தாகூரின் கீதங்கள் -3 மாறி மாறி வரும் முகம் !

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


விண்ணில் பெயரிடப் படாத
எண்ணற்ற
விண்மீன்கள் வீசும்
பொன்மய மான நீட்சியில்
புதிய முகத்திரை யிட்டு,
புதிய பாவனையில்
மாறி மாறி
வேறு வடிவத்தில் பிறக்கும்
இனியவன் முகத்தை நோக்குவாய்
மௌனமாக !
வான்வெளி எங்கணும்
காலத்தின் உதயம் முதல்
முடிவிலாப் பிரிவு வரை
இன்று நான்
உன்னோடு கொள்ளும் பிணைப்பு
நிலையான
அதிர்வுத் தாளமோடு
துடிக்கிறது
வலியின் முழுமையுடன் !

மனமே ! நீ காண்ப தெல்லாம்
ஆழமானவை !
நீ காணாதவை இன்னும்
குவியலாய்க் கிடக்கின்றன !
வசந்த காலத்து
வாச மலர்கள் தம் நறுமணத்தை
வானகங்களின்
சூனியத்தில் நிரப்பித்
தென்திசைத் தென்றலும்
கொந்தளிக்கிறது !
கண்ணோடு கண்ணோக்கும்
விழியிணைப்பில்,
பிறப்புகளுக் கிடையே
இருக்கும்
நூற்றாண்டுகளில்
மெதுவாக உச்சரிக்கப்படும்
மொழி அது !

************

Original Source: A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan November 13, 2007]

Series Navigation