டபுள் இஞ்ஜின்

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

உஷாதீபன்இருவரும் வேலை பார்க்கும் வீடுகளில் எண்ணிலடங்காத பிரச்னைகள்! நான் எதைச் சொல்ல வருகிறேன் என்பதை நிச்சயம் ஊகம் செய்திருப்பீர்கள். கணவன்-மனைவி both employed பிரச்னைதான்.
�அவருக்கென்னப்பா டபுள் இஞ்ஜின்��
�சம்பளத்தை வாங்கி;க்கொண்டு போய் அப்படியே பாங்க்லதானே போடப் போறீங்க..� �அந்தோ, நம்ம மானேஜர்ட்டக் கேளப்பா�அவுருதான் ரெண்டு சம்பளக்காரரு�� –இப்படிப்பலவிதமான உரையாடல் பகுதிகளை அலுவலகங்கிளிலும், இன்ன பிற இடங்களிலும் பலரும் கேட்கக்கூடும்.
இவர்களுக்கெல்லாம் கண்ணில் பளீரெனத் தெரிவது வாங்கும் சம்பளம் மட்டும்தான். ஆனால் வீடுகளில் என்னென்ன மாதிரியெல்லாம் �லோல்� படுகிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்?காலையில் படுக்கையை விட்டு எழுவது முதல் இரவு படுக்கைக்குச் செல்வதுவரை — பெரும்பாலும் ஏன் முழுவதுமே �என்று கூடச் சொல்லலாம். ஆண்கள் இப்பொழுது வீடுகளில் வேலை செய்யக் கிளம்பிவிட்டார்கள். இது இருவர் வேலை பார்க்கும் வீடுகளில் சர்வ சாதாரணம். அதுதான் உண்மை.
ஆண்கள் காலையில் வாசல் தெளிக்கிறார்கள். முன்பெல்லாம் சாணம் கரைத்துத் தெளிப்பார்கள். இப்பொழுது அந்தப் பழக்கம் இல்லை. கொஞ்சம் கௌரவமாக இருப்பதுபோல் Nஉறாஸ் பைப்பைக் கையில் பிடித்துக்கொண்டு தண்ணீரைப் பீறிட்டு அடிக்கச் செய்து தெளித்து முடிக்கிறார்கள். கையில் விளக்குமாரை எடுத்துக்கொண்டு பெருக்குகிறார்கள்.
டிகாக்ஷன் போடுகிறார்கள். பால் காய்ச்சுகிறார்கள். காபியைக் கலந்து குடித்துவிட்டு �ஆளைவிடு� என்று போய் விடுகிறார்கள். இன்னும் வெந்நீர் போடுவது, காய்கறி நறுக்குவது, தேங்காய் உடைப்பது, சாதத்திற்குக் குக்கர் வைப்பது- என்று சொல்லிக்கொண்டே போகலாம். �நளபாகம்�னுதானே சொல்லி வச்சிருக்காங்க�.என்று சொல்லிக்கொண்டே என் வீட்டில் பல நாட்கள் நானே சமைத்து விடுகிறேன்.
அதுதான் உண்மை. என்ன தவறு? என்று கேட்பதற்கு ஒன்றுமில்லை.
அவரவர் மனதுபோல், அல்லது மனதை, நடைமுறையை – இணக்கமாய் மாற்றிக்கொண்டு சுமுக சூழலை ஏற்படுத்தி-இதமாய் நாட்களை நகர்த்தும் பொழுதுகளில் பிரச்னைகள் என்று பார்த்தால் காலத்தின் கட்டாயத்தில் உருவாபவைதான்.
மனைவியினுடைய தாயாராகட்டும், தந்தையாகட்டும், கணவனுடைய தாய், தந்தையராகட்டும் அவர்கள் ரொம்பவும் வயசாளிகளாய் இருந்தால் தனியே விட்டு விட்டுப்போவதில் அத்தனை பயமிருக்கிறது.
காலையில் ஆபீஸ் போனால் மாலையில் பொழுதடைந்து வீடு திரும்புகையில், இருவருமே வேலை பார்க்கும் வீடுகளில் திடீரென அவர்களுக்கு உடம்புக்கு ஏதாவது வந்து விட்டால் ? என்ன செய்வது? மனது பூராவும் வீட்டிலேயே இருக்கிறது. ஆபீஸில் வேலை ஓட மாட்டேன் என்கிறது.
