சங்கடமடமான சங்கரமடம்

This entry is part [part not set] of 51 in the series 20041118_Issue

வரதன்


நின்று நிதானித்து சமுகசேவையுடன், பேர் எழுச்சி கொண்டு சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திடாமல் சில தான சேவை மையங்களுடன் தன்னை நிறுத்திக் கொண்டதால் தடுமாறிய நிலையில் சங்கரமடம் இன்று.

தவறான சுயநலக் கூட்டமும், தான் என்ற நிலைப்பாடும் கண்டதால் இன்று சிக்கலில் சங்கரமடம்.

மேட்டுக்குடி மக்களின் சகவாசமும், பிரபலங்களின் சங்காத்தமுமாய் மட்டுமே இருந்த துர்ப்பாக்கியம்.

இந்து மதத்தின் சில தத்துவங்கள் என்று சொல்லப்பட்ட , சில ஜாதி வெறியர்களால் கடைப்பிடிக்கப் பட்ட கொள்கைகளைத் தூர எறிய சங்கரமடம் தீவிர நடவடிக்கை எடுக்காமல் விட்டது ஒரு தவறு.

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல், சூழ்நிலையை சாதகமாக்கும் இஸ்லாம் அமைப்புக்கள் மற்றும் கிறிஸ்துவ அமைப்புக்கள்.

இதில், சந்தில் சிந்துபாடும் கருணாநிதி.

அது மட்டுமல்ல,

சங்கரமடத்தில் குறிப்பிட்ட ஜாதியினர் கோலோச்சியதும் அதைத் தட்டிக் கேட்ட அதே ஜாதியைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டதும் இந்து மதத்தை எந்த அளவிற்கு பாதிக்கும்… ?

நிச்சயமாக இதில் இருந்து சங்கரமடம் மீண்டு வரும்.. –

தன்னை மறுபரீசீலனைக்கு ஆட்கொண்டால்.

வெறும் இறைவழிபாடும், முக்கியஸ்தர்கள் சந்திப்பும் என்ற நிலையில் இருந்து மாறி சேவை மனத்துறவிகளால் மடங்கள் நிறைய வேண்டும்.

அம் மடங்கள் தமிழகத்தை பல பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு, மக்களின் பொதுப்பிரச்சனைகளைப் பட்டியலிட வேண்டும்.

அப்பகுதியிலுள்ள ஒழுக்கமான தொண்டார்வ அமைப்புகளை அங்கத்தினர்களாகக் கொண்டு, வல்லுனர்களிடம் கருத்துக்கள் பெற்று, திட்ட வடிவு கண்டு தமிழக சுபிட்சத்திற்கு வழி காண வேண்டும்.

இதற்கு இணையத்தின் உதவி கொண்டு, உலகளாவிய அளவில் உதவி பெறலாம் – கருத்து, திட்ட வடிவு போன்ற உதவிகள். அது செயல்முறையாக தங்கள் மடத்தின் மூலம் செல்வந்தர்களிடம் பணம் திரட்டலாம் மடத்தினர்.

அதனால், மக்கள் பயன்பாடும் வாழ்க்கைத்தரமும் உயர்ந்தால் இந்து மதம் தழைக்கவே செய்யும்.

இஸ்லாம் மதத்தின் பிரச்சனை நாம் கவலை கொள்ள வேண்டியதில்லை. அதன் தீவிரவாத அச்சுறுத்தலை அமெரிக்காவும், பிரிட்டனும் உணார்ந்து கொண்டதால் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

சங்கரமடத்தைப் பொறுத்தவரை இளையவரின் உறவுகள் உடனே வெளியேற வேண்டும். துறவில் உறவுக்கு இடமில்லை.

தடுமாறும் நிலை துறவு நிலைக்கு வர அவை காரணமாக இருக்கும். இது பற்றிய மதுரை மடாதிபதியின் கருத்து மிகச் சரி.

ஜெயேந்திரர் இதில் பலிகடா ஆக்கப்பட்டிருக்கலாம். ஆனால், இளையவரின் சகோதரர் மேல் சந்தேகம் நமக்குத் தீரவில்லை.

அதனால், இதன் தன்மை உணர்ந்து, ஜெயேந்திரர் சில தீர்க்கமான முடிவுகளை எடுத்தல் வேண்டும்.

அது அவரால் முடியும். அதற்கு சாட்சி சமீபகாலமாக அவர் தொடங்கிய ஜனகல்யாண் அமைப்பின் சில செயல்பாடுகள்.

இன்னொன்று அரசியல்வாதிகளிடம் அதிகாரம் செய்ய நினைத்த மனநிலை. அவர் மக்களிடம் இருந்திருக்க வேண்டியவர். ஏனோ, அரசியல் – பிரபல சுழலில் தன்னை இணைத்தார்.

அதனால் இந்த நிலை கண்டார்.

இந்த வழக்கு நிச்சயம் சி.பி.ஐ. வசம் செல்ல வேண்டும்.

– ஒரு மிகப் பெரிய சக்தி, சங்கரமடத்தின் மருத்துவ கல்லூரித் திட்டத்தை விட்டுக் கொடுக்கச் சொன்னதற்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தம் இருக்கிறதா என்பது விசாரிக்க வேண்டியது.

