கூற்றும் கூத்தும்

This entry is part [part not set] of 42 in the series 20060623_Issue

பத்ரிநாத்


கூற்றும் கூத்தும்

சகோதரி ஜோதிர்லதா கிரிஜா ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் சொல்லச் சொல்கிறார். அது சாத்தியமே இல்லை. அவர் எழுதிய கடிதத்தின் கோணத்தை வைத்துத்தான் அவர் புரிதலின் மீதான என் எதிர்வினை கருத்துக்களைச் சொன்னேன்.. .. நான் அப்படிச் சொல்லவில்லை இப்படிச் சொல்லவில்லை என்றால் வேறு எப்படித்தான் புரிந்து கொள்ளச் சொல்கிறார் என்றாவது சொல்லியிருக்கலாம்.

“” …..முன்னவர் மறுபடியும் வைப்பதில் கவுரவப் பிரச்சனையே இல்லையா….””
என்று கடிதம்-2லும் கூறுகிறார். அதன் அர்த்தம் “கவுரவப் பிரச்சனை” இருக்கிறது என்றுதானே பொருள்.. .. முன்னவர் வைத்தார் அதை பின்னவர் எடுத்தார் அதனால் அதன் பின்னர் வந்தவர் மீண்டும் வைத்தார் என்ற ” லாவணி ” கவுரவப் பிரச்சனை கலைஞருக்கு நிச்சயமாக இல்லை என்று நான் அடித்துக் கூறுகிறேன். கலைஞரின் பதைபதைப்பு மற்றும் கோபம் என்பது முழுவதும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கும் இன மொழிப் பிரச்சனையாகும். அவருடைய அரசியலும் அதைச் சார்ந்துதான் இயங்குகிறது. இதில் தனிப்பட்ட கவுரவம் என்பது கலைஞருக்கு எங்கு இருக்கிறது..

அன்று மணிசங்கர் அய்யர் மீது ஜெயலலிதா கொண்ட கோபமும், ஆனந்த விகடன் மீது கலைஞர் கொண்ட கோபமும் ஒன்று அல்ல என்பதுதான் என் வாதம். முன்னது தனிப்பட்ட கோபம். ஆனால் ஞாநி கலைஞரை பலமுறை எதிர்த்து எழுதி வந்திருக்கிறார். கலைஞர் அதையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்ததில்லை. ஆனால் கண்ணகியைக் கரடி பொம்மை என்றதும் கொதித்தார். அதன் காரணத்தைத்தான் என் கடிதத்தில் சுட்டியிருக்கிறேன்.

” என் கட்டுரைக்கும் இனம் மதம் பற்றிய அலசலுக்கும் என்ன தொடர்பு..?”
என்கிறார்.. கண்ணகி என்றாலே அது மொழி சார்ந்த இனம் சார்ந்த தொடர்பு இருக்கிறது என்று ஆயிரம் முறைகள் உரத்துக் கூற விரும்புகிறேன்….. அது தெரியாமல் இருந்தால் அதற்கு வருந்துகிறேன்.

அனுமன் இலங்கையை எரித்ததற்கு இதே கோபம் அவன் ஏன் மீது வரவில்லை. ஒரு வேளை ராவணன் தமிழ் மன்னன் என்பதாலா… மறைந்த ஆன்மிகச் சொற்பொழிவாளர் புலவர் கீரன் பல்வேறு ஆதாரங்களுடன் கண்ணகி என்பவள் உழைக்கும் மக்கள் வணங்கும் மாரியம்மன்தான் என்று உறுதியாகக் கூறினார். என்னைப் பொருத்த வரை நான் எந்தக் கடவுளையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், நம் ஊர்களில் அனைத்துக் கடவுளர்கள் சிலையும் கற்சிலைதானே.. ஆரியக் கடவுளர்களுக்கு மூலை முடுக்குகளில் எல்லாம் கற்சிலைகள் இருக்கின்றனவே… சகோதரிக்கு அவைகள் இடறவில்லையா..? இந்த விசயத்தில் ஆரியக் கடவுளர்களுக்கு இருக்கும் RESERVATION முறை அப்பாவி கண்ணகிக்குச் சிலை என்றால் அதை எதிர்த்துக் கவிதை என்று ஏன் வரிந்து கட்டிக் கொண்டு வரவேண்டும் என்றுதான் கேட்கிறோம்..?

அப்படிக் கேட்டால் குதர்க்க வாதமா..?

எது குதர்க்கம் என்பதே சகோதரிக்குத் தெரியவில்லை என்றுதான் தோன்றுகிறது.

பத்ரிநாத்
prabhabadri@yahoo.com

Series Navigation

பத்ரிநாத்

பத்ரிநாத்