சுயநலம் !

This entry is part [part not set] of 35 in the series 20070927_Issue

சி. ஜெயபாரதன், கனடா


சுயநலம் நமது பிறப்புரிமை !
குருதியில் கலந்தது !
கூடப் பிறந்தது !
மனித ஆணிவேர் ஆவது !
சுதந்திரம் மனிதனின் இறப்புரிமை !
பறி போவது !
பற்றியும் பற்றாமல் போவது !
கடவுள் படைப்பில்
பெண் சுயநலம்
ஆண் பொதுநலம் !
சுயநலம் இல்லையேல்
பொதுநலம் இல்லை !
அன்னை தெரேஸா
அநாதை இல்லம் பொதுநலமா ?
அங்கே சுயநலம்
மனச் சாந்தி !
சுயநலம் வளர்பிறை !
பொதுநலம் தேய்பிறை !
சுயநலத்தின் நிழலே
பொதுநலம் !
நீர்க் குமிழியாய்
மேல் எழுவது சுயநலம் !
நுனி தெரிய
பனிப் பாறையாய்
மூழ்கிப் போவது பொதுநலம் !
புது ஒட்டுமாங்கனி !
நிரந்த மில்லை !
பொதுநலத்தைப் பிளந்துள்ளே
பார்த்தேன்
பதுங்கிக் கிடந்தது சுயநலம் !
சுயநலம் ஒரு செங்கல் !
பொதுநலம் ஒரு கோபுரம் !
வியப்பான தாஜ்மகாலை
பளிங்கில் கட்டியது
சுயநலமா ?
பொதுநலமா ?


S. Jayabarathan (jayabarat@tnt21.com) September 27, 2007

Series Navigation