– இளையவர் தம்பியின் முட்டாள்தனப் புத்தியை சாதகமாக்கி ஒரு வேளை பிறர் சூழ்ச்சி வலை பிண்ணி ஜெயேந்திரயை சிக்க வைத்தனரா… ?

– பல குற்றம் புரிந்த ஒரு அரசியல் தலைவரின் கைதிற்கு ஒப்பாரி வைத்த பல கட்சிகள் , அமைப்புகள், இந்த துறவியைக் கைது செய்த முறைக்கு ஏன் குரல் எழுப்பவில்லை…. ? அப்படியால், ஏதாவது அரசியல் பின்னணி உள்ளதுவா… ?

என விசாரித்தல் வேண்டும்.

தவிர, சங்கரராமனின் ஆண் வாரிசுக்கு சங்கரமடத்தில் பொறுப்புத் தர வேண்டும். அது தான் சரி. அப்போது தான் துறவு நிலைப்பாட்டின் மனநிலைக்கு ஒரு சுயபரிசோதனையாக இருக்கும்.

காவல்துறையும், அண்ணாநகர் ரமேஷ் கொலை வழக்கு, மதுரை தா.கிருட்டிணன் கொலை வழக்கில் இதே தீவிரம் காட்டினால், சங்கரமடத்திற்கு புத்திமதி கூறுபவர்களின் சுயரூபம் தெரியும்.

கம்பி எண்ண வேண்டியவர்கள், இன்று கருத்துக் கூறும் துர்ப்பாக்கியம் மாறும்…

மக்கள் வித்தியாசமானவர்கள்.

இயேசுநாதர் வாழ்ந்த காலகட்டத்தில் மிகப் பெருவாரியான மக்களால் பல குற்றங்கள் சாட்டப்பட்டு சிலுவையில் அறையப்பட்டவரே.

ஆனால் , சரித்திரம்…. ?

அது போல் தான் இதுவும்.

ஆனால் ஒன்று பாராட்ட வேண்டும்.

ஜெயேந்திரர் கைது பற்றி சோ கருத்துக் கூறிய முறையையும், அண்ணாநகர் ரமேஷ், மதுரை. தா.கிருட்டிணன் கொலைகள் பற்றி கருணாநிதி கருத்து கூறியது பற்றி ஒப்பிட்டு பார்த்தல் வேண்டும்.

எப்படிப்பட்ட தரமான மக்கள் சங்கரமடத்தைச் சுற்றியிருக்கிறார்கள் என்று புரியும்.

அதனால், சங்கரமடத்தின் சீரமைப்பு எவ்வளவு முக்கியமோ அதை விட மிக விரைவாக சீரமைக்க வேண்டியது கழகத்தை. இல்லாவிடில் தமிழகம் நாசமாகும்.

எரிய வீட்டில் குளிர்காய நினைக்கும் கருணாநிதியின் நோக்கம் நிறைவேறாது.

இதே, கருணாநிதியாக இருந்தால் பேரங்களும், லாப ஒப்பந்தங்களும் தான் நடக்கும். ஜெயலலிதா தான் ஒரு நடுநிலை நிலைப்பாடு கொண்டவர் என நிரூபித்துள்ளார்.

அதனால், ஜெ, சில கிறிஸ்துவ அமைப்புக்களின் சொத்துக் குவிப்பு நடவடிக்கைகள், வெளிநாட்டுத் தொடர்பு , சில கிறிஸ்துவ பாதிரியார்கள் மேல் வரும் ஒரினச் சேர்க்கை பற்றிய குற்றச்சாட்டுக்கள் பற்றி தீவிர விசாரணையும் தீர்வும் காண வேண்டும்.

இந்து அறநிலையத் துறை போன்று, கிறிஸ்துவ அறநிலையத்துறை கொணர்ந்து, அனைத்து கிறிஸ்துவ சொத்துக்களையும் அதன் கீழ் கொண்டு வரவேண்டும்.

சர்ச்சுக்களுக்கும் அரசாங்கமே தக்கார், ஆடிட்டர்களை நியமிக்க வேண்டும்.

தவிர, தா.கிருட்டிணன் கொலையில் கருணாநிதி குடும்பத்தின் தொடர்பு தெரிந்து பின் பல திசை ஒப்பாரி எதிர்ப்பால் பின் வாங்கிய ஜெயலலிதா, தான் நடுநிலையாளர் என்பது உணர்த்திய இந்நிலையில் மீண்டும் அந்த வழக்குகளுக்கு தேவையானவற்றைச் செய்ய வேண்டும்.

இல்லையெனில், முஸ்லீம் ஜனாதிபதியாகவும், சீக்கியர் பிரதமராகவும், ரோமன் கத்தோலிக்கர் நிழல் அரசாங்க அதிபதியாகவும் இருக்கும் – இந்துக்களின் நாட்டில் ஒரு இந்துத் துறவிக்கு நடப்பது இந்துக்களுக்கு ஒரு ‘எச்சரிக்கை மணி ‘ என்று தான் கொள்ள வேண்டும்.

— வரதன் —-

—-

varathan_rv@yahoo.com

Series Navigation

வரதன்

வரதன்