சங்கதி என்னவாயிருக்கும்?

This entry is part [part not set] of 38 in the series 20100718_Issue

ரசிகன்


ஒரு காமம்
தலைக்கேறியிருந்தது…
ஊரறியா நாற்சுவரில்
உலகம் அடங்கிப்போயிருந்தது…

ஒரு காதல்
சலசலத்துப்போயிருந்தது…
ஆர்ப்பரிக்கும் உடல் பேச்சுக்கள்
அடக்கமாய் போர்த்தியிருந்தது!

ஒரு தனிமை
மௌனித்திருந்தது….
நண்பகல் வேளையிருக்கும்
மது வாசம் வீசிக்கொண்டிருந்தது…

ஒரு இரவு
வெடவெடத்துப்போயிருந்தது…
காற்றாடி அசைவிழந்தும்
நாற்காலி தலைகுனிந்தும் வீற்றிருந்தது!

ஒரு பகல்
இழவாகி போயிருந்தது….
சுற்றமும் நட்பும்
ஒரு பிரிதலுக்கு தயாராகியிருந்தது!

ஒரு கவிதை
கனத்துப்போயிருந்தது…
…..
…..
…..
சங்கதி என்னவாயிருக்கும்?

Series Navigation

ரசிகன்

ரசிகன்