் அதுதான்.
எனவே தமிழிலும் பல மொழி வழக்குகளிலும் பல்வித குழுசார்ந்த அர்த்தநிலைகளிலும் திருக்குரான்கள் உருவாகியுள்ளன. ஒற்றைக்குள் ரகசியமாய் நிகழ்ந்த பன்மைவடிவம் இது.எனவே அவரவர் குழுக்கள் அவரவருக்கான தமிழ் மொழிபெயர்ப்பை பின்பற்றி தமிழில் தொழுகையை நடத்த வேண்டியதுதான்.

மேலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தமிழில் தொழுகை நடத்த பெண் இமாம் தகுதி படைத்தவர்தான் என்பதை உறுதிபடுத்த விரும்பும் இஸ்லாமியப் பெண்ணியக் குரல்களையும் இதனூடே நாம் உற்று நோக்க வேண்டியுள்ளது.
——————————————-

razool hg razool hg [mylanchirazool@yahoo.co.in]

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்