தமிழ் வாணனின் வழிகாட்டிப் புத்தகங்கள்

This entry is part [part not set] of 41 in the series 20071115_Issue

மைத்ரேயன்


அன்புள்ள ஆசிரியருக்கு

சிற்றூரில் வழி காட்டி வளர்க்கக் குடும்பத்தில் யாரும் உணர்ச்சிக் கூர்மை
இல்லாதிருந்த ஒரு நிலையில் வளர்ந்த எனக்குத் தமிழ் வாணனின் சில சுய
உதவிப் புத்தகங்கள் (அல்லது) வழிகாட்டிப் புத்தகங்கள் மிகவும் உதவின.
குறிப்பாக அவருடைய அழகாய் இருப்பது எப்படி என்ற மிக அருமையான புத்தகத்தை
நான் பல நூறுதடவை படித்திருப்பேன். என் 7ஆவது வகுப்பிலோ என்னவோ பரிசாகக்
கிடைத்த அந்த புத்தகத்தைக் கல்லூரியில் நுழையும் வரையிலும் வைத்திருந்து
பிறகு என் குடும்பத்தில் இருந்த இளைய தலைமுறையினரிடம் கை மாற்றிக்
கொடுத்தேன்.
அழகாய் இருப்பது எப்படி என்ற புத்தகம் அழகைப் பற்றியது அல்ல, ஆரோக்கியம்,
நாகரிகம், நாசுக்கு, எளிமை, graceful living எல்லாவற்றுக்கும் ஒரு பள்ளி
மாணவனுக்குக் கூட புரியும் விதத்தில் வழி காட்டியது. தமிழ்வாணனுக்கு
நான் அந்த விதத்தில் மிகவும் கடமைப் பட்டிருக்கிறேன்.
இன்று நான் ஏதோ தமிழில் எழுத முயல்கிறேன் என்றால் அதற்கு வித்திட்டவரும்
அவர்தான். நம்மை வளர்த்து விட்ட ஒரு சமுகத்துக்கு நாம் நம்மால் ஆனவற்றைத்
திருப்பித் தர வேண்டும் என்றும், அதை ஒரு எஜமான பாவம் அல்லது மேலாட்சிப்
பாவம் இல்லாமல் உறுப்பின பாவத்தோடு செய்ய வேண்டும் என்பதையும் அவருடைய
தொடர்ந்த் இயக்கத்தில் கற்றுக் கொண்டதாக வெகு நாள் கழித்துத் தான்
அறிந்தேன். அதற்குள் அவர் காலமாகி இருந்தது.

இதைச் சுருக்கமாக லேனா தமிழ்வாணனிடம் சொன்னால் மகிழ்ச்சி ஆக இருக்கும்.
இதே போல என் நண்பர்கள் பலரும் தமிழ்வாணனை மிகவும் நேசித்தார்கள்,
மதித்தார்கள் என்பதையும் சொல்லுங்கள். நன்றி.

Maithreyan

Series Navigation

மைத்ரேயன்

மைத்ரேயன்