செவ்வாய்: ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரின் கதை

This entry is part [part not set] of 15 in the series 20010707_Issue

ஜிம் பெல் & ஃபில் ஜேம்ஸ்


செவ்வாய் கிரகம் முன்னெப்போதும் இல்லாதது மாதிரி இந்த கோடைக்காலத்தில் பூமிக்கு மிக அருகில் வருவதால், வானத்தில் மிகவும் பிரகாசமாகத் தெரியும். செவ்வாய் பூமிக்கு அடுத்த கிரகம். அது சூரியனைச் சுற்ற 687 நாட்கள் ஆகின்றது. பூமி சூரியனுக்கு அருகில் இருப்பதால், அது வேகமாக சூரியனைச் சுற்றுகிறது. ஆகவே சுமார் 26 மாதங்களுக்கு ஒருமுறை, பூமியும் செவ்வாயும் மிக அருகில் வருகின்றன. பின்னர் பூமி செவ்வாயை விட அதிக வேகத்தில் அதைக் கடந்து செல்கிறது. இது நடக்கும் போது, செவ்வாய் ‘எதிர்ப்பில் ‘ ‘opposition ‘ இருக்கிறது என்று சொல்வார்கள். ஏனெனில், அது நம் பூமியின் வானத்தில் சூரியனுக்கு எதிர்த்திசையில் இருக்கும். இந்த சமயங்களில் செவ்வாய் மிகவும் பிரகாசமாகவும், பெரியதாகவும் தோன்றும். செவ்வாய் ஒரு நீள்வட்டப் பாதையில் சுழல்வதால், சில அருகாமைகள் மற்ற அருகாமைகளைவிட மிக அருகில் இருக்கும். அதாவது, 15 அல்லது 17 வருடங்களுக்கு ஒரு முறை, செவ்வாய் 56 மில்லியன் கிலோமீட்டர் அருகில் இருக்கும். தொலைவான அருகாமை 100 மில்லியன் கிலோ மீட்டர் அருகாமையில் இருக்கும்.

2001 ‘எதிர்ப்பு ‘ செவ்வாய் தான், செவ்வாய் பெரியதாகவும் பிரகாசமானதாகவும் இருக்கும் அருகாமை. (1988 இல்தான் இதுபோன்று பக்கத்தில் வந்தது செவ்வாய்). 1990இல் ஹப்பில் டெலஸ்கோப் துவங்கியதிலிருந்து இதுவே முதல் சிறந்த அருகாமை. சூன் 2001இல் செவ்வாய் மிக மிக அருகில் வந்தது. (68 மில்லியன் கிலோமீட்டர்கள்) விருச்சிக நட்சத்திர மண்டலத்தில் இது ஒரு நட்சத்திரம் போல பிரகாசமான சிவப்பு நட்சத்திரம் போல ஒளிர்ந்தது. மீதமான கோடைக்காலத்தில் இது வெளிச்சமாக சிவப்பு நட்சத்திரம் போல ஒளிர்ந்து கொண்டிருக்கும்.

இது ஹப்பில் டெலஸ்கோப் மூலம் செவ்வாயைப் பார்ப்பதற்கு சிறந்த தருணம். 15 கிலோமீட்டர் அளவுக்கு இருக்கும் எந்த விஷயத்தையும் தெளிவாகப் பார்க்க முடியும் அளவுக்கு ஹப்பில் டெலஸ்கோப் படங்கள் எடுக்கும். இது செவ்வாய் கிரகத்துக்கு 1960இலும், 1070இலும் செலுத்திய விண்கோள்கள் செவ்வாயை படம் எடுத்த துல்லியத்தோடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்பும் இப்போதும் செவ்வாய் விண்கலங்கள் செவ்வாயை படம் எடுக்காத அலைநீளங்களில் ஹப்பில் படம் எடுக்க உள்ளது. எனவே ஹப்பில் எடுக்கும் படங்கள் அறிவியல் பூர்வமாக செவ்வாயை அறிந்து கொள்வதில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் என எதிர்பார்க்கிறார்கள்.

ஹப்பில் எடுத்த படங்களை ஒன்று சேர்த்து நிஜ வர்ணத்துக்கு கொண்டு வந்து இங்கே படம் இருக்கிறது. இந்த கூட்டுப்படம் நீலம்( 410 நானோ மீட்டர்), பச்சை(502 நானோ மீட்டர்), சிவப்பு (673 நானோ மீட்டர்) கண்ணாடிகள் வழியாக எடுத்த படங்களை ஒன்று சேர்த்து நம் கண் மூலம் பார்த்தால் எப்படி இருக்குமோ அப்படி செவ்வாயை காண்பிக்கிறது.

இந்த செவ்வாய் ‘எதிர்ப்பில் ‘ ஹப்பில் எடுத்த இந்தப் படங்கள் மிகப்பிரமாதமானவை. சுவாரஸ்யமான விஷயங்களும், சுற்றுச்சூழல், வாயு மண்டலம் போன்ற விஷயங்களும் இதில் தெரிகின்றன. செவ்வாய், பூமியைப் போலவே, தினம் மாறும் வாயு மண்டலத்தைக் கொண்டது என்பதும் தெரிகிறது.

முதலில், செவ்வாயின் பரப்பில், பிரகாசமான சிவப்பு பிரதேசங்களும், கரும்பழுப்பு பிரதேசங்களும் இருப்பது தெரிகிறது. பிரகாசமான சிவப்பு, செவ்வாயில் இரும்பு ஆக்ஸைடு இருப்பதை காண்பிக்கிறது(துரு). பிரகாசமான இடங்கள் பழுப்பாவதும் பழுப்பான இடங்கள் பிரகாசமாவதும் வெகுகாலம் டெலஸ்கோப் வழியாக செவ்வாயைப் பார்ப்பவர்கள் அறிவார்கள். இது செம்புழுதிப் புயல் சுற்றிக்கொண்டிருப்பதைக் காண்பிக்கிறது. இது ஹப்பில் டெலஸ்கோப் வழியாகப் பார்க்கும் போது தெளிவாகத் தெரிகிறது.வட துருவத்தின் அருகில் ஒன்று சுற்றுகிறது. இரண்டாவது ஹெல்லாஸ் பள்ளத்தாக்குக்கு வடக்கில் இன்னொன்று சுழல்கிறது.

Series Navigation