சீர்குலைந்த செர்நோபிள் அணுஉலை

This entry is part [part not set] of 25 in the series 20011222_Issue

சி. ஜெயபாரதன், கனடா

[ முன்னுரை: இச்சிறு கட்டுரையில் செர்நோபிள் விபத்துக்குப் பின் விளைந்த காட்சி முழுவதையும் எதிரொலிக்க நான் முயலவில்லை. கனடா, இந்தியா அணுஉலை நிலையங்களில் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றி இறுகிப் போன, எனது கடின நெஞ்சைச் சுட்டுக் காயப் படுத்திய தீவிர விளைவுகள் சிலவற்றை மட்டும், தமிழ் உலகுக்கு எடுத்துக் காட்டி இருக்கிறேன்]

ஆய்வின் போது அணுஉலை வெடித்தது

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி பழைய சோவியத் ரஷ்யாவில் கீவ் நகருக்கு அருகில் சோதனை நடத்தும் போது, செர்நோபிள் அணுஉலையில் அடுத்தடுத்து இரண்டு பயங்கர வெடிப்புகள் அதி காலையில் வானைப் பிளந்தன! அடுத்துப் பல மாதங்கள் அங்கே ஒரு பிரளயமே உருவெடுத்தது போல் மக்கள் திண்டாடித், திசை தெரியாமல் திக்கு முக்காடினர்! அணுசக்தி நிலையம் உடனே தீப்பற்றி, குப்பெனக் கிளம்பிய வீரிய கதிரியக்கம் அகில உலகமெங்கும் பாய்ந்து பரவியது! இதுவரை அணுவியல் சரித்திரத்திலே என்றும் நிகழாத மிகச் சீர் கேடான கோர விபத்தாய் இது கருதப் படுகிறது. 700 மைல்களுக்கு அப்பால் இருக்கும் ஃபின்லாண்டில் பூத்தள அளவைவிட கதிர்வீச்சு 10 மடங்கும், சுவீடனில்

5 மடங்கும் கதிர்மானிகள் திடாரெனக் காட்டவே, அவை எச்சரிக்கை மணி அடித்து முதன் முதலில் அகில உலகை எழுப்பிவிட்டன! முதல் சில நாட்கள் ரஷ்யா எதுவும் வெளியிடாது, மூடி மறைத்து மெளனமாய் ஒளிந்துகொண்டது! எரியும் அணுப்பிளவுத் துணுக்குகள் சிதறி மக்கள் நடமிடும் வீதிகளில் எறியப் பட்டன.

பல்லாயிரம் ராஞ்சன் கதிரியக்கம் சூழ்ந்து சிதைந்து போன அணுஉலைக் கட்டிடத்தில், அப்பாவி தீயணைப்புப் படையினர் 28 பேர் சில தினங்களில் மாண்டனர். விபத்தின் தீவிரத்தை நேரில் காணச் சென்ற 3 அணுஉலைப் பொறியாளர் கதிரியக்கத் துகள் மீது தெரியாமல் நடந்து மறுநாள் இறந்தனர். ரஷ்ய மேலதிகாரிகள் உடனே வெளியிடாததால், அருகில் வசிக்கும் குழந்தைகளும், ஆடவரும், பெண்டிர்களும், பலர் கதிர்வீச்சில் தாக்கப்பட்டனர். சில நாட்களில் ராணுவப் படையினர் அழைக்கப்பட்டு 20 மைல் சுற்றளவில் வாழும் சுமார் 135,000 பேர் வீடு, பொருள், வாகனங்களை அப்படியே விட்டுவிட்டுக், கைப் பையுடன் நூற்றுக் கணக்கான ராணுவ பஸ்களில் கட்டாயமாய்க் கடத்தப் பட்டு வேறு நகரில் குடியேற வேண்டிய தாயிற்று! காற்றில் பல்லாயிரம் மைல் பறந்து வந்த கதிரியக்கத் தூள்களை ஜப்பானில் இருந்த கதிர்மானிகள் கூடக் காட்டின!

