தாகூரின் கீதங்கள் – 38 புயலுடன் வந்தார் வேந்தர் !

This entry is part [part not set] of 26 in the series 20080703_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


கதவைத் திறந்து வைப்பாய் !
முழுக் கதவும் திறப்பாய் !
சங்கு முழக்கி வரவேற்பாய்ப்
பொங்கும் கீதமுடன் !
நள்ளிரவில் இங்கு வந்திருக்கிறார்
நமது மன்னர் !
கருமைப் பிரபஞ்சத்தை ஆளும்
அருமை வேந்தர்
வருகிறார் !
ஒப்பனை செய்யத்
துவங்கு
உன் வீட்டு முற்றத்தை !
அந்தோ !
எதிர்பாராத வேளையில்
இடி முழக்கம்
எழுந்திடும் வான்வெளி எங்கும் !
உறக்கத்தை முறித்து உன்னை
எழுப்பிடும் !
பளிச் பளிச்சென வெட்டும்
ஒளி மின்னல் !
சூறாவளியைக்
கைத்துணை கொண்டு
காட்சி தந்திருக்கிறார்
கருந்துயர் வேந்தர் !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (June 30,, 2008)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா