திராவிட ‘நிற ‘ அரசியல்.

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

ச பெரியசாமி


ஒரு முறை நான் விடுதியில் எனது சக மாணவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தேன்.அப்போது அங்கே இன்னொரு மாணவர் வந்தார். அவர் கொஞ்சம் சிவந்த நிறம். சட்டை இல்லாமல் வெறும் மேனியோடு அவர் வந்ததைப் பார்த்தவுடன் அங்கிருந்த இன்னொரு மாணவர் உடனடியாக இடத்தைக் காலி செய்தார்.

அப்படிச் செய்தவர் கொஞ்சம் உயரம் குறைவு மற்றும் கொஞ்சம் கறுப்பு நிறம். அதனால் விளைந்த தாழ்வு மனப்பாண்மை அவரை இப்படி செய்யத் தூண்டியது. திராவிட இயக்க நிற அரசியல் எந்த அளவுக்கு தமிழ் நாட்டு மாணவர்களை கெடுத்துள்ளது என்பதற்கு இது ஒரு சான்று. இம்மாதிரியான நிற அரசியல் உலகெங்கிலும் உண்டு தான்.

ஆனால் இரண்டு ஆண்களுக்கு இடையில் சாதாரணமாக இருக்க வேண்டிய ஒரு பால் சார்ந்த சகஜ உறவு மற்றும் உணர்வு இந்த அளவுக்கு கெட்டு வக்கிரம் ஆகிப்போனதற்கு திராவிட இயக்கத்தினர் முன் வைத்த நிற அரசியல் தான் காரணம். ஒழுங்காக கல்லூரிக்குப்போனோமா, படித்து முடித்து வேலை தேடி வாழ்க்கையில் நிலைத்தோமா என்றிருந்த மாணவர்களுக்கிடையில் கட்சி அரசியல், சினிமா அரசியல் முதல் கலர் அரசியல் வரை கொண்டு வந்து விட்டவர்கள் இவர்கள் தான்.

ஒரு படத்தில் வில்லன் ரஜினியைப்பார்த்து ‘டே ? ‘ என்பான். பதிலுக்கு ரஜினி அவனை விட சத்தமாக ‘டே ? ‘ என்பார். அதைக் கும்பலாக போகும்போது மாணவ மணிகள் கத்தி பின்பற்றுவதை நான் கண்டிருக்கிறேன். அப்படி ஏட்டிக்குப்போட்டி பேசும் கும்பல் கலாச்சாரத்தை வளர்த்தது இந்த இயக்கம். இந்த இயக்கம் வளர்த்த மோசமான சினிமா.

இதனால் எத்தனை இளம் திறமைகள் வீணாய்ப்போனதோ யார் கண்டார் ? இங்கே திறமை இல்லாவிட்டாலும் நிற அரசியலை வைத்து ஒருவர் பெரிய நடிகராக வர முடியும். ஆனால் வடக்கே. கஜோல், அஜய் தேவ்கன் போன்றவர்கள் கறுப்பு தான். அங்கே எல்லாவற்றையும் விட திறமை முக்கியம். ஹாலிவுட்டிலும் அப்படித்தான்.

இன்றுள்ள திராவிடத் தலைவர்களில் பலர் படிப்பை பாதியில் மட்டம் போட்டவர்கள். இந்திப்போராட்டம் அப்படிச்செய்ய கிடைத்த ஒரு சாக்கு. கூடுதலாக தியாகிப்பட்டம் வேறு. இவர்களின் அரசியலால் கல்லூரி மாணவர்கள் சீரழியத்தான் முடியும். வளர முடியாது.

ச பெரியசாமி

Series Navigation

ச. பெரியசாமி.

ச. பெரியசாமி.