விபத்தினால் நேர்ந்த கோர விளைவுகள்

அணுஉலை இயக்குநர் பலர் தெரியாமல் செய்த இமாலயத் தவறு களால், வெப்பசக்தி நூறு மடங்கு பெருகி, கட்டுப் படுத்த முடியாமல் நொடிப் பொழுதில் அணுஉலை வெடித்தது. நிலையத்தில் சில பகுதிகள் சிதைந்து தரை மட்டமாகி, முப்பது இடங்களில் தீப்பற்றி எரிந்தது! அணுப்பிளவுத் துணுக்கு கள் அரை மைல் தூரம் சிதறிப் பல்லாயிரம் ராஞ்சன் கதிரியக்கத்தை மானிடர், மாடுகள் மீது தூவின! அணுஉலை எரிக்கோல்கள் 30% எரிந்துருகி ஓடி, யானைக்கால் போல் தடித்து கீழ்த்தளத்தில் பாறையாகி விட்டது. வெடிப்பின் அதிர்ச்சியில் அணுஉலை மேலிருக்கும் கனமான 1000 டன் உறுதிக் கான்கிரீட் தடைமூடி வெளியே தூக்கி எறியப் பட்டது! நியூட்ரான் மிதவாக்கியான கரித்திரட்டு [Graphite] தீப்பிடித்து இடைவெளியில் வீரிய கதிர்கள் வெளியேறி, தீ அணைக்கும் அப்பாவி மனிதர்களைத் தாக்கின.

விபத்து நடந்த சில தினங்களில் 31 பேர் கதிரியக்கத்தால் மாண்டனர். அடுத்து 56 பேர் கதிர்வீச்சாலும், நெருப்பாலும் உடல்தோல் வெந்து, காயத்தில் வேத னைப்பட்டு, அவர்களில் 26 பேர் இறந்தனர். 237 பேர் நேர்க் கதிரடி மயக்கத்தால் [Acute Radiation Syndrome] உழன்றனர். மற்றும் மருத்து மனையில் ஆயிரக் கணக்கான கதிர் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை ரஷ்ய டாக்டர்கள் உடனே சிகிட்சை செய்தது, மிகவும் பாராட்டத் தகுந்தது. அந்தச் சமயம் சுமார் 100,000 குழந்தைகளின் தைராய்டு சுரப்பியைச் சோத்தித்து, புற்றுநோய் உண்டாக்கும் கதிர் அயோடின் [Radioiodine] இருக்கிறதா என்று பார்த்ததும் குறிப்பிடத் தக்கது. பக்கத்து நகர் பிரிபயாட் [Pripyat] மக்கள் 45,000 பேருக்கு, தைராய்டு கான்ஸர் தடுப்புக்குப் பொட்டாசியம் ஐயோடைடு வில்லைகள் தரப் பட்டன. எதிர்காலத்தில் இன்னும் 50-70 ஆண்டுகளில் அருகில் வாழ்ந்தோரிலும் அவரது பரம்பரையிலும் சுமார் 14,000 பேர் புற்று நோயில் மரணம் அடைவார் என்று கணக்கிட்டுச் சொல்லப்படுகிறது.

கதிரியக்கப் பொழிவால், 20 மைல் சுற்றளவுத் தளங்கள், வீடுகள், காடுகள், புல், பூண்டு, மரம் செடி, கொடி, ஆடு, மாடுகள், அவை தரும் பால், மற்றும் உணவு தானியப் பண்டங்கள், வீதிகள், நடை பாதை கள், யாவும் கதிர்த் தீட்டாகி [Radioactive Contamination] நகரிலும், கிராமங்களிலும் மக்கள் திக்கு முக்காடினர். அவற்றை எல்லாம் எப்படிக் கதிர்த்துடைப்பு [Decontamination] செய்தார்கள் என்பது ஒரு பெரிய கதை! அதை விவரிக்க இங்கு போதிய இடம் இல்லை! இறந்த தீஅணைப்புநரில் 21 பேர் [600-1600] ராடு கதிரடியும் [Rad Dose], மற்றும் 7 பேர் [400-600] ராடு கதிரடியும் பெற்றனர். இயக்குநர் ஒருவருக்கு [200-400] ராடு கதிரடி.

வெளியேறிய கதிரியக்கத் துணுக்குகளின் விபரம்: எல்லாவித நோபிள் வாயுக்கள் [Noble Gases] 100%, அணுப்பிளவுத் துணுக்குகள்: கீழ்-ஆயுள் [Short-Lived]

[10-20]%, நீள்-ஆயுள் [Long-Lived] 3.5%

அணுஉலை வெடித்ததற்கு மூல காரணங்கள் என்ன ?