நகர்ப்புற வாழ்க்கையில் அவரவர் பாடு அவரவருக்கு என்று ஆகிப் போனது. பக்கத்து வீட்டுக்காரர்களோடு என்ன பேசினாலும் ஒட்டமாட்டேன் என்கிறது. அந்தந்த வீடுகளில் ஆண்கள் வேலைக்குப் போனதும், (இருவரும் வேலைக்குப் போவதுமான வீடு இந்தக் கணக்கில் வராது) வீட்டில் இருக்கும் பெண்கள் கதவை உட்புறமாய்ப் ப+ட்டிக்கொண்டு, திரையை இழுத்து விட்டு விட்டு உள்ளே டி.வி.முன்னே அமர்ந்துவிடுகிறார்கள். தெருவில் இடியே விழுந்தாலும் தெரியாது இவர்களுக்கு.இதே போல் பள்ளிக்கூடம்வி;ட்டு வரும் குழந்தை, தானே வீட்டிற்கு வந்து தனியே எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட்டுவிட்டு வீட்டை உள்ளே பூட்டிக்கொண்டு தூங்கி எழுந்து வடீ ;டுப் பாடம் எழுதி எல்லாம் செய்து முடித்து விடுகிறார்கள். இவர்களுக்குத் துணை டி.வி.யில் வரும் மனிதர்கள்தான். அவர்கள் கற்றுக்கொடுக்கும் கோபம்,பொறாமை, அடிதடி, போன்றவைதான். இந்த சிரமம் ஒருவர் வேலை பார்க்கும் வீடுகளில் உண்டா?
எனக்குத் தெரிய எத்தனையோ வீடுகளில் மதியத்திற்கு மேல் தனியே இருக்கும் குழந்தைகள் அடுப்பு மூட்டி அம்மா சொன்னதுபோல் – சொல்லிக்கொடுத்தது போல் குழம்பு ரசத்தை, இரவில் ஊசாமல் இருக்க வேண்டும் எனச் சுட வைத்து இறக்கி- பால் காய்ச்சி- காபி போட்டுக் குடித்து எல்லாமே முடித்துவிடுகின்றன. இந்ம நிலை ஒருவர் வேலை பார்க்கும் வீடுகளில் உண்டா?
இதனால் குழந்தைகளுக்குத் தாய் தந்தையர் மேல் பாசமோ, ஒட்டுதலோ இல்லாமல் போய்விடுகின்றது என்று சொல்பவர் உண்டு. அது குழந்தைகளோடு சேர்ந்து நாம் இருக்கும் பொழுதுகளில் எப்படியிருக்கிறோம் என்பதைப் பொறுத்த விஷயம்.
பெண் என்றால் அவளும் மனுஷிதானே? என்கின்ற மனிதநேய உணர்வில், நம் மனைவிக்குச் செய்யாமல் வேறு யாருக்குச் செய்வது? நம் வீட்டிற்குத்தானே செய்கிறோம்? முகம் தெரியாத பலருடன் – வெளியே- சமரசம் செய்து கொண்டு செல்லும்பொழுது அலுவலகத்தில் பலருடனும் அதிகாரியுடனும் பலவகைகளில் வளைந்து கொடுத்துக் கொண்டு போகையில் – வீட்டில் நெருடுவதில் என்ன பெருமை இருக்கிறது ?
இன்றைக்குப் பெரும்பாலும் இரண்டு குழந்தைகள், அதுகூட இல்லை ஒரு குழந்தைதான் அநேக வீடுகளில்.
�மொத்தமே மூணுபேர்தானே? இதுக்கு வேலை செய்ய முடியாதா? என்று கேட்போரும் உண்டு. குறிப்பாக மூத்த தலைமுறைப் பெரியோர்கள் . மூன்று பேரானாலும் அதற்கும் வளமாய் வேலை இருக்கத்தான் செய்கிறது. காலை ஒன்பதரைக்குள் எல்லாவற்றையும் முடித்தாக வேண்டும் எனும் பொழுது அது டென்ஷனாகிறது. மனைவியை ஸ்கூட்டரின் பின்னே உட்கார வைத்து, போகும் வழிக்கு ஆபீஸில் இறக்கி விட்டு, தானும் போகிறவன் பாடு கொஞ்சம் பரவாயில்லை. இதில் டூவீலர் ஓட்டத் தெரியாதவன் பாடு திண்டாட்டம்தான். பத்து மணி ஆபீசுக்கு, எட்டரைக்கும் ஒன்பதுக்கும் கிளம்ப வேண்டி வந்துவிடும். சென்னை போன்ற பெரு நகரங்களில் டூ வீலர் இருந்தும் பயனி;ல்லை. அது வீவு நாளி;ல் ;கோயில் போக, பக்கத்துக் கடை கண்ணிக்குப் போக- அவ்வளவுதான். ஆபீசுக்கு உதவாது.
