தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாரம்பரியம்

This entry is part [part not set] of 38 in the series 20030419_Issue

டாக்டர் நந்திதா கிருஷ்ணா

இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க பல சுற்றுச்சூழல் பாரம்பரியங்கள் இந்தியாவில் இருக்கின்றன. பழமை வாய்ந்த வளம் பொருந்திய தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் பல சுற்றுச்சூழல் பாரம்பரியங்கள், கோவில் காடுகளைப் பற்றியும், ஸ்தல விருட்சம் என்னும் கோவில் மரம் பற்றியும், கோவில் குளங்கள் பற்றியும் அவை மக்களால் போற்றி வணங்கப்படுவதைப் பற்றியும் இருக்கின்றன.

ஸ்தல விருட்சத்தை வணங்கும் முறை எல்லா கோவில்களிலும் காணப்படுகிறது. கோவில் காடும் கோவில் குளமும் எல்லா கிராமங்களிலும் காணப்படுகிறது. இவை அனைத்தும் தமிழ்நாட்டின் நிலைத்து வாழும் சுற்றுச்சூழல் பாரம்பரியங்கள். 1993இல் சிபிஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் தமிழ்நாட்டின் ஸ்தல விருட்சங்களைப் பற்றியும் கோவில் காடுகளைப் பற்றியும் ஆய்வு செய்ய முனைந்தது. இவற்றில் பலவற்றை மீண்டும் நிலை நிறுத்துவதும் இதன் நோக்கம். முதல் சர்வே முடிந்து தமிழ்நாட்டின் ஸ்தல விருட்சங்கள் பற்றிய புத்தகம் வர இருக்கின்றன. அடுத்த சர்வே பணியில் இருக்கிறது.

ஸ்தல விருட்சம் என்பது ஒரே ஒரு மரம். இது கிராமத்தில் இருக்கும் கோவிலுடன் தொடர்புடையது. அந்த பிராந்தியத்துக்கான முக்கியமான பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்துக்கான மரமாக இது இருக்கிறது. இது கோவிலுடனோ அல்லது கோவிலினுள் இருக்கும் தெய்வத்துக்கோ தொடர்புடையதாக இருக்கிறது. உதாரணமாக வில்வ மரம் (Limonia acidissima) சிவபெருமான் கோவிலின் ஸ்தல விருட்சமாக இருக்கிறது. இருப்பினும் மயிலாப்பூரில் இருக்கும் கோவிலில் புன்னை மரமே (Calophyllum inophylum) ஸ்தல விருட்சம். ஸ்தல விருட்சமாக தேர்ந்தெடுக்கப்படும் மரம் நல்ல காரண காரியத்துடனேயே தேர்ந்தெடுக்கப்படுகிறது. புன்னை மரம் கப்பல் கட்ட ஏற்ற மரம். கடற்கரை மக்களான மயிலாப்பூர் மக்கள் இந்த புன்னை மரத்தை கோவில் மரமாக தேர்ந்தெடுத்தது புரிந்து கொள்ளக்கூடியதே. இப்படி பல ஸ்தல விருட்சங்கள் பொருளாதார மற்றும் சமூக அந்தஸ்துக்கான அடிப்படை மரங்களாக இருக்கின்றன. சிதம்பரத்தில் தில்லை மரமும், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் மாமரமும், மதுரையில் கடம்ப மரமும் கோவில் மரங்களாக இருக்கின்றன. பல கோவில்கள் ஸ்தல விருட்சங்களை வைத்தே பெயரிட்டு வழங்கப்படுகின்றன. உதாரணமாக, தில்லை (சிதம்பரம்), திருவேற்காடு, திருவல்லிக்கேணி ஆகியவை.

ஒரு குறிப்பிட்ட மரத்தை வணங்கிப்போற்றுவது அந்த மரத்தின் பாதுகாப்பை வலியுறுத்துவதாக இருக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, காலப்போக்கில், மரங்களின் அழிப்பும், சமூக பொருளாதார உறவுகளின் மாற்றமும் இந்த மரங்களை போற்றுவதன் காரணத்தை மக்கள் புரிந்து கொள்ளாமல் செய்துவிட்டன. இதனால் பல இடங்களில் ஓரிரு மரங்களே மீதம் இருக்கின்றன. சென்னை மற்றும் மயிலாப்பூரில் இன்று மிக அதிகமாக இருப்பது தென்னை மரங்களே, புன்னை மரங்களல்ல(Calophyllum inophylum).