தனித்தனியே 1000 MWe [3200 MWt] மின்திறம் உற்பத்தி செய்யும் ரஷ்ய மாடல் RBMK-1000 நான்கில் ஒன்றான நாலாவது நிலையத்தில்தான் இந்த விபத்து நிகழ்ந்தது. 1983 டிசம்பர் முதல் இயங்கிவரும் இந்த அணுஉலை 2% செழுமை யான யுரேனியம் ஆக்ஸைடு எரிக்கோல்கள் 1661 கொண்டது. நியூட்ரான் மித வாக்கி கிராஃபைட் என்னும் கரித்திரட்டு. நியூட்ரான் பெருக்கத்தைக் கூட்டிக் குறைத்து மின்சக்தியைக் கட்டுப் படுத்த ஆட்சிக் கோல்களும், அணுஉலை இயக்கத்தை நிறுத்தத் தடைக் கோல்களும், அபாயத்தைத் தடுக்க, காப்புக் கோல்களும் ஆக மொத்தம் 179 ஆணைக் கோல்கள் இருந்தன. அணுக்கருப் பிளவில் எழும் வெப்பச் சக்தியைக் கடத்தி, வெந்நீராகிக் கொதித்து, நேராக நீராவி எழும்பி, டர்பைனைச் சுழல வைக்க நீீர், தணிப்புத் திரவமாய்ப் பயன்படுத்தப் பட்டது. RBMK-1000 ‘கொதிநீர் அணுஉலை ‘ மாடலைச் சேர்ந்தது.

வருட முடிவில் பராமரிப்பு வினைகள் புரிய திட்டப்படி, அணுஉலை நிறுத்தப் படுவதற்கு முன், ஓர் ஆய்வுப் பணி ஏற்பாடானது. சுழன்று நிற்கப் போகும் டர்பைனில் எஞ்சிய யந்திரச் சக்தியைப் பயன் படுத்த ஒரு வழி தேடினார்கள். அபாய நேரப் பணி புரியும் டாசல் எஞ்சின், 20 வினாடிக்குள் துவங்கி இயங்குவதற்கு முன், ஆறும் அணுஉலை வெப்பத்தைத் தணிக்கும் சுழல்நீர்ப் பம்பு இரண்டை தொடர்ந்து ஓட்ட, இந்த எஞ்சிய மின்சக்தியைப் பயன் படுத்த முடியுமா என்று தெரிந்து கொள்வதே, இஞ்சினியர்களின் திட்டம்.

இந்த திட்டப் பணியை இஞ்சினியர்கள் அமுலாக்கும் போதுதான் இரண்டு பயங்கர வெடிப்புகள் நேர்ந்தன. வெப்ப மிகுதியாகி, நீராவி அழுத்தம் விரைவில் பெருகியதால், எழுந்தது முதல் வெடிப்பு ! அடுத்து அணுஉலை உலோகங்கள் எரிந்து, ஹைடிரஜன் வெளியாகி அருகில் கிடைத்த ஆக்ஸிஜனுடன் மூர்க்க

மாய் இணைந்ததால் உண்டானது, இரண்டாம் வெடிப்பு !

மானிடர் செய்த மாபெரும் தவறுகள்

RBMK-1000 அணுஉலை டிசைனிலே பல மூலக் கோளாறுகள் முதலிலேயே இருந்தன. வியன்னாவில் உள்ள அகில உலக அணுசக்தித் தலையக [International Atomic Energy Agency, Vienna] நாடுகள் கடைப்பிடித்த அணுஉலை டிசைன் மாடல்களையோ, விதிகளையோ, நியதிகளையோ ரஷ்ய அணுவியல் மேதைகள் ஏற்றுக் கொள்ளவில்லை!

அவசரமாக எப்படியாவது அன்றே சோதனையை முடித்திட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு முற்பட்டதால், சிலர் பொறுமையற்று நேர்விதி முறைகளை மீறினார்கள் . மேலும் சீரான முறைப்படி அணுகாது, சிந்தித்துப் பார்க்காமல், இஞ்சினியர்கள் குறுக்கு வழியில் போய், கட்டுக்கடங்கா திடார்ப் பூரண [Prompt Critical] தொடரியக்கத்தைத் தூண்டி விட்டனர். மனிதத் தவறில் ஆரம்பித்து, யந்திரப் பழுதுகளும் சேர்ந்து கொண்டதால், விபத்தின் விளைவுகள் பன்மடங்கு பெருகின!

