சி. ஜெயபாரதன், கனடா
இறை வணக்கம்
அண்டத் தலைவனை, ஆதிக் கலைஞனை
தொண்டன் வணங்கித் துணிகின்றேன் ! – பண்டைமுதல்
குற்றாலத் தேனருவி கொட்டுவதை நானெழுத
வற்றாத் தமிழூட்ட வா !
கற்றேன் கடுகளவு ! கண்முன் உலகளவு !
ஒற்றைப் பிறப்பெனக்கு ஒவ்வாது ! – முற்றிலும்
தாரணியைக் காணத் தருணம் கிடைப்பதில்லை !
ஓரளவு தேறிடவே ஓது !
***********
தமிழ்க்கவி மாலை சூடி
கவிக்குயி லாகப் பாடி
கனிவுடன் அழைக்கும் சக்தி
கலைமகனே ! தமிழ்மகனே !
அன்புக்கடல் சிற்பிகளே !
அடியேன் படைப் பிதுவே !
**********
குற்றால அருவி எப்படி உள்ளது என்றொரு பெருங் கவிதை புனைவதை விட, அது எப்படி இருக்க வில்லை என்றும் நான் சொல்ல விழைகிறேன். அப்போதுதான் அதன் முழுத் தோற்றத்தை நாம் விழுமையுடன் காண முடிகிறது.
ஒரு கல்லில் அடிப்பேன்
இரு மாங்காய் !
இரு நீர்வீழ்ச்சி படிப்பேன்
ஒரு மூச்சில் !
******************
சிற்றருவி ! பேரருவி !
சி. ஜெயபாரதன், கனடா
குற்றாலச் சிற்றருவி !
குதித்தோடும் தேனருவி !
முத்தான நீரருவி !
முகிலெட்டும் வானருவி !
குற்றாலம் வெண்ணருவி !
கொட்டுகின்ற தண்ணருவி!
சிற்றாறுக் குன்றருவி !
சிரித்தோடும் பொன்னருவி !
நயாகரா அருவி !
புவியிலே பேரருவி !
பூத உடல் நீரருவி !
கவிழ்ந்து விழும் கீழருவி !
கழுத்தொடிக்கும் பேயருவி !
முற்றிலும் மண்ணருவி !
முதலிரவுப் பெண்ணருவி !
குற்றாலம் விண்ணருவி !
குறைவாகும் சின்னருவி !
தோற்றம் கீழே உனக்கு ! வானத்
தோரணம் ஏது உனக்கு ?
போற்றிப் புகழ்ந்தாலும் சேரும்
நாற்றச் சாக்கடைதான் !
குற்றால அருவி !
குற்றாலம் குளியருவி !
குடிமக்கள் தேனருவி !
நெற்றி நிமிர் மேலருவி !
நெளிதோடும் கானருவி !
குரங்காடும் நீரருவி !
கூடுகட்டும் ஊர்க்குருவி !
மரமாடும் சீரருவி !
மானோடும் ஓரருவி !
குற்றாலம் சிற்றருவி ! மழை
குன்றின் வெற்றருவி !
நயாகரா பேரருவி !
நல்வணிகர் பேருதவி !
குற்றால அருவி !
எளியவர் கண்டு களிக்கலாம் !
எல்லாரும் இனிதாய்க் குளிக்கலாம் !
துர்நாற்றம் இல்லா நீரது !
தூய்மை யான மழையது !
குற்றாலச் சூழ் வெளியே
சூழ்ந்து வரும் பூவாடை !
நயாகரா நதி வெளியே
நாகரீகச் சாக்கடையே !
நயாகரா அருவி !
ஆறாக ஓடி வரும் !
ஆத்திரமாய்ப் பாய்ந்து வரும் !
மாறாகத் தவ்வுது !
மண்ணைப் போய்க் கவ்வுது !
குரங்கில்லை ! குன்றில்லை !
மரமில்லை ! மானில்லை !
இயற்கை வனப்பழியும் ! எங்கும்
செயற்கை மினுக்குயரும் !
ஒருநதி இடையில் பிரியுது !
இருநீர் வீழ்ச்சியாய்த் தெரியுது !
பிரமிப் பான காட்சிதான் !
பேரிடி கேட்கும் மூச்சிதான் !
குற்றால அருவி !
வெள்ளிக் கதிர் எழுமருவி !
வேகமாய் விழுமருவி !
துள்ளி வரும் நீரருவி !
தூங்கி விடும் ஓரருவி !
ஆன்மீக நாட்டருவி !
ஆடிவரும் காட்டருவி !
நான் விழையும் நீரருவி
நாத எழும் சீரருவி !
நயாகரா அருவி !
வாணிபச் சந்தை அது !
வஞ்சிப்போர் மந்தை அது !
தோணியிலே சென்றாலும்
துட்டுத்தான் கரையுதடா !
காசிருந்தால் நீர்வீழ்ச்சி !
காசுரிக்க ஓர்சூழ்ச்சி !
காசிருந்தால் சூதாட்டம் !
காசிழந்தால் போராட்டம் !
பகலிரவாய் நீர் பாயுது !
பார்த்தாலே குடல் நடுங்குது !
மகத்தான நீர்வீழ்ச்சி !
மாறான கண்காட்சி !
மின்சக்தி உருவாக்கும் !