இன்னொரு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாரம்பரியம் ஏரிகளை பாதுகாப்பது. கோவிலுக்கு அருகாமையில் கோவில் குளம் செயற்கையாக கட்டப்பட்டு தண்ணீரை சேமிக்க உதவுகிறது. இந்த தமிழ்நாட்டு பகுதி பெரும்பாலும் மழையை நம்பியே இருப்பதாலும், மழைத்தண்ணீரை சேமிப்பது என்பது அடிப்படையான முக்கியத்துவம் கொண்டது என்பதால், அரசர்களது மதிப்பு அவர்கள் எவ்வளவு குளம் வெட்டினார்கள் என்பதை வைத்தே இருந்தது. ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது ஒரு ஏரியும், ஒவ்வொரு கோவிலிலும் குறைந்தது ஒரு குளமாவது இருந்தன. ஏரி என்பது அனைவருக்கும் பொதுவாக இருந்தாலும், கோவில் குளங்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு முன்னர் சுத்தம் செய்து கொண்டு செல்வதற்காக இருந்தன. இந்தக் குளங்களும் ஏரியும் கிராமத்தில் இருக்கும் நிலத்தடி நீர் மட்டம் குறையாமல் பார்த்துக்கொண்டன. இருப்பினும் வறட்சி காலங்களில் கோவில் குளங்களில் இருக்கும் தண்ணீரையும் உபயோகப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டார்கள்.

இந்த பாரம்பரியம் மறந்து போய்விட்டதால், ஒரு காலத்தில் குளங்கள் நிறைந்து இருந்த சென்னை இன்று குளங்கள் இல்லாமல் வருடம் முழுவதும் தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கிறது.

மிக முக்கிய சுற்றுச்சூழல் பாதுகாக்கும் பாரம்பரியம், கிராமத்தில் இருக்கும் இயற்கை காடான, கோவில்காடுகள் பாரம்பரியமாகும். 10ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ஒன்று சோழ அரசனான ராஜராஜ சோழன் மாரநாடு பகுதியில் இருக்கும் வெங்கொங்குடி கண்டத்தில் இருக்கும் மாகாணிகுடி கிராமத்தில் இருக்கும் காலர் கோவிலுக்கு (அய்யனாரின் சேனையின் தளபதி) பிடாரி அம்மன் கோவிலுக்கும் தென்னை நந்தவனத்தை கொடையாக கொடுத்ததை கூறுகிறது. தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்கள் இப்படிப்பட்ட கோவில்காடுகள் ரிஷிகள் வாழ்ந்ததை கூறுகிறது. இந்த பழக்கம் இன்னும் வரலாற்றுக்கு முந்தைய பாரம்பரியமாக இருக்கலாம். உணவு சேகரித்து உண்ணும் சமூகங்கள் இயற்கையை வணங்கி, தாங்கள் தொடர்ந்து வாழ, இயற்கையை காப்பாற்ற வேண்டிய அவசியத்தை உணர்ந்து இந்த பாரம்பரியத்தை உருவாக்கியிருக்கலாம்.

தமிழ்நாடின் கோவில்காடுகள் மிகவும் அளவில் சிறியவை. இவை 2 ஏக்கரிலிருந்து 50 ஏக்கர்வரை அளவு கொண்டவை. மேற்கு தொடர்ச்சி மலையைச் சார்ந்த கிராமங்களில் இவை பல நூறு ஹெக்டேர்கள் அளவு கொண்டவை. இவற்றில் அம்மன் கோவிலும், சிறு குளம் அல்லது ஏரியும் காணப்படும். இதனைச் சுற்றி அடர்ந்த இயற்கை காடு காணப்படும். இந்த கோவில்காடு அந்த பிராந்தியத்தின் முக்கிய தாவரங்கள் மரங்கள் விலங்குகள் பறவைகள் வாழும் இடமாக இருக்கும். இந்த இடம் அந்த பிராந்தியத்தின் மரபணு குளம் (gene pool) என்று கூறலாம். இங்கு விலங்குகளிலிருந்து, பூச்சிகளிலிருந்து பறவைகள் மரங்கள் செடிகள் கொடிகள் அனைத்து வகை உயிரினங்களும் காணப்படும். இதுவே இந்தியாவின் மிக முக்கிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாரம்பரியம். நாடெங்கும் கோவில்காடுகள் காணப்பட்டாலும், இவை தொடர்ந்து அளவில் சுருங்கிக்கொண்டே வருகின்றன. விவசாய வளர்ச்சி தேவைகள் அதிகரிப்பதாலும் குடியிருப்பு தேவைகள் அதிகரிப்பதாலும், இந்த சிறு அளவு இயற்கை காடுகள் அழிந்து கொண்டே வருவது வருத்தத்துக்குரியது.