ரஷ்ய அணுவியல் மேதைகள் கண்டறிந்த, மனிதரின் அபாயத் தவறுகள், ஆறு

1. மின்திறச் சோதனை செய்கையில், அணுஉலை வெப்பத்தைத் தணிய வைக்கும் அபாய நேர நீரோட்ட ஏற்பாட்டைத் தடுத்து நிறுத்தியது

2. அணுஉலை வெப்ப சக்தியை மிகக் கீழாக்கி, அணுஉலைக் கட்டுப்பாடு ஏற்பாட்டை நிலை தடுமாரச் செய்தது

3. சுழல்நீர்ப் பம்புகள் பலவற்றைத் துவக்கி, நீரோட்ட அளவு நியதிகளை முறித்தது

4. டர்பைன் நின்றவுடன் அணுஉலை இயக்கத்தைச் சுயமாகவே நிறுத்தும் ஏற்பாட்டைத் தடுத்தது.

5. நீர்மட்டமோ, நீராவி அழுத்தமோ அபாய அளவுக்கு ஏறும்போது, அணுஉலை இயக்கத்தை நிறுத்தும் சுய ஏற்பாடைத் தடுத்தது

6. ஆய்வுக்காக, அணுஉலை இயக்க தடுப்புக் கோல்கள் எல்லாவற்றையும் மேலே தூக்கி, திடார்ப் பூரண இயக்கம் எழக் காரண மானது

சிதைந்த அணுஉலையைப் புதைத்து நிரந்தர சமாதி நிறுவினர்

மூன்று சிக்கலான பிரச்சனைகள் இஞ்சினியர்களைப் பயமுறுத்தின! எரியும் தீீ! மீண்டும் மூர்க்கமாய் மீறி இயங்கப் போகும் புண்பட்ட அணு உலை! தொடர்ந்து பெருகும் கதிரியக்கம்! முதலில் தீயணைக்க மட்டும் இரண்டு மணி நேரம் ஆனது. அடுத்து கனல் பிழம்பான யுரேனிய உலோகங்களைக் குளிப்பாட்ட, குழாய்நீரை எவ்விதமும் உட்செலுத்த முடியவில்லை! இறுதியில் ஹெலிக்காப்டர் மூலமாகக் இவற்றைக் கொட்டினார்கள்: சுமார் 40 டன் போரான் கார்பைடு [நியூட்ரான்களை விழுங்கித் தொடரியக் கத்தை நிறுத்த], அடுத்து 2400 டன் ஈயம், 800 டன் சுண்ணாம்புக் கல், மணல், களிமண், சிமெண்ட் காங்கிரீட் ஆகியவற்றைக் கீழே கொட்டி, வெப்பத்தை ஆற்றி, கதிரியக்கத்தைக் குறைத்துக், கசிவையும், வீரியத்தையும் கட்டுப் படுத்தினர். இவ்வாறு கான்கிரிட் கோட்டைக் குள்ளே, செர்நோபிள் அணுஉலை நிரந்தரமாக அடக்கம் செய்யப்பட்டது!

அகில உலகில் நிகழ்ந்த மற்ற அணுஉலை விபத்துகள்

1979 ஆம் ஆண்டு மார்ச் 28 அமெரிக்காவில் ஹாரிஸ்பர்க் நகருக்கு அருகில் திரிமைல் தீவில் [Three Mile Island, TMI-2] பெரும் அணுஉலை விபத்து நிகழ்ந்தது. செர்நோபிள் போன்று தீவிரக் கதிரியக்கம் அகில மெங்கும் பராவா விட்டாலும், அணுஉலைக் கோட்டை அரணுக்குள்ளே பெருஞ் சேதம் உண்டானது! 100 டன் அணுஉலைக் கலன் [Reactor Core] சிதைந்து நொருங்கிச் சீர்குலைந் தது! அமெரிக்க சக்தித் துறையகத்தின் [U.S. Dept of Energy] கூற்றுப்படி, உஷ்ணம் 5000 C டிகிரி ஏறிப் பாதிக் கலன் உருகி இறுகி, 150 டன் உலைக் கலனின் உடைந்த குப்பைகளும், 50 டன் அணுஉலைக் கட்டடப் பகுதிகளும் முறிந்து கிடந்தனவாம்! TMI-2 நிலையத்தைச் செப்பனிட்டு கதிர்த் தீட்டைத் துடைத்து இயங்கவைக்க கிட்டத் தட்ட 20 ஆண்டுகள் ஆயின! விபத்தில் மனிதர்களுக்குக் காயமோ, அபாயமோ, மரணமோ நேரவில்லை.

