செயற்கை கருப்பை – ஒரு வரம் தாய்மார்களுக்கு

This entry is part [part not set] of 42 in the series 20060505_Issue

ஸ்ரீஷிவ்


நம் சென்ற கட்டுரையில் சினைமுட்டைப்பை (ovary)மாற்று சிகிச்சை பற்றி பார்த்தோம் அல்லவா? இந்த கட்டுரையில் நாம் காண இருப்பது சினைப்பை(அ) கருப்பை(அ) கர்பப்பை எனப்படும் கருவை சுமக்கும் பையைப்பற்றி.இதுதான் நாம் போன கட்டுரையில் பார்த்த சினைமுட்டைப்பையை விட முக்கியமானது. குழந்தையை சுமப்பது, இதை மாற்றி பொருத்தும் கலை நம் நாட்டிற்கு மட்டும் வந்துவிட்டால், இந்தியாவில் மலடி என்ற வார்த்தை அழிந்துவிடும், இந்த கட்டுரையை கவனமாகப்படிக்கவும்.
தாய்மை என்பது எவ்வளவு புனிதமானது என்பது, அதனை அனுபவித்த , அனுபவிக்க காத்துக்கிடக்கும் பெண்களுக்கே அதிகம் புரியும், மருத்துவ ரீதியாக இதற்கு ஒன்றுமே செய்யமுடியாது, இது இறைவன் அளித்த சாபம், முன் ஜென்ம வினை என்று நினைத்து தன்னை நொந்துகொண்டிருக்கும் தாய்மார்களுக்கு நான் கூறிக்கொள்ள விழைவது, அந்த காலங்கள் கடந்துவிட்டன தாய்மாரே, இன்று உலகம் தன் அடுத்த பரிமாணத்தினை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றது, அதனைச்சுருங்கச்சொன்னால், முடியாது என்று நினைத்திருந்த எத்தனையோ விசயங்களுக்கு இன்று விடை கண்டிருக்கின்றான் மனிதன். தன் விஞ்ஞான மூளையின் மூலமாக, ஒரு காலத்தில் தீர்க்கவே முடியாத நோயாக பெரியம்மையை கூறுவார்கள், இன்று சுத்தமாக அந்த நோய் அழிக்கப்பட்டுவிட்டது, அதுபோல், இனி வரும் நாட்களில் குழந்தை இல்லை என்பதே இல்லை என்று ஆகும் காலம் நாம் வாழும் இந்த ஜென்மத்திலேயே கண்டு செல்வோம் என்றே தோன்றுகின்றது.

இப்பொழுது நாம் தலைப்பிற்கு செல்வோம், குழந்தை பெறுவதில் தாய்மார்கள் பெறும் பிரச்சனைகளை இரண்டு பெரும்பிரிவுகளாகப்பிரிக்கலாம், ஒன்று, தன் உடலில் கருப்பை இருந்து, தன் மாதாந்திர சுழற்சிகள் சரியாகவும் இருந்தபோதும், கணவனின் உயிரணுக்களின் எண்ணிக்கையோ அல்லது மனைவியின் உயிரணுவின் எண்ணிக்கையோ குறைவாக இருப்பின் இந்த பிரச்சனை வரலாம் , அல்லது, இரண்டாவதாக, கருப்பையே பிறவிமுதல் இல்லாமல், கருப்பை இருக்கவேண்டிய இடத்தில் ஒரு வெற்று சதைப்பட்டை மட்டுமே இருந்து , மாதாந்திர சுழற்சிகள் ஏதும் பெறாமல், இவை அனைத்தையும் தாண்டி கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளுள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ சேதமடைந்த நிலையில் குழந்தை பிறக்க பிரச்சனைகள் என்றோ, இருக்க வாய்ப்புகள் உண்டு.

இன்றைய விஞ்ஞானம் இதற்கான ஒரு அற்புதமான வழிமுறையை வரமாக நமக்கு கண்டளித்திருக்கின்றது. முதல் பிரச்சனைக்கு வழி, உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, செயற்கையாக மருந்துகளின் மூலம். மற்றும் ஒரு சாக்குப்பை போல உயிரணு உற்பத்தி தலத்தில் அவற்றை பிடித்து வைத்திருக்கும் சிஸ்ட்டுகளை (cysts) அங்கிருந்து நீக்குவதன் மூலம், கருவினை நன்கு வளரவிட்டு உறவின்போது விந்துடன் இந்த அண்டத்தினை இணையவிடுவதுடன் குழந்தை உருவாக வழி செய்யலாம். அல்லது கருவை செலுத்தி உறைத்தல் முறையில் (invitro fertilization) பலகீனமாக இருக்கும் தாயின் கருப்பையினுள் ஆணின் உயிரணுவை பலவந்தமாக ஒரு ஊசியின் மூலம் புகுத்தி இரண்டையும் இணையவிட்டு கருவை உருவாக்கி குழந்தை உருவாக்கலாம். அல்லது , இருவரின் உயிரணுக்களையும் வெளியே எடுத்து, உறைதல் மூலம் ஒரு சோதனைக்குழாயில் இணைத்து அதனை தாயின் கருப்பையினுள் மீண்டும் வைத்து வளரவைக்கலாம். இப்படி பல வழிமுறைகள் உள்ளன.

