ராகவன் (ேஐர்மனி)
கொாில்லா நாவலானது இலங்கையின் அரசியல்-போராட்டக் களத்தை முக்கிய தளமாகக் கொண்டு கதையை நகர்த்துகிறது. எனவே இவ்நாவல்பற்றி அரசியல் பார்வை விமர்சனங்களும் தவிர்க்க முடியாதவை. ஒவ்வொரு இலக்கிய வடிவமும் வாசகி/வாசகனுக்கு அவர்களது அனுபவத்தையோ, ஆசையையோ, எதிர்பார்ப்பையோ, தேடலையோ பகிர்ந்து கொள்கையிலோ அல்லது கேள்வி கேட்கையிலோதான் அது பேசப்படுகிறது, கிலாகிக்கப்படுகிறது, துாற்றப்படுகிறது அல்லது விமர்சிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த நாவலை வாசித்தவுடனேயே எனது முதலனுபவம் சந்தோசமாக இருந்தது. இதுபற்றி இணையபக்கங்களில் வந்த ஏனைய சில விமர்சனங்களையும் வாசித்தேன்
ஆனால் விமர்சனம் எழுதுவதாயின் ஆழ்மனத்தில் (Unconscious) ஏற்படுத்தக்கூடியவை பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. நாவல் பேசாதவைபற்றியும் பேச வேண்டியுள்ளது. நாம் வழக்கமாக எமது வாழ்வில் பல்வேறு அளவுகோல்களை வைத்து சகமனிதர்களுக்கு தீர்ப்பு சொல்லி வருகின்றோம். இது ஒருவகையில் தவிர்க்க முடியாத செயற்பாடே. எனினும் இலக்கியமென்பது இந்த அளவுகோல்களை,மதில்களை,எல்லைகளை சிலவேளைகளில், சிலகணங்களிலேனும் தாண்டுகையிலேயேதான் வெற்றிபெறுகின்றது. அதாவது மனிதர்களின் அடிஆழங்களை, மறுபக்கங்களை பார்க்க முடிந்தாலே இதுசாத்தியமாகும். எனது பார்வையில் இந்நாவலின் கதைசொல்லியோ, ரொக்கிராகேஐா இல்லை மனதில் நின்றது, அவனின் தகப்பனான கொாில்லாதான். மனைவிக்கு அடி உதை, பிள்ளைகளுக்கு வேதனையைமட்டுமே வழங்கி வந்த தகப்பன், சமூகத்திற்கு மோசமான சமூகவிரோதி, லும்பன் கலாச்சாரம். ஆனாலும் அவனது வாழ்வு நாவலில் கூறப்படுகையில், இறுதியில் அவன்மேல் கோபத்தையோ, ஆத்திரத்தையோ ஏற்றி வைக்கவில்லை. மறுபுறம் கொாில்லாவின்(தகப்பனின் ) ஆணாதிக்க Character ஆனது, சமூகத்தின் மற்றைய மேற்படியிலும் காணக்கூடிய எமது சமூக நிலமையேயாகும். ரொக்கிராக அல்லது அந்தோனி தகப்பனின் அட்டகாசங்கள் தாங்க முடியாமல் அடிப்பதுடன் ஏன் கொலை செய்யக்கூட யோசிக்கிறான்.
சமூகப்பெறுமானங்கள்(social values) உலகுதழுவிய அறம், நீதி போன்றவற்றை மிகவும் எளிமையாக, மேலோட்டமாக நம்பிவரும், எடுத்துரைக்கும் மனிதர்கள், முக்கியமாக மத்தியதரவர்க்கத்தினர் விரைந்து தீர்ப்புக்களை வழங்கிவிடுகின்றனர். இன,வர்க்க,சாதிய,பாலின, கிழக்கு-மேற்கு போன்ற அதிகாரப் படிநிலைகள் (hierarchy) பற்றியதும் அது மனிதர்கள்மேல் கொடுத்துவரும் சமூக, பொருளாதார, மன அழுத்தங்கள் குறித்தும், அதன்சிக்கல்கள் குறித்தும் எவ்வித அக்கறையுமின்றியோ அன்றேல் அவற்றில் ஒன்றைமட்டுமே கவனத்தில் எடுத்தோ கருத்துக் கூறியும் தீர்ப்புக் “கூறியும் வருகின்றனர்.