இந்தியாவின் மிக மிகப் பழைய இலக்கியங்களான வேதங்கள் தொட்டு இந்த பாரம்பரியம் மக்களால் குறிக்கப்பட்டு வந்திருக்கிறது. ரிஷிகளின் ஆஸ்ரமங்கள் காடுகளுக்குள் அமைந்திருப்பதை இது கூறுகிறது. அரண்யக என்று அழைக்கப்படும் பிற்கால வேத இலக்கியம் காடுகளின் பெயரிலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. காவியங்களும் இப்படிப்பட்ட காட்டுக்குள் இருக்கும் ரிஷிகளின் ஆஸ்ரமங்கள் பற்றிய குறிப்புகளை தருகிறது. விஸ்வாமித்திரர், வஷிஷ்டர், சகுந்தலையின் தந்தையார் ஆகியோர் பற்றி வரும் குறிப்புகள் இதனை உணர்த்துகின்றன. துள்ளியோடும் மான்களைப் பற்றியும், பாடும் பறவைகள் பற்றியும் பூத்து குலுங்கும் மலர்கள் பற்றியும், அடர்ந்த காட்டில் தொங்கும் கொடிகள் பற்றியும் வர்ணனைகளை எழுதி மனத்தில் அடர்ந்த காட்டின் வளம் பற்றிய கற்பனையை எழுப்பும் காளிதாசரின் எழுத்துக்கள் இந்தியாவின் இந்த கோவில்காடு பாரம்பரியத்தை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.

தமிழ்நாட்டின் கோவில்காடுகள் கிராம ஆன்மீகத்தின் இன்றியமையாத அங்கம். ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு கோவில்காடு இருக்கிறது. இந்த பாதுகாக்கப்பட்ட காட்டில் கிராம தெய்வங்களின் சிலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன். தாய்தெய்வம் அதன் பல வடிவங்களில் காளி, மாரி, பிடாரி, எல்லை ஆகிய பெயர்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. கோவிலின் முன்னர் இயற்கையான குளமோ அல்லது செயற்கையாக வெட்டப்பட்ட குளமோ இருக்கிறது. இந்த கோவில் மற்றும் குளத்தைச் சுற்றி ஆண் தெய்வங்களோ, இந்த பெண் தெய்வத்தின் துணைகளோ அமைக்கப்பட்டிருக்கின்றன. அய்யனார், கருப்புசாமி, முனியாண்டி, முனீஸ்வரன், மதுரை வீரன் ஆகியவை. நல்ல அறுவடைக்காகவும், நல்ல ஆரோக்கியத்துக்காகவும், இந்த தெய்வங்களுக்கு மண்னால் ஆன குதிரை அல்லது மாடு, யானை உருவங்களை அய்யனாருக்கு அர்ப்பணிக்கிறார்கள்.

இந்த கோவில்காடுகள் அந்த பிராந்தியதின் இருக்கும் தாவர விலங்குகளின் சரணாலயமாக இருப்பதுடன், ஒரு சிறு சுற்றுச்சூழல் பாதுகாப்பகமாகவும் விளங்குகிறது. இந்த வளமையான தாவரங்கள் நிலத்தடி நீரை காப்பாற்றவும், கடும் கோடைக்காலங்களில் குடிக்க கிடைக்கும் ஒரே நல்ல நீராகவும் இருக்கின்றன. இயற்கைக் காடுகளை அதன் நிலையிலேயே பாதுகாக்கும் இந்த முறை உலகத்தில் எங்கும் இல்லாத இந்தியாவுக்கே உரிய தனிப்பட்ட சிறப்பு வாய்ந்த பாரம்பரியமாகும்.