இப்போது இரண்டாம் வகையினரைப்பார்ப்போம், பிறப்பிலேயே கருப்பை இல்லாது இருத்தல், மாதாந்திர சுழற்சி இல்லாமலிருத்தல், கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகளூள் ஒன்றோ , அல்லது இரண்டுமோ பலஹீனமாகவோ அல்லது சேதமடைந்த நிலையிலோ இருப்பினும், குழந்தை உருவாக வாய்ப்புகள் உண்டு, முதலில் கருமுட்டை உற்பத்தி செய்யும் உற்பத்திப்பைகள் ஆங்கிலத்தில் ஓவரீஸ் (ovaries) என்று சொல்வர், பலவீனமாக இருப்பின் அவற்றினை தூண்டிவிட பல சிகிச்சைமுறைகள் வந்துவிட்டன, ஒரு தேர்ந்த மகப்பேறு மருத்துவரை அணுகினால் ஓவரி இண்டியூசிங் எனும் கரு உற்பத்தியை தூண்டுதல் முறைமூலம் உற்பத்திப்பையினுளளிருககும் கருமுட்டையை தூண்டிவிட்டு இனப்பெருக்கத்திற்கு அதனை தயார் செய்யலாம். அடுத்த வகையான கருப்பையே இல்லாமல் இருத்தல் என்ற வகைக்கு இப்போது அற்புதமான ஒரு மாற்று கண்டறிந்திருக்கின்றனர் விஞ்ஞானிகள், கருப்பை மாற்று சிகிச்சை, கேட்பதற்கு ஆச்சரியமாக இருக்கலாம் ஆனால் இது உண்மையாகிக்கொண்டிருக்கின்றது இன்று, நீங்கள் இந்த கட்டுரையை படிக்கும் சமயம் அது முழுமையடைந்திருக்கக்கூடும், நான் சமீபத்தில் கண்ட ஒரு ஆய்வறிக்கை , கிங் ஃபஹத் மருத்துவமணை, ஜெடா, சவூதி அரேபியாவில் இருக்கும் மருத்துவர்குழுவினர் வெற்றிகரமாக ஒரு கருப்பை மாற்று சிகிச்சையினை 2000,ஏப்ரல் மாதத்தில் ஒரு 26 வயது பெண்மணிக்கு 46 வயது பெண்மணி ஒருவரின் கருப்பையை மாற்றி வைத்து வெற்றிகரமாக சிகிச்சையினை முடித்திருக்கின்றனர், ஒரு 99 நாட்களுக்கு பின்னர் அவரின் ரத்தக்குழாயில் எற்பட்ட ஒரு சிறு அடைப்பினால் அதனை நீக்கவேண்டி வந்தாலும், அறுவை சிகிச்சை வெற்றி , மேலும் அது இயல்பாக இயங்கி வந்திருக்கின்றது, அவர்கள் தங்கள் ஆய்வில் கூறியது,
“”Our clinical results with the first human uterine transplantation confirm the surgical technical feasibility and safety of this procedure,” say the team of surgeons at the King Fahad Hospital and Research Center in Jeddah. They think refinements to the surgical procedure should overcome the blood supply problems.”

இதற்கான சுட்டி : http://www.newscientist.com/article.ns?id=dn2014
இந்த ஆய்வின் இறுதியில் சொல்லியது என்னவென்றால் இன்னும் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் (2000 ஆண்டில் இருந்து) இந்த ஆய்வு முழுமை பெற்றுவிடும் என்று, எனவே இந்த கட்டுரையை தாங்கள் படிக்கும் நேரம் அது முழுமை அடைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம்.இது தாங்களே குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பவருக்கே, சிறிது பரந்த மனப்பான்மை இருப்பவர்கள், வாடகைத்தாய் என்னும் முறையை கையாண்டு தங்கள் கருவினை ஒரு வாடகைத்தாயின் வயிற்றில் வைத்து வளர்த்து பெற்றெடுத்துக்கொள்ளலாம், அதனை சட்டப்படி உங்கள் குழந்தையாக்க தத்தெடுத்தல் முறைப்படியோ அல்லது தங்களே நேராக எடுத்துக்கொள்வதோ தங்கள் வசதி. பலர் கருப்பை இல்லை என்றால் முட்டை எப்படி உருவாகும் என்ற சந்தேகத்தினை கேட்கலாம், அதற்கு என் பதில், கருப்பை இல்லை என்றாலும் முட்டை உருவாகும், ஏனெனில் முட்டை உருவாவது சினைமுட்டைப்பைதானேயன்றி கருப்பை அல்ல.