இக்கதையில் இலட்சியதாகம் கொண்டு அன்பான குடும்பம், பாடசாலை, இனிய இளமைக்காலம், நண்பர்கள்….etc. துறந்து நிற்கும் நடுத்தரவர்க்க மாந்தரில்லை. ஏற்கனவே யாவற்றையும் இழந்துநிற்கின்ற, தகப்பனின் வன்முறைநிறைந்த குடும்பச் சூழலில் இருந்து, லும்பன் கலாச்சாரத்திலிருந்து வந்தவன்தான் இயக்கம்பற்றி சொல்கிறான். வீீட்டுவன்முறை, நாட்டுவன்முறை இவற்றிலிருந்து விடிவாக தமிழீழத்தை கனவு காண்கிறான். இதற்காக இயக்கத்தில் சேர்ந்து போராடவும் செய்கிறான். அதுவே அவனுக்கு விடிவாகத் தொிகிறது. இவ்வாறுதான் எத்தனை இளைஞ/இளைஞிகள் இனவெறித்தாக்குதல்களிலிருந்தும், குடும்ப சமூக பாடசாலை அழுத்தங்களிலிருந்தும் விடுபட இயக்கங்களில் சேர்ந்தனர். அதுமட்டுமல்ல நண்பர்களைப் பின்தொடர்ந்தும் ஆயதக்கவர்ச்சி….. இன்னபிற காரணங்களுக்காகவும் இயக்கங்களில் சேர்ந்தனர். 80களின் ஆரம்பகாலம்வரையிலான இளைஞர்கள் போலல்லாது, போர்ச்சூழலிலே பிறந்து வளர்ந்த பலருக்கு வேறுயதார்த்தங்கள் தொியாது. அரசியலும் இல்லை. புலிஇயக்கத்தில் சமூகஅரசியல் வகுப்புக்கூட இல்லை.
இது ஒரு சுயசாிதை போன்றேயுள்ளது. முக்கியமாக புலி இயக்கத்துள் இருந்த காலத்தில் ரொக்கிராக சம்மந்தப்பட்டவையையே பெரும்பாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இயக்க விசுவாசியான இவனது பார்வையே பதிவாகிறது. எனினும் இயக்கத்தில் பெயர் வைப்பதில் தொடங்கி அரசியல் வகுப்புகள் நடாத்தப்படாமை போன்ற செய்திகளினுாடாக இயக்கத்துள் அரசியல் நிலைமை சுட்டப்படுகிறது. இயக்கத்தில் தனிப்பட்ட வெளியாட்களின் செல்வாக்கு, பொறுப்புக்களிலிருந்தோாின் அடாவடித்தனம் சொல்லப்படுகிறது. உட்கொலை(ஒசிலாவின் கொலை), மற்றைய இயக்கத்தினர் கொலை செய்யப்பட்டதுவும், ஒரு மற்றய இயக்கப்பெடியனின் தாய்க்கிழவியானவள் பிள்ளையைத் தருமாறு கதறிய கதறலும், நாலுநாளாய் தண்ணிகூட இல்லாமல் அழுது கிடந்த அந்தத் தாய், ரயர் போட்டு எாிக்கப்பட்ட தனது மகனின் உடல் வீதியில் கிடப்பதாக கேள்விப்பட்டு எழுந்து வந்து தன்னையும் சுட்டுக் கொல்லுமாறு ரொக்கிராகஐிடம் வேண்டிநின்றதுவும் சொல்லப்படுகிறது.