வெகு தூரத்திலிருக்கும் ஆபீசுக்கு அல்லது வெளிய+ருக்கு என்று கிளம்பும் கணவன்மார்கள் முன்னதாகப் புறப்படும்பொழுது அவனுக்கு டிபன்.சாப்பாடு, அதன் பிறகு தனக்கு டிபன் முடித்து, சாப்பாடு எடுத்து வைத்துக்கொண்டு, கதவு கதவாக வடீ ;டை அடைத்துப் பூட்டிக் கொண்டு நடந்து பஸ் ஸ்டாப்பை அடைந்து பஸ் பிடித்து அலுவலகம் போகும் மனைவிமார்கள் பாடு சொல்லி மாளாது! பாவமில்லையா அவர்கள்?
�பாவம்னா? ரெண்டு சம்பளம் வருதுல்ல? சும்மாவா?�-இப்பொழுதும் இதே பாட்டுத்தான். ஒருவகையில் இதில் பொறாமையான எண்ணமோ? என்றுகூடத் தோன்றும். இம்மாதிரிக் கேள்வி கேட்பவர்களை, யார் வேலை பார்க்கும் பெண்ணைக் கட்டிக் கொள்ள வேண்டாம் என்று சொன்னது என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?
�அம்மா, என்னம்மா பீரோவைப் பூட்டாமலேயே ;போயிட்ட? சாவி அதுலேயெ தொங்குது பார்?�
�அப்பா, இன்னைக்கு நீதானே வீட்டிலே இருந்தே? ஃபேனை ஆஃப் செய்யாமலேயே போயிருக்க பார்? அவசர அவசரமா வெளியிலே கிளம்பினா எல்லாருக்கும்தான் தப்பு வரும். அம்மாவை மட்டும் திட்டறே?�பையன் கேட்கிறான் சுள்ளென்று.
ஓடிய டி.வி. நிறுத்தப்படவில்லை. திறந்த குழாய் மூடப் படவில்லை. ;போட்ட லைட் அணைக்கப் படவில்லை.
இதெல்லாம் கவனக் குறைவு. அதுக்கென்ன செய்றது? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது? வெளியே தெரியும் மெப்பனையான பண வரவு என்பது வேறு. நடைமுறையே வேறு என்கிறேன் நான். சின்னச் சின்னதாக எத்தனையோ சிரமங்கள் என்பதுதான் உண்மை.
இவற்றையெல்லாம் முழுமையாக உள் வாங்கிக் கொண்டு � நேக பாவத்தோடு � எந்நேரமும் மலர்ந்த முகத்தோடு �காரியங்களை � கடமைகளை � நடத்திச் செல்பவன் புத்திசாலி.
காசு என்பது வாழ்க்கையின் ஒரு காரணி..
அதுவே வாழ்க்கையல்ல. இரு சம்பளக்காரர்கள் வீட்டில் – அதற்கு ஏற்றாற்போல � செலவும் தேவைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அல்லது உற்பத்தியாகின்றன.
ஆனாலும் ஒன்று–
நண்பர்கள் வந்தால் பேசிக்கொண்டே புறப்பட்டுப்போய் – டீக்கடை வாசலில் நின்று � புதுத்தூள் அடிச்சு நல்லாப் போடுங்க- என்று மகிழ்ச்சியாய்ச் சொல்லிவிட்டு-தயங்காமல் பைக்குள் கைவிட்டு காசை எடுத்து நீட்ட உதவுகிறதே- அந்த திருப்திக்கு ஈடே இல்லை. அது மட்டும்தான் திருப்தி இதில். வேறு பெரியதாய் ஒன்றும் கோட்டை கட்டிவிடப் போவதில்லை இருவர் பணியில். சின்னச் சின்னதாய் பிரச்னைகள் ஆயிரம். ஓடி ஓடிச் செய்துகொண்டே இருக்க வேண்டும் .
சலிக்காமல்,சுணங்காமல்!


Series Navigation

உஷாதீபன்

உஷாதீபன்