தாகூரின் கீதங்கள் – 48 எல்லையற்ற இன்ப துன்பம் !

This entry is part [part not set] of 34 in the series 20080911_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


அதுவோர் விலைமிக்கக் கல்லாயின்
சுக்கு நூறாக்கி உன் கழுத்தில்
சூட்டுவேன்
ஆரமாய்க் கோர்த்து !
ஓரினிய
சிறிய பூவாயின்
பறித்துன் கூந்தலில் சூட்டுவேன் !
அருமைக் காதலி !
ஆனால் அது ஓர் இதயம் !
இதயத்தின் கரைகள் எங்கே ?
இதயத்தின் அடித்தளம் எங்கே ?
இதய ராஜியத்தின் எல்லைகள் நீ
அறிய மாட்டாய் !
ஆயினும் இதய இராணி
நீயே !

கண்ணிமைப் பொழுதுக் களிப்பென்றால்
புன்னகையாய் மலரும் எளிதாய் !
காணுவாய் நீ அதை !
கணப் பொழுதில் கற்பாய் நீ !
புண்படுத்து மென்றால்
கண்ணீர்த் துளிகளாய்க் கரைந்திடும்
உள்ளத்து ரகசியம் மறைத்து
ஊமையாய் !
ஆயினும் காதல் உணர்வது,
அருமைக் காதலி ! அதனால் வரும்
இன்பமும் துன்பமும்
எல்லை யில்லாதது !
அதை நீ
அறிய மாட்டாய்
ஒருபோதும் முழுமையாய் !

என்னருமைக் காதலியே !
என்னை விட்டு நீங்காதே
என்னிடம் சொல்லாமல் !
இரவு பூராவும் உனக்குக் காத்திருந்தேன்
உறக்கம் மூடுது விழிகளை !
உண்டாகுது அச்சம் எனக்கு
உறங்கிப் போனபின்
உன்னை இழந்து விடுவேன் என்று !
என்னை விட்டு நீங்காதே
என்னிடம் சொல்லாமல்
என்னருமைக் காதலியே !

(தொடரும்)

************

1. The Gardener,
Translated to English from Bengali
By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,
Translated From Bengali
By : Indu Dutt

Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 8 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா