குழந்தைக் கதை
ஜெயராமசாமி

விளையாடிக் களைத்த
குழந்தைகள்
சிரிப்புக் கதை கேட்க்கிறார்கள்
குழந்தைகளின் கேள்விகளுக்கு
பதில் சொல்வது போல
சிரமமானது
அவர்கள் சிரிக்கும்படியான
கதைகள் சொல்வதும்
பலமுக மன்னன் ஜோ,
தங்கமலர், சிறுவர்மணி
கதைகள்
தெனாலி, முல்லா கதைகள்,
இலக்கிய எழுத்தாளர்கள்
குழந்தைகளுக்காக
பிரத்யேகமாக எழுதும் கதைகள்
,
நான் படித்த கதைகள் எல்லாற்றையும்
சொல்லிப்பார்த்தேன்
எல்லாவற்றையும் நிரகரித்துவிட்டு
அவர்களுள் ஒருவனே கதை சொல்ல ஆரம்பித்தான்
” ஒரு ஊர்ல கேட் இருந்துச்சான்”
முகத்தை சற்று கோணலாக
வைத்துக்கொண்டு,
”அது மியாவ்ன்னு கத்துமாம்…”
மழைக் கால வெயிலைப்போல
அவ்வளவு அற்புதமாக
சிரித்தார்கள்
அத்தனை குழந்தைகளும்
jeyaraamasamy@gmail.com