This entry is in the series 20041125_Issue

விசிதா


கனவில் வரும் கடவுள்
என்னதான் சொல்வாரோ
புரியுமோ புரியாதோ,
உன் புன்னகை அழகு அழகுதான்

செல்லமே, என் கனவில் கடவுள்
வருவதில்லை
ஏனென்று கேட்டுச் சொல்வாயா
தூங்கும் போதாவது
என்னைக் குழந்தையையாய்
மாற்றுவாரா
சொல் புரிய வேண்டாம்
புன்னகைக்க
முடிந்தால் போதும்

{அமிர்தவர்ஷிணிக்கு அன்புடன்}

wichitatamil@yahoo.com

http://wichitatamil.blogspot.com

Series Navigation