தங்கம் மனோரமா – மணிப்பூரில் இந்திய ராணுவத்தினரின் அத்துமீறல்

author
0 minutes, 11 seconds Read
This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

திண்ணை


கீழ்க்கண்ட வலைப்பக்கத்தில் தங்கம் மனோரமா என்ற மணிப்பூர் பெண்ணை நள்ளிரவில் கைது செய்து அவளை மானபங்கப்படுத்தி சித்திரவதை செய்து கொலை செய்து வீசியிருப்பதையும், இந்தப் பிரச்னையின் வரலாற்றையும் காணலாம்.

http://www.e-pao.net

http://www.e-pao.net/epPageExtractor.asp ?src=related_news.timeline_Manorama_killing_2004.html

சூலை 12 ஆம் தேதியன்று சங்கை எக்ஸ்பிரஸ் செய்திப்படி, அஸ்ஸாம் ரைபிள்ஸ் சூலை 10இல் தங்கம் மனோரமாவை கைது செய்தது. அடுத்த நாள் அவளது மோசமாக காயப்பட்ட உடலை கெய்ரோ வாங்பாம் சாலையில் மக்கள் கண்டார்கள். அஸ்ஸாம் ரைபிள்ஸ் பிரிவும், தங்கம் மனோரமா என்ற தடை செய்யப்பட்ட பி எல் ஏ தலைவரை கைது செய்ததாகவும் அவர் தப்பிக்க முயன்றபோது கொன்றதாகவும் குறிப்பிட்டது.

சூலை 12 ஆம் நாள் மணிப்பூர் இளைஞர் அமைப்பு (Manipur Forward Youth Front )ராணுவத்துக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தது.

13ஆம் தேதி மணிப்பூரெங்கும் போராட்டம் வீதிக்கு வந்தது.

14 ஆம் தேதி காங்கிரஸ் முதலமைச்சர் ஓ இபோபி பிரதமரிடம் இது பற்றி பேசினார்.

14ஆம் தேதி நீதி விசாரணை உத்தரவிடப்பட்டது.

15 ஆம் தேதி நீதி விசாரணை காலம் கடத்தும் உத்தி என்றும், அஸ்ஸாம் ரைபிள்ஸ் கூறும் கதை நம்பமுடியாதது எனவும், போடா சட்டத்தை மணிப்பூரிலிருந்து நீக்க வேண்டும் என்றும் மணிப்பூர் தலைவர்கள் கருத்து தெரிவித்தார்கள்.

15ஆம் தேதி நிர்வாணமாக சில மணிப்பூர் பெண்கள் ‘இந்திய ராணுவமே எங்களை கற்பழி ‘ என்று ஆங்கிலத்தில் எழுதபப்ட்ட வாசகங்களுடன் மணிப்பூர் ராணுவ முகாமுக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்

17ஆம் தேதி மணிப்பூரில் இருக்கும் நாகா அமைப்புக்களும் இந்திய ராணுவத்துக்கு எதிராக போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார்கள்

18ஆம் தேதி மணிப்பூர் பிராந்திய பிஜேபி இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, ராணுவம் மாநில தலைமையின் கீழ்தான் செயல்படுவதால், மணிப்பூர் முதலமைச்சரும் மற்றவர்களும் பொறுப்பேற்கவேண்டும் என்று கோரியது பாராளுமன்றத்தில் இந்தப் பிரச்னையை பாஜக மத்திய தலைவர்கள் பேசுமாறு அது பாஜக தலைமையை கோரியுள்ளது.

மணிப்பூர் இளைஞர் அமைப்பு Armed Forces Special Powers Act சட்டத்தை மணிப்பூரிலிருந்து நீக்குவதாக முதலமைச்சர் அறிவிக்க வேண்டும் என்றும் அவ்வாறு அறிவிக்காவிடில் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்திருக்கிறது.

18ஆம் தேதி முதலமைச்சர் Armed Forces Special Powers Act சட்டம்பற்றியும் பொதுக்கருத்து உருவாக்க வேண்டியும் அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை கூட்டினார். ஆனால் 12 கட்சிகளில் எந்தக் கட்சியும் இது பற்றி முடிவெடுக்கத் தயங்குகின்றன. இந்த சட்டத்தை வைத்துக்கொண்டு அதில் இருக்கும் குறைபாடுகளை நீக்கி இது போன்றதொரு நிகழ்ச்சி இனிமேல் நடக்கா வண்ணம் சரி செய்யப்பட வேண்டும் என்று பல கட்சிகள் கருத்து தெரிவித்தன. மனோரமா கொலையை கண்டனம் செய்ததோடு, மனோரமா கொலைக்குக் காரணமான அனைத்து ராணுவத்தினரும் தீவிரமாகத் தண்டிக்கப்படவேண்டும் என்று கோரியிருக்கின்றன. முன்னாள் முதலமைச்சர் தோரேந்திரா அவர்கள், இங்கு இருக்கும் ஊரடங்கு உத்தரவை நீக்கி மெல்ல மெல்ல சாதாரண நிலைக்குக் கொண்டுவந்து பின்னர் Armed Forces Special Powers சட்டத்தையும் நீக்கவேண்டுவதே சரியானது என்று கூறியிருக்கிறார்.

Series Navigation

Similar Posts