மின்வெளிச்சம் நிற மூட்டும் !
வானூர்தி வட்டமிட்டு
வானிருந்து நதி காட்டும் !
குற்றால அருவி !
பசுமை மரமுண்டு !
பாடும் குயிலுண்டு !
அசையும் இலையுண்டு !
அத்தனைக்கும் உயிருண்டு !
பட்டப் பகலில் பரிதி ஒளி !
பறவை பாடும் பண்ணின் ஒலி !
எட்டும் இரவில் நிலவின் வெளி !
என்றும் மாறா வண்ண ஒளி !
நயாகரா நீர்வீழ்ச்சி
நாணயப் படக்காட்சி !
உயிரில்லை ! உணர்வில்லை !
ஒப்பனையாய்க் கவர்ந்தாலும் !
நயாகரா அருவி !
வான வில்லாய் நீர்வீழ்ச்சி இரவில்
மாறிவிடும் நிறக் காட்சி !
வீணாகும் வண்ண விளக்குகள் !
வேடிக்கை காட்டும் பிழைப்புகள் !
நயாகரா காதலர்க்கு !
நாடிவரும் வாணிபர்க்கு !
வயாகரா மானிடர்க்கு !
வாடிக்கை மாதருக்கு !
சிற்றருவியா ? பேரருவியா ?
டாலர் மேயும் நயாகாரா !
டாலர் ஆளும் நயாகரா !
டாலர் கூடும் நயாகரா !
டாலர் ஆடும் நயாகரா !
குபேர சாக்கடையில் முங்கிக்
குளிப்பது யார் தற்காலம் ?
குசேலக் குற்றாலம் பொங்கிக்
குளிப்பது நம் பொற்காலம் !
***********
jayabarat@tnt21.com [S. Jayabarathan] November 14, 2007
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பெரு வெடிப்பு எப்படி ஏற்பட்டது ? (கட்டுரை: 3)
- வடகிழக்கும் பாரதமே: பிரிப்பவர்கள் யார்?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 3 காட்சி 2
- இனியொரு விதி செய்வோம்
- நிச்சயிக்கப்பட்ட திருமணம்
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 23) வெள்ளிக்கிழமை, 16 நவம்பர் 2007
- தமிழ் வாணனின் வழிகாட்டிப் புத்தகங்கள்
- சிறுகதை எழுதப் போய் ..
- லா.ச.ரா.வுக்கு அஞ்சலி – 2 அம்பாளின் தொப்புள்கொடி
- சிங்கப்பூரில் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையின் தொடக்க நிகழ்வுகள் பற்றிய கலந்துரையாடல்!
- ஹெச்.ஜி.ரசூல் அவர்களுக்கு நேர்ந்த துயரம் : விடைகாண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் கேள்விகள்
- ‘பெருஞ்சுவருக்குப் பின்னே’ – ஜெயந்தி சங்கர் (நூல் அறிமுகம்)
- பேராசிரியர் அம்மன்கிளி முருகதாசுவின் சங்கக் கவிதையாக்கம் மரபும் மாற்றமும் ஓரு மதிப்பீடு
- ஜெயமோகனின் சிறுகதைகள் – ஓர் பார்வை
- பாரதியாரின் தனித்தன்மை வாய்ந்த சிந்தனைகள்
- கவிதையோடு கரைதல். (ஈரோடு தமிழன்பனின் கவின் குறு நூறு )
- குற்றாலச் சிற்றருவி
- சிவசேனையின் வட்டார வாசனை நீங்க…
- கடிதம்
- கடற்கரைச்சாலை கவிமாலையின் கணையாழி விருது விழா
- கடிதம்
- பட்டிமன்றம் 25 நவம்பர் 2007
- கடலில் கரைந்த ஒரு துண்டு படகு..
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 7 – தடம் புரண்ட தலை நகரம்
- பள்ளிக்கூடம்
- மஞ்சள் வெளியின் இரண்டாவது அறை
- ஒரே கேள்வி
- மாத்தா ஹரி அத்தியாயம் -36
- இறந்தவன் குறிப்புகள் – 2
- மலர் மன்னன் எனக்கு எழுதிய மடலும் அதற்கான என் நன்றியும் எதிர்வினையும்
- மரணத்தின் விளிம்பிலிருந்து – (ஓர் உண்மை நிகழ்ச்சி)
- படித்ததும் புரிந்ததும்.. (10) காங்கிரஸ் தோற்றமும் – மாற்றமும் – அகிம்சையிலிருந்து இம்சை கட்சி அரசியல் ஒரே குட்டையில் ஊறிய மட்டை
- புன்னகைக்கும் பெருவெளி
- ஜெகத் ஜால ஜப்பான் – 1 . தோசோ யோரோஷிகூ
- கர்நாடகத்தில் மலர்ந்த கமலம்
- திண்ணைப் பேச்சு – ஒரு தன்னிலை (இன்மை) விளக்கம்
- நாம் எப்படி?
- தாகூரின் கீதங்கள் -3 மாறி மாறி வரும் முகம் !
- கவிதைகள்
- கல்யாணம் பண்ணிப்பார்!
- இலை போட்டாச்சு 38 – கோதுமை மோர்க்கூழ் (மோர்க்களி) /அரிசிமாவு மோர்க்கூழ் (மோர்க்களி)