1993 ஆம் ஆண்டு மார்ச் 31 அன்று இந்தியாவில் நரோரா அணு மின்சக்தி நிலையத்தில் ஓடிக்கொண்டிருந்த டர்பைன் ஏதோ ஓர் ஆணையால் தூண்டப்பட்டு நிற்கப் போகும் தறுவாயில், திடாரென ஓர் இடிச் சத்தம் கேட்டது! அத்தோடு ஆட்சி அறைத் தளம் [Control Room] பேரதிர்ச்சியில் ஆடியது! உஷ்ண வாயுக்களும் தூசியும் பறக்க, டர்பைன் தளத்தில் மின்சார ஜனனிக்கு அருகில் குப்பெனத் தீ எழும்பியது! இவ்விபத்து அணுஉலை உறுப்புச் சாதனங்களால் ஏற்படவில்லை. கதிரியக்க வெளியேற்றம் எதுமில்லை. மின்சக்தி உற்பத்தி செய்யும் பொதுப் பகுதிகள்ில் ஒன்றான டர்பைன் கீழ் அழுத்த நிலைச் சுழல்தட்டுகள் [LP Stage Rotor Blades] அதிர்வினால் உடைந்து, தீப்பொறிகள் கிளம்பி, ஜனனியில் உள்ள ஹைடிரஜன் வாயுடன் மூர்க்கமாய்த் தீப்பற்றிக் கொண்டதால் வெடிப்பு ஏற்பட்டது. தீவிபத்தால் பெருஞ்சேதம் விளைந்ததே தவிர, மனிதர்களுக்குக் காயமோ, அபாயமோ, மரணமோ நேரவில்லை. இது யந்திரத் தவறுகளால் விளைந்த பயங்கர விபத்து!

ஆனால் மின்சாரக் கம்பிகள் எரிந்து துண்டிக்கபட்டதால், இயக்குநர்கள் பணிபுரிய இயலாதவாறு, ஆட்சி அறை புகை மூண்டு இருண்டு போய் முடமானது! அபாய நேர மின்சக்தி அணுக முடியாமல், அணு உலை அபாயப் பாதுகாப்பு ஏற்பாடு, அபாயத் தணிப்புநீர் ஏற்பாடு, ஆறிய அணுஉலை வெப்பத் தணிப்பு ஏற்பாடு, கொதிஉலையின் துணை அனுப்புநீர் ஏற்பாடு யாவும் தடைப் பட்டு இஞ்சினியர்கள் தவித்தனர்! அதனால் விளைந்த சிக்கல்கள், பிரச்சனைகள் அநேகம்! நல்ல வேளை! அணு உலை வெப்பத்தைத் தணிக்க, உஷ்ணச் சுற்றுநீர் இயக்கம் [Thermo-Syphoning] உதவியது. மேலும் இயக்குநர் நேர் கண்காணிப்புடன் கை இயக்கத்தால் நியூட்ரான் விழுங்கும் நஞ்சைச் [Manual Poison Injection] செலுத்தி, அணுஉலையைக் கட்டுப் படுத்தினர்.

1952 ஆம் ஆண்டு டிசம்பர் 12 நாள் AECL சாக் ரிவர் ஆய்வுக் கூடத்திலுள்ள [AECL Research Laboratories, Chalk River, Ontario] NRX ஆய்வு அணுஉலையில் மனிதத் தவறால், திடார்ப் பூரண இயக்கம் தூண்டப்பட்டது. உலைக் கோல்கள் எரிந்துருகி கலன் வெடித்து கதிரியக்கத்தை வெளியாக்கி, தீவிரக் கதிர்த் தீட்டையும் உண்டாக்கியது. அவற்றைத் துடைத்து அணுஉலையைப் புதுப்பிக்க பல மாதங்களாயின. வெப்ப சக்தி 32 MWt திறமுடைய சிறு அணுஉலை யாதலால் விபத்தின் விளைவுகள் பெருகவில்லை. மனிதர்களுக்குக் காயமோ, அபாயமோ, மரணமோ நேரவில்லை.