இப்படி கோவில்காடுகள் இருக்கும் இடங்களில் பல மிகவும் முக்கியமான தொல்பொருள் ஆய்வுக்குறிய இடங்களாகவும் இருப்பது இன்னும் கவனிக்கத்தக்கது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் சித்தன்னவாசல் இடம், 3000 வருடங்கள் பழைய நியோலித்திக் டோல்மன் இருக்கும் இடம். இங்கு இருக்கும் கோவில்காடும் கோவில்குளமும் மிகவும் பழமை வாய்ந்தது. மிக அழகான ஓவியங்கள் சுவர்களில் இருக்கும், 1500 வருடங்கள் பழைய ஜைன குகைகளும் 1300 வருடங்கள் பழைய ஜைன குகைகளும் இங்கு இருக்கின்றன. இப்படிப்பட்டவைகளை தமிழ்நாடெங்கும் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட கோவில்காடுகளைப் பாதுகாக்கவென்று பல உறுதியான வரைமுறைகளையும் சட்டங்களையும் கிராமங்களில் தோற்றுவித்திருக்கிறார்கள். இதனால், இந்த கோவில்காடுகளுக்குள் மரத்தை வெட்டுவது தடைசெய்யப்பட்டிருக்கிறது. இந்த கோவில்காடுகளுக்குள் விலங்குகளை வேட்டையாடுவதோ, ஏன் இலைகளை, கனிகளை காய்களை, வேர்களை பறிப்பதோ கூட தடை செய்யப்பட்டிருக்கிறது. குழந்தைகள் கூட இப்படி செய்துவிடக்கூடாது என்று அவர்களுக்கு போதிக்கப்படுகிறது. இந்த காடுகள் புனிதம் என்று கருதப்படுவதால் இந்த காடுகளுக்குள் நுழையும்போது செருப்புகளை முன்பே கழட்டி வைத்துவிடவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. மண் குதிரை அர்ப்பணிக்கும் நாளன்றோ அல்லது வருடாந்தர பொங்கல் வைக்கும் விழா அன்றோ தவிர வேறு நாட்களில் இந்த கோவில் காடுகளுக்குள் கிராம மக்கள் வருவது தடை செய்யப்பட்டிருக்கிறது. பிராந்திய கதைகள், பிராந்திய பழக்க வழக்கங்கள், மாயக்கதைகள், கடந்த காலத்தில் நடந்த தீமைகள் ஆகியவை கலந்த ஒரு கலவை இந்த காடுகளை மக்கள் அழித்துவிடாவண்ணம் பாதுகாக்கின்றன. இது கிராம ஆன்மீகத்துடன் இணைந்தது. இந்த வரைமுறைகளைத் தாண்டி நடக்கும் எந்த தவறும், பயிர் அழிப்பையும், வியாதியையும், குடும்பத்தில் நோய் குழப்பம் ஆகியவற்றையும் உண்டுபண்ணும் என்று நம்பப்படுகிறது. இத்தோடு கூடவே, கிராம பஞ்சாயத்தில் இதற்கான தண்டனையும் உடனே வழங்கப்பட்டுவிடும். இந்த தண்டனைகள் பெரும்பாலும் கிராமநிதிக்கு பணமாகவோ அல்லது எல்லோருக்கும் வைக்கும் விருந்தாகவோ இருக்கும்.

இந்த கோவில்காடு பாரம்பரியம் அன்பு காரணமாகவோ, அல்லது பயம் காரணமாகவோ, பக்தி காரணமாகவோ இருந்தாலும், இது கிராம பாரம்பரியமாக ஜாதி சமூக வேறுபாடு கடந்து அனைவரும் பங்குபெறும் விஷயமாக இருக்கிறது.

மண்ணால் ஆன உருவங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. களிமண் பூமியின் மறுபடி உயிர்த்தெழும் சக்திக்கு உவமையாக விளங்குகிறது. எல்லா தெய்வங்களும், அர்ப்பணிப்புகளும் களிமண்ணால் செய்யப்பட்டவையே. இது பிறப்பு, இறப்பு மீண்டும் பிறப்பு என்ற இந்து தத்துவத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது.

தாய்தெய்வத்தின் கோவிலில் அர்ப்பணம் செய்யும் போது மண்குதிரையை அய்யனாருக்கே அர்ப்பணம் செய்கிறார்கள். அய்யனார் கிராமத்தின் பாதுகாவலர். 12 இஞ்ச் முதல் 20 அடி உயரம் வரை இந்த குதிரைகள் இருக்கும். மாவட்டம், பிராந்திய பழக்கம், பண நிலை பொறுத்து இது மாறும்.

