சொற்புணர்ச்சி விளக்கச் சொற்கள் – 4

This entry is part [part not set] of 47 in the series 20060224_Issue

கரு.திருவரசு


கண்டுசொல் – கண்டுச்சொல்

கண்டுசொல், என்பதும் கண்டுச்சொல் என்பதும் வேறு வேறு பொருள்தரும் சொற்றொடர்கள். அவற்றின் வேறுபாடு தெரியாமல் பயன்படுத்தலாமா ? கூடாது.

‘கண்டு ‘ எனும் சொல் பெயர்ச்சொல்லாக வரும்போது நூற்பந்து, கற்கண்டு என்றெல்லாம் பொருள்படும். அதே ‘கண்டு ‘ வினைச் சொல்லாக வரும்போது ‘பார்த்து ‘ என்று பொருள்படும்.

‘சொல் ‘ என்பதற்கும் இஇரு வகையான பொருள்கள் உண்டென்றாலும் நாம் இஇங்கே காணும் சொற்புணர்ச்சி அல்லது ‘வலிமிகல், மிகாமை ‘ விளக்கத்துக்காக ‘மனத்தில் பட்டதை ஒளிக்காமல் சொல் ‘ என்று சொல்கிறோமே அதில் வரும் ‘வாயால் வெளிப் படுத்துதல் ‘ எனும் பொருளை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

‘அவர் சொன்ன சொல் கற்கண்டுபோல இஇனிமையாக இஇருந்தது ‘ என எழுதவேண்டுமானால், அல்லது சொல்ல வேண்டுமானால் அதைக் ‘கண்டுசொல் ‘ என எழுதக்கூடாது, அது தவறு. கண்டுசொல் என்பது ‘பார்த்துச் சொல் ‘ என்றுதான் பொருள்படும்.

அதேபோல, அதைக்கொஞ்சம் பார்த்துச் சொல் என்று எழுதவோ, அல்லது சொல்லவோ வேண்டுமானால் ‘கண்டுச்சொல் ‘ என்பதைப் பயன்படுத்தக் கூடாது, அது தவறு. ‘கண்டுச்சொல் ‘ என்பது இஇனிய சொல், கற்கண்டுச் சொல் என்றே பொருள்படும்.

கண்டுசொல் = பார்த்துச் சொல்

கண்டுச்சொல் = கற்கண்டுச்சொல்

—-

thiru36@streamyx.com

Series Navigation

கரு.திருவரசு

கரு.திருவரசு