செர்நோபிள் போல அமெரிக்கா, கனடா அணுஉலைகளில் அபாயம் நிகழுமா ?

கனடாவின் பெருநகர் டொரான்டோவுக்கு அருகில், 4000 MWe உற்பத்தி செய்யும், எட்டுப் பகுதிகள் கொண்ட பிக்கரிங் அணுசக்தி நிலையமும், 3200 MWe உற்பத்தி செய்யும், நான்கு பகுதிகள் கொண்ட டார்லிங்டன் அணுசக்தி நிலையமும், பெரிய ஏரிக்கும் நகருக்கும் அருகே, ஏன் அமைக்கப் பட்டுள்ளன, என்பது CN Tower போல் ஓங்கிய ஒரு கேள்விக் குறியே ? நகரில் மில்லியன் கணக்கில் மனிதர்! கடல் போன்ற அண்டாரியோ ஏரித் தண்ணீர் அவர்களுக்கு குடிநீர், குளிநீர், பயன்படும் நீர் எல்லாமே! சீரழிந்த செர்நோபிள் போன்று ஒரு விபத்து டொரான்டோ அருகிலே நேர்ந்தால் என்ன நிகழும் ? எத்தகைய தீங்குகள் விளையும் ? எப்படிப் பொது மக்கள் விபத்தைச் சமாளிப்பார்கள் ? ஏற்றுக் கையாளுவார்கள் ? எவ்வாறு அரசினர் பொறுப்பாக இதைக் கண்காணித்து எல்லாரையும் பாதுகாப்பார்கள் ?

இந்த வினாக்களுக்குப் பதில் கூறுவது கடினம்! மிகக் கடினம்!! மிக மிகக் கடினம்!!! செர்நோபிள் போன்று அபாய விபத்து நிகழ்ந்தால், நகர மக்கள் எவ்வித விதி முறைகளைக் கையாள வேண்டும் என்று அரசும், அணுஉலை மேலதிகாரிகளும் கூடிச் செயலாற்ற வேண்டியவை அநேகம்! அநேகம்!! அநேகம்!!!

அமெரிக்காவிலும், ஈரோப்பில் பிரான்ஸ், ஜெர்மனி, மற்றும் ஜப்பானிலும், செர்நோபிள் போன்று, ‘ கொதிநீர் அணுஉலைகளும் ‘ [Boiling Water Reactor], மற்றும் ‘அழுத்தநீர் அணுஉலைகளும் ‘ [Pressurised Water Reactor] கொண்ட 228 மின்சக்தி நிலையங்கள் இயங்கிக் கொண்டு வருகின்றன. கனடாவில் உள்ளவை ‘கான்டு ‘ [CANDU, CANada Deuterium Uranium] மாடல் அணுசக்தி நிலையங்கள். இந்தியவில் ஓடுபவை 12, பல கான்டு மாடல் அணுஉலைகள். மற்றும் இரண்டு கொதிநீர் அணுஉலைகளும் உள்ளன.

அமெரிக்காவில் 104 அணுசக்தி நிலையங்களும், கனடாவில் 14 அணுசக்தி நிலையங்களும், இந்தியவில் 12 அணுசக்தி நிலையங்களும், ஓடிக் கொண்டிருக் கின்றன. இந்த அணுஉலைகளின் அமைப்பும், உருவமும், அணுஉலைக் கட்டுப்பாடும், அபாய நேரப் பாதுகாப்பு சுய இயக்கங்களும், மனிதர் இயக்க முறைகளும் முற்றிலும் வேறு பட்டவை! அபாயப் பாதுகாப்புச் சுய இயக்கத்தை உறுதியாக முடிக்க, தனித்தனியாகக் கண்காணிக்கும், வேறுபட்ட, இரட்டை ஏற்பாடுகள் உள்ளன. இவைகள் பழுதில்லாமல் இயங்க அனுதினமும் பரிசோதிக் கப்படும். இயக்குநர் யாரும் இவற்றைத் தடுக்கவோ, பிரிக்கவோ, மாற்றவோ, துண்டிக்கவோ முடியாது. எல்லை மீறும் தொடரியக்கமோ, திடார்ப் பூரணமோ ஏற்பட்டு, வெப்பசக்தி கட்டுக் கடங்காமல் போகும் முன், சுயப் பாதுகாப்பு ஏற்பாடுகள் இரண்டும், தாமாகவே, மனித இடையூறு இல்லாமல், நியூட்ரான் விழுங்கி களை அணுஉலைக் குள்ளே நுழைத்து, உலையை உடனே நிறுத்தி விடும். இரண்டில் ஒன்று நிச்சயமாய் நிறுத்திவிடும்.