ஏன் குதிரைகள் ? கிராம மக்களின் பார்வையில் இது மனிதனுக்கு அடுத்த முக்கியமான விலங்கு. அஸ்வமேத யாக காலத்துக்கு முந்தியதாக இந்த முக்கியத்துவம் இருக்கலாம். மண் குதிரைகளை அர்ப்பணிக்கும் பழக்கத்தை பார்க்கும்போது அஸ்வமேத யாகத்தின் ஆரம்பத்தைப் பற்றிகூட நாம் சிந்திக்கலாம். அய்யனார் தன் குதிரைகளோடு இருக்கும் பிம்பத்தின் மிக பழைய உதாரணம் இறுதி பல்லவ (7 அல்லது 8ஆம் நூற்றாண்டு) காலத்தினது. அழகிராமம் (தென்னாற்காடு மாவட்டம்) ஊரில் கிடைத்த சிலையில் இவ்வாறு காணப்படுகிறது. மண்குதிரை செய்யும் சடங்கும் சரி, அதனை அய்யனாருக்கு அர்ப்பணிக்கும் சடங்கும் சரி கிராமம் முழுமையும் கொண்டாடப்படும் ஒரு முக்கியமான விழாவாக இருக்கிறது. (யானை அர்ப்பணிப்பது மீனவ சமுதாயங்கள் செய்வது) இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து பழங்குடி சமூகங்களிலும் மண்குதிரையை கிராம தெய்வத்துக்கு அர்ப்பணிப்பது என்பது பழக்கமாக இருப்பது சிந்திக்கத்தக்கது.

சி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் இந்த கோவில்காடுகளை பாதுகாப்பதைப் பற்றியும் இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாரம்பரியத்தைப் பற்றியும் பல கிராம ஊடகங்களிலும், நவீன ஊடகங்களிலும் பரப்பி வருகிறது. கூடவே, இப்படிப்பட்ட அழியும் நிலையில் இருக்கும் கோவில்காடுகளை காப்பாற்றுவதன் வேலையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 14 கோவில்காடுகளையும், ஆந்திராவில் ஒரு கோவில்காட்டையும் பாதுகாக்க முனைந்திருக்கிறது. புதுக்கோட்டையில் இதற்காக ஒரு பிராந்திய அலுவலகத்தை நிர்மாணித்திருக்கிறது.

இது பற்றி விழிப்புணர்ச்சியை உருவாக்க வீடியோ மூலம் கிராமங்களிலும் பள்ளிகளிலும் பாடம் நடத்துகிறது.

போஸ்டர்கள், மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் கோவில் மரங்களையும் கோவில் குளங்களையும் காப்பாற்ற மக்களை தூண்டுகிறது.

வனதேவதை என்ற பெயரில் கோவில்காடுகள் பற்றி சிறு திரைப்படம் ஒன்றை எடுத்திருக்கிறது.

ஸ்தல விருட்சங்களையும் கோவில் காடுகளையும் பற்றி சர்வே மற்றும் ஆய்வு செய்கிறது.

சுற்றுச்சூழல் காப்பாற்றும் பாரம்பரியம் – தமிழ் முறை என்பதைப் பற்றி செப்டம்பர் 1996இல் கருத்தரங்கும் பொருட்காட்சியும் நடத்தியது. அங்கு படிக்கப்பட்ட படைப்புகளே இவை.

