தாகூரின் கீதங்கள் – 47 இதயத்தின் ஆழம் என்ன ?

This entry is part [part not set] of 35 in the series 20080904_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


மொழிகளில் தடுமாறி

மௌன மாவ தில்லை நாம் !

சூனியத்தை நோக்கிக்

கைகளை உயர்த்துவ தில்லை நாம்

நம்பிக்கை யற்றவைக்கு !

நாம் ஈவது போதும் !

நாம் பெறுவதும் போதும் !

வலியெனும்

மது ரசத்தைப் பிழிந்து நாம்

மகிழ்ச்சியை

நசுக்க வில்லை முழுமையாய் !

இறுதியில்

ஒரு கீதமாய்ப் போனது

உனக்கும் எனக்கும்

இருந்த இந்த

நெருங்கிய பிணைப்பு !

துருவிடும் உனது விழிகள்

சோகமாய் உள்ளன !

கடலின் ஆழங் காணும்

நிலவைப் போல்

என் வார்த்தையின்

உட்பொருளை

உளவித் துழாவு கின்றன !

உன் கண் முன்பாக

ஒளிமறை வின்றி

ஒன்றையும் மூடாமல்

சூன்ய மாக்கினேன்

என் வாழ்வைப்

பிறப்பு முதல் இறப்பு வரை !

அறிய மாட்டாய் அதனால்

நீ என்னை !

அதுவோர் ஆபரணக் கல்லாயின்

சுக்கு நூறாய் உடைத்துன் கழுத்தில்

சூட்டுவேன்

ஆரமாய்க் கோர்த்து !

ஓரினிய

சிறிய பூவாயின்

பறித்துன் கூந்தலில் சூட்டுவேன் !

அருமைக் காதலி !

ஆனால் அது ஓர் இதயம் !

இதயத்திற்குக் கரைகள் எங்கே ?

இதயத்தின் ஆழம் என்ன ?

இதயத்தின் அரசவை எல்லைகள்

அறிய மாட்டாய் நீ !

ஆயினும் நீ

இதய இராணி !

(தொடரும்)

************

1. The Gardener,

Translated to English from Bengali

By : Nirupama Ravindra

2. Original Source: A Tagore Testament,

Translated From Bengali

By : Indu Dutt

Jaico Publishing House (1989)

121 Mahatma Gandhi Road,

Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 1 2008)]

Series Navigation