மேலும், செயற்கை கருப்பை என்று ஒரு ஆய்வும் இணையாக நடந்து வருகின்றது, அதில் என்ன சொல்கின்றனர் எனில், செயற்கை இதயம், செயற்கை மூட்டு, செயற்கை கண் போல செயற்கை கருப்பையும் சாத்தியமான ஒன்று என்று விஞ்ஞானிகள் கூறி அவ்வாராய்ச்சியில் முக்கால் பகுதியை தாண்டிவிட்டனர்,

” (WebToday February 24, 2002)– Ms. Hung-Ching Liu has created artificial wombs that successfully “grew” human beings at Cornell University’s Center for Reproductive Medicine and Infertility. Liu implanted embryos left over from prior in vitro fertilizations and was able to get them to grow in the artificial uterus by using female growth hormones. Liu allowed the first batch of tiny humans to grow for six days before terminating them. Now he plans on “planting” new human beings in his artificial wombs with the intention of letting them grow for 14 days to see if they grow veins that connect them to the wall of the artificial wombs so they can begin developing vital organs.”

http://ecclesia.org/forum/Resources.asp?catid=6&cattitle=General+Articles&area=

அதே போல், அந்த மருத்துவர் ஹங்-சிங்-லியூ அவர்களின் ஆராய்ச்சி பற்றி பல மருத்துவ இதழ்கள் வெளியிட்டுள்ள கட்டுரைகளின் சுட்டிகள் கீழே :
http://www.thenewatlantis.com/archive/3/rosen.htm
http://www.mdrtl.org/site/Issues/Cloning/issues_cloning051231.htm
http://www.popsci.com/popsci/futurebody/dc8d9371b1d75010vgnvcm1000004eecbccdrcrd.html

மேலும் ஜப்பானிலுள்ள டோக்கியோ மாகாணத்தில் ஒரு மருத்துவர், யோசினொரி குவபாரா( Yosinori Kuwabara) சென்றவருடம் செப்டம்பர் மாதத்தில் இதுகுறித்து வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கைக்கு இந்த வரியை சுட்டவும்.

இது குறித்த மேலும் ஒரு சுட்டி : http://www.gnxp.com/MT2/archives/000867.html
விக்கி பீடியாவிலும் இதுகுறித்து ஒரு இணைப்பு உள்ளது அது : http://www.gnxp.com/MT2/archives/000867.html

சென்றவருடத்தின் நேச்சர் (இயற்கை) இதழ் தன் பதிப்பில், ஒரு புதிய மெம்ப்ரேனை (சவ்வு) விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பதாகவும் அது செயற்கை கருப்பை உற்பத்திக்கு தகுதியானது என்றும் வெளியிட்டிருந்தது, எனவே அந்த ஆராய்ச்சியும் இன்னேரம் முடிந்திருக்க வாய்ப்புண்டு,
இதனுடைய சாதக பாதகங்களைக்காண்போமானால் , பாதகத்தினை முதலில் சொன்னால் இதனால் பின்விளைவுகள் இருக்கும் என்று சிலர் அஞ்சுகின்றனர், அது இல்லை என்று கூறுகின்றனர் மருத்துவ அறிவியலாளர்கள், சாதகங்களை பார்ப்போமானால் ஒரு பெண்ணிற்கு தாய்மை எனும் ஒரு தன்மை கிடைக்கின்றது, இன்றும் கிராமங்களில் தாய்மை அடைந்தாலே ஒரு பெண் , பெண்ணாய் நிறைவடைகின்றார் என்ற ஒரு பேச்சு உண்டு, அது முற்றிலும் அழிக்கப்பட்டு மலடி என்ற பெயர் அகராதியிலிருந்துநீக்கப்படுகின்றது. இந்த பரிசோதனை இந்தியாவிற்கு ஏற்கனவே வந்துவிட்டதாகவும் ஒரு கேள்விவழி செய்தி வந்தது, அப்பல்லோ மருத்துவமணை சென்னை மற்றும் தில்லியிலும் இருப்பதாகக்கேள்வி. எனவே, தாய்மாரே கவலை வேண்டாம் இனி குழந்தை இல்லை என்று, தேடுங்கள் கிடைக்கும், உங்கள் குழந்தை உங்களீன் தேடலுக்காக உங்களுக்குள் காத்திருக்கின்றது, நீங்கள் தயாரா? உடன் செயல் படுங்கள், இன்னும் பல செய்திகளுடன் விரைவில் வருவேன், இதுபற்றி தங்களுக்கு தெரிந்த கருத்துக்களையும் என்னுடன் பகிர்ந்துகொள்ளலாமே?
வணக்கங்களுடன்,
ஸ்ரீஷிவ்…:)
ஆராய்ச்சி மாணவர்,
உயிர் இயந்திரவியல் துறை,
இந்திய தொழில்நுட்பப்பயிலகம்,
குவஹாத்தி,
அசாம், இந்தியா…
மின்னஞ்சல் : sivasankar.iitg@gmail.com


M.Sivasankar, Research Scholar, Dept of Mech Engg, IITG, Assam , India.
web: http://biosankar.4t.com

Series Navigation

ஸ்ரீஷிவ்

ஸ்ரீஷிவ்