ஒரு கிராமத்தின் கோவில்காடு சீரமைக்கும் பணியை எடுத்துக்கொள்ளும்போது, அருகாமையில் இருக்கும் கிராமத்தின் மக்களும் தங்கள் கிராமத்தின் கோவில்காட்டையும் சீரமைத்து தரும்படி வேண்டிக்கொள்வது திருப்தி அளிக்கும் ஒரு விஷயம். பெரும்பாலும் இந்த உதவி செடிகளைத் தருவதும், இன்னும் சில தொழில்நுட்ப செய்தி உதவிகளும்தான். இந்த மையத்தின் பாதுகாப்பு முயற்சிகள் இன்னும் பல கிராமங்களில் தோன்றுவதும் திருப்தி அளிக்கிறது. அங்கிருக்கும் சிறு கிராம சமூகங்கள் சிறிய அளவு காடுகளை காப்பாற்றவும், அதற்குள் தண்ணீர் மற்றும் தாவரங்கள் மூலம் வேலியிடுவது ஆகியவையும் உருவாவதால் இவற்றை கண்காணிக்கும் வேலைகள் குறைகின்றன. கிராம மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மரம் செடி கொடிகள் அந்தந்த பிராந்திய முக்கிய தாவரங்கள். இப்படி காப்பாற்றப்பட்ட எந்த காடும் அங்கிருக்கும் ஆடு மாடுகளால் அழிக்கப்படவில்லை என்பதும் சுவாரஸ்மான விஷயம். கிராம மக்கள் தீவிரமாக இந்த ஆடு மாடுகளை அந்த காடுகளுக்குள் செல்லவிடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். அப்படி தவறி செல்லுபவர்களை தீவிரமாகவும் தண்டிக்கிறார்கள்.

இந்த மையம், மத்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் வளம் சார்ந்த அமைச்சகத்துடன் நெருங்கிப் பணியாற்றி இந்த கோவில்காடுகள் பற்றிய தேசிய கொள்கை ஒன்றை உருவாக்க வேலை செய்து வருகிறது.

கோவில்காடுகள் மற்றும் ஸ்தல விருட்சங்கள் ஆகியவை இந்திய மக்களின் தன்னார்வ பாரம்பரிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகள். இவை மாவட்ட, மாநில மத்திய அரசாங்கத்தின் கீழே வரக்கூடாது. அல்லது காடுவள அமைச்சகங்களின் கீழேயும் வரக்கூடாது. அப்படிப்பட்ட ஒரு முயற்சி மக்களை இந்த காடுகளிலிருந்து அன்னியப்படுத்திவிடும். அப்படியானால், இன்று கிராம மக்கள் தாங்களாக முன்வந்து காடுகளை பாதுகாக்கும் முயற்சிகளிலிருந்து விலகிவிடுவார்கள். கிராம சமூகங்களை வளப்படுத்துவதும், அவர்களுக்கு இதற்கு தேவையான கல்வியை அளிப்பதுமே நாம் செய்யக்கூடியவை. இந்த காடுகள் கடந்த காலத்திலிருந்து எதிர்காலத்துக்கு செல்லும் நம் இயற்கை வளத்தின் மிச்ச சொச்சம். இப்படிப்பட்ட ஒரு இயற்கை காடுகள் அழிவது முக்கியமான மரபணு பாரம்பரியத்தை இழந்து மாபெரும் சுற்றுச்சூழல் நசிவுக்கே இட்டுச்செல்லும்.

கோவில்காடுகள் என்னும் இது பல கோடிக்கணக்கான வருடங்களாக இருந்துவரும் இயற்கை வளத்தின் மரபணு குளமாகவும் அது பாதுகாப்பாக இருக்கும் ஒரு முறையாகவும் நம்முடன் வந்திருக்கிறது. இத்தோடு தெய்வத்தின் மீதான நம்பிக்கையையும் இணைத்திருப்பது, இயற்கையோடு நமது பின்னிப்பிணைந்த வாழ்வை காப்பாற்றுவதன் முக்கியத்துவத்தை இன்னும் அழுத்தமாக வெளீப்படுத்துகிறது. மக்கள்தொகை பெருக்கமும், அதிவிரைவாக வரும் நுகர்பொருள் கலாச்சாரமும், நம் இயற்கை வளத்தை மிகவும் மோசமான தாக்குதலுக்கு உள்ளாக்கிவிட்டிருக்கின்றன. அறிவியல்ரீதியான அணுகுமுறையும், விழிப்புணர்வும், நம் மக்களை இயற்கையோடு இணைந்த வாழ்வுக்கு வைத்திருக்கும். இந்த இந்திய பாரம்பரியம் காப்பாற்றப்பட்டு இந்த இயற்கை வளம் நம் எதிர்காலச் சந்ததியினருக்கு தொடர்ந்து எடுத்துச் செல்ல உதவ வேண்டும்.

***

Series Navigation

author

டாக்டர் நந்திதா கிருஷ்ணா

டாக்டர் நந்திதா கிருஷ்ணா

Similar Posts