ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி!

This entry is part [part not set] of 53 in the series 20041125_Issue

சோதிப் பிரகாசம்


திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்!

‘துக்ளக் ‘ குரு மூர்த்தி அவர்களின் கருத்துகளுக்கு எதிரான தோழர் ஜோதிர்லதா கிரிஜாவின் எழுச்சி இயல்பானது; மிகவும் அவசியமானதும் கூட!

மதங்களின் பெயரால் சமுதாயத்தில் விதைக்கப் பட்டு வந்து இருக்கின்ற அனைத்து மூடங்களும் குறி வைத்துத் தாக்கிக் கொண்டு வந்து இருப்பது பெண்களைத்தான்! பெண்கள் அடிமைப் படுத்தப் பட்டு இருக்கின்ற எந்த ஒரு சமுதாயமும் முன்னேற்றம் அடைந்து இருப்பதாக வரலாறும் இல்லை.

தாய்மார்களின் எழுச்சி மட்டும் இல்லை என்றால், ஏழை-எளிய குடும்பத்துப் பிள்ளைகள் யாரும் வாழ்க்கையில் எழுந்து வந்து இருக்க முடியாது என்பதுதான் அனுபவ வாழ்க்கையின் கரசியம்!

பெண்களின் சமன்மை உரிமையினை மறுதலித்துக் கொண்டு வருகின்ற ஆண்கள் உண்மையில் மறுதலித்துக் கொண்டு வருவது தங்கள் பிள்ளைகளின் எதிர் காலத்தைதான்!

அன்புடன்,

சோதிப் பிரகாசம்

24-11-2004

sothipiragasam@yahoo.co.in

Series Navigation

சோதிப் பிரகாசம்

சோதிப் பிரகாசம்