சுட்டெரிக்கும் மனசாட்சி

This entry is part [part not set] of 50 in the series 20040812_Issue

பனசை நடராஜன்


சந்தோஷமே அவர்களின்
சர்வதேச மொழி !
சிரிப்பைத் தேனாகச்
சிந்துகின்ற இளமலர்கள் !
சருகானக் காட்சியினைக்
கண்டதற்கே நம்இதயம்
குண்டுவிழுந்த நகராய்
குலைந்து போனது !

இந்தக் கொடுமைகளை
இன்னும் கொஞ்ச நாளில்
மறந்து விட்டு
‘எந்த நடிகர் அரியணை
ஏறுவார் ? ‘ என்றும்,
சந்திரனும், சனியனும்
தக்க இடத்தில் ஒன்றாய்
வந்துவிட்டால் பெருகிடும்
வசதிகள்.. என்றும் பேசும்
மந்தபுத்திக் காரர்கள் நாம் !

அந்தச் சந்தடி நேரத்தில்
சந்தேகத்தைப் பலனாக்கி
சாதகமாய்த் தீர்ப்பு ‘வாங்கி ‘
வந்திடுவார் வெளியே
வஞ்சகப் படுபாதகர்கள் !

என்றாலும்..,
கொடுமைக்குக் காரணமாகிக்
கொலைகாரன் ஆனோமென்றக்
குற்ற உணர்விலிருந்துத்
தப்பவிடாமல் சுட்டெரிக்கும்
அவர்களை மனசாட்சி !!!

-பனசை நடராஜன், சிங்கப்பூர்.-
(feenix75@yaahoo.co.in)

Series Navigation