மேலே கூறப்பட்ட அணுஉலைகள் யாவும் நாலடி உறுதிக் கான்கிரீட் அரணுக்குள்ளே அடைக்கப் பட்டிருக் கின்றன. எப்படியோ அபாயம் நேர்ந்து, கட்டுக்கடங்கா கதிரியக்கத் துணுக்குகளும், வாயுக்களும் பொங்கி எழுந்தால், அவை செர்நோபிள் போன்று வெளியேறி அகிலமெங்கும் பரவா வண்ணம் உள்ளடக்க, கான்டு மாடல்களில் நாலடி உறுதிக் கான்கிரீட் சூன்யக் கோட்டை அரணும் [Vacuum Containment Building] அத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. கோட்டைக்குள் அடைபட்ட துணுக்குகள், வாயுக்களின் வெப்பத்தைத் தானாகத் தணிக்க ஒரு பெரிய நீர்த்தொட்டி வேறு, மழைபோல் பொழியத் தயாராக இருக்கிறது ! அமெரிக்க, ஈரோப் அணு உலைகள் எல்லாவற்றிலும் கோட்டை அரண் உள்ளது.

வட அமெரிக்க, ஈரோப் அணுவியல் நியதிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், செர்நோபிள் அணுஉலையின் அமைப்பு, கட்டுப்பாடு, பாதுகாப்பு முறைகள், இயக்க விதிகள், பயிற்சி முறைகள் யாவும் மிகவும் பிற்போக்கானவை! மேலும் அளவில்லா கதிரி யக்கத் துகள்களை உள்ளடக்க, கோட்டை அரண் எதுவும் கிடையாது. அந்தக் காலத்தில் ரஷ்ய டிசைன் இஞ்சினியர்கள் அதி முக்கியக் கோட்டைச் சுற்றரணைத் தேவையற்றதாகக் கருதினார்கள்!

செர்நோபிள் வெடிப்பிற்குப் பின் கற்ற பாடங்கள்

கடந்த நூற்றாண்டில் முப்பெரும் அணுவியல் விபத்துகள் நிகழ்ந்து உலகச் சரித்திரத்தை மாற்றி யுள்ளன. 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்கா ஜப்பானில் ஹிரோஷிமாவிலும், நாகசாக்கியிலும் அணுகுண்டைத் திட்டமிட்டு வெடித்து அளவில்லா கதிரியக்க வீச்சால் பல்லாயிரம் பேர் பல காலம் பாதிக்கப் பட்டனர்! இதனால் அணு ஆயுதப் பூதத்தின் கோரத் தோற்றம் உலகுக்குத் தெரிந்தது. அகில உலக விஞ்ஞானிகள் அணு ஆயுத வளர்ச்சியைத் தடுக்க முற்பட்டுத் தோல்வி அடைந்தனர்! அடுத்து 1979 மார்ச் 28 இல் அமெரிக்காவின் திரீமைல் தீவு TMI-2 அணுஉலையில் மானிடத் தவறால் விபத்து நேர்ந்து மக்கள் கதிர் வீச்சால் பாதிக்கப் படாவிட்டாலும், அணுஉலைக் கலன் சிதைந்தது. இதனால் ஆக்க வினைகளைப் புரியும் அணுசக்தி நிலையங்கள் தொடங்கப் பட்டவை பல உடனே நிறுத்தப் பட்டன. ஆனால் அணுஉலை ஆட்சிப் ‘போலி இயக்கிகள் ‘ [Simulators] தோன்றி, பயிற்சி முறைகள் மேம்பட்டன. மூன்றாவது 1986 ஆண்டில் செர்நோபிள் விபத்து! மனிதரின் இமாலயத் தவறால் அணுஉலை வெடித்து எரிந்து சிதைந்து பலர் மாண்டு, வீரிய கதிர் வீச்சால் பல்லயிரம் பேர் பலியானார். இதனால் உலகம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்ன ?

