சூரிய அஸ்தமனம்.
Published June 10, 2002 • By
ரமேஷ்
ரமேஷ்

வார்த்தைகள் தேய்த்த வாழ்த்து அட்டையல்ல
பேரண்ட வெளியில் கவிழ்ந்த இசை…
புணர்ச்சிக்குப் பின் தூங்கும் துணையினை
பார்க்கக் கிடைக்கும் கனிவு…
நிலத்தையும் வெளியையும் சேர்த்த
நிசப்தக் கோட்டிடை கரைந்து கரைந்து கரைந்தெழில…
ஆழமைதியில் கொடிழுத்து விளையாடும்
பெயரற்ற பறவை பின்னும் பின்னும்…
@ @ @
subramesh@hotmail.com