கீழ் தரப்பட்ட முக்கிய புது நியதிகளை மேற்கொள்ள செர்நோபிள் அணுவியல் மேதைகள் அகில உலக அணுசக்தி தலையகத்துச் சிபாரிசு செய்தனர்.

1. தீவிர விபத்தின் தொடர் விளைவுகளை ஆராய அகில உலகுத் திட்டம்.

2. சுயக் கட்டுப்பாடு, மனிதர் கையியக்கம் இரண்டுக்கும் ஏதுவான இடைப்பாட்டு நியதி.

3. அகில உலகு உடன்படும் அணுஉலை இயக்குவோர் பயிற்சி ஏற்பாடு.

4. அணுவியல் பயிற்சியில் செர்நோபிள் விளைவால் கற்ற பாடங்களை புகுத்தல்.

5. அணுஉலைத் தீயணைப்பு நியதிகளைப் தெளிவாக மேல்படுத்தி நூதன முறைகளையும், சாதனங்களையும் கையாளுதல்.

6. கதிரியக்கத் தளத்துடைப்பு முறைகளை மேன்மைப் படுத்துவது.

7. அகிலச் சுழ்நிலைக் கதிரியக்க அளவையும், பயணப் போக்கு திசைகளையும் கருவிகள் மூலம் கண்காணித்து வருதல்.

8. உணவுப் பண்டங்களில் நுழைந்த கதிரியக்க அளவு எல்லைகளை, அகில ரீதியில் நிர்ணயம் செய்து, பயன் படுத்துவதைக் கட்டுப்படுத்தல்.

9. உயிரினங்களைத் தாக்கிய கதிரியக்கத்தின் நீண்ட காலத் தீங்குகளை எடைபோட்டு அதன் விளைவுகளை நிர்ணயம் செய்தல்.

10. தீவிரக் கதிரியக்கம் மேற்கொண்ட நோயாளிகளைக் குணப்படுத்தும் மருத்துவ முறைகள்.

செர்நோபிள் விபரீத விளைவுகள், அணுவியல் விஞ்ஞானிகளுக்கும் பொறியாளர் களுக்கும், இயக்குநர் களுக்கும் விழிப்பை உண்டாக்கிப் புதுப் பாதுகாப்பு அரண், நியதி, விதி முறைகளை, எல்லா அணுசக்தி நிலையங்களிலும் உறுதியாக நிறுவும் ஞானத்தை நிச்சயமாய்த் தந்துள்ளன.

[ முடிவுரை: உலகில் இப்போது சுமார் 433 அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கிப் பல்லாயிரம் மெகாவாட் மின்திறத்தைப் பூதக் கோபுரக் கம்பிகள் மூலமாய் அனுப்பிக் கொண்டிருக்கின்றன. இவை நமக்கு மிகத் தேவையான அபாயக் கருவிகள்! ஆயினும் எங்கெங்கு மனிதர் கைகளும் யந்திரங் களும் கைகோர்த்து இயங்குகின்றனவோ, அங்கு தவறுகள் நேர்வதை யாரும் தவிர்க்க முடியாது! தவறுகளின் எண்ணிக்கையை ஓரளவு குறைக்கலாமே தவிர எல்லாவற்றையும் தடுக்க இயலாது! செர்நோ பிள் போன்ற அபாய விபத்துகள் இனி நேரா விட்டாலும், சில சிறிய சம்பவங் கள் உலகில் எங்காவது நிகழத்தான் போகின்றன! அவற்றை எதிர் நோக்கி எவ்வாறு கையாள்வது என்பதைப் பற்றி அரசாங்கமும், அணுவியல் மேதை களும் திட்டம் வகுத்து எல்லா மக்களுக் கும் பயிற்சி அளித்துத் தயார் செய்வது, அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.]

****************************

Series Navigation