மதங்களும் சித்தாந்தங்களும் நல்ல மனிதர்களை படைப்பதற்கு முயல்கின்றன அல்லது படைப்பதாக பறைசாற்றுகின்றன. ஆனால் மனிதர்கள் இவற்றை பின்பற்றுவதாக கூறுகின்ற போதிலும்கூட, அவ்வாறான இலட்சிய மனிதர்க்கும்கூட மறுபக்கங்கள் உண்டு. மறுபக்கம் இவன் இலங்கையைவிட்டு வந்தவுடன் தனது இருத்தலுக்காக ஒரு சாதாரண தமிழனாக, சாதி மதப்பற்றாளனாக, மற்றையநாட்டு மனிதர்களை, அங்கவீனர்களை சிறுமைப்படுத்துபவனாகவும் உள்ளான். அ-து அவன் உள்ளிருந்த மறுபக்கங்கள் வெளிவர ஆரம்பிக்கின்றன. இதுதான் யதார்த்தமாக உள்ளது. இவ்வாறே லொக்காவின் பாத்திரமும் படைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக சபாலிங்கத்தின் அரசியல் கொலையுடன் முடிவது முக்கியமானதாகும். ”…. நமது தாய்நாட்டில் இருக்கமுடியாத காரணத்தால்தான் நாம் அந்நிய நாட்டிற்கு வந்தோம். அந்நிய நாட்டில்கூட நம்மவர்கன் அவருடைய உயிரை அநியாயமாகப் பறித்துவிட்டார்கள்…” என கோமதி சபாலிங்கத்தின் வாக்குமூலத்துடன், கதறலுடன் முடிகிறது. பிரெஞ் பொலிஸ் விசாரணையிலிருக்கும் கதைசொல்லி, இன்னொருவடன் சேர்ந்து போய் சபாலிங்கத்தை காலம் இடம் கடந்துபோய் கொலை செய்வதாக வருகிறது. இது விடுதலைப்புலிகள்பற்றிய பிம்பத்தை (என்றும், எப்போதுமே மறக்கமாட்டார்கள்) மறு உற்பத்தி செய்வதாக எனது வாசிப்புள்ளது. அல்லது கதைசொல்லியையே விழுங்கி நிற்கும் இன்னொரு கதை சொல்லியா அல்லது இயக்க வாழ்வின் ஒட்டுமொத்த சுயவிமர்சனமா ? ? ?அல்லது கதைசொல்லியின் பெயாிலிருக்கும் இன்னொருவரா ? எப்படியாகவும் இருந்துவிட்டு போகட்டும். பல வாசிப்புக்கள் சாத்தியமே.
மனிதர்களாகிய நாம் வெவ்வேறு முகமூடிகளைமட்டுமல்ல, பிறந்து வளர்ந்தபோது இருந்த சொந்தப் பெயர்களைக்கூட இங்கு தஞ்சம்புகுந்த நாட்டில் விட்டுவிட்டு வெவ்வேறு பெயர்களுடனும் திாியவேண்டிய நிலைமையிலுள்ளோம். முன்னர் குடும்ப அழுத்தங்கள், போராட்டம் என்றும் பின்னர் புகலிடத்தின் சட்டங்கள், இனவெறித்தாக்குதல்கள், புதியவாழ்முறை அத்துடன் குடும்பச்சுமையும்சேர மன அழுத்தங்களுக்கும் சிதைவுகளுக்கும் உட்பட்ட மனிதராய் உள்ளோம்.
இலங்கைக்கதைப்பரப்பில் அதிகமாக இறந்துபோய் விடுகிற மனிதர்களேயே பாத்திரத் தேர்வு செய்தமையானது முன் கூட்டியதான விமர்சனத் தவிர்ப்போ என்ற கேள்வி எழுகிறது. ஆனால் இழப்புகள், இழப்புகள் மீண்டும் இழப்புக்களே என்ற இன்றைய சூழ்நிலையின் யதார்த்தமாகவும் இதனைக் கொள்ளலாம். மறுபுறம் பாதுகாப்புக் கருதியதாகவோகூட இருக்கலாம்.
எந்த இயக்கத்திலிருந்தவராகட்டும், தனிமனிதர்களாகட்டும் நிறைகுறைகளுடன் ஒரு தேசியவிடுதலைப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது துரோகிபட்டத்துடன் சாவதற்கு தயாராக இருக்கமாட்டார்கள்தான். அவ்வாறு தான் ரொக்கிராகசும் இருக்கிறான்.
கதாசிாியாின் எள்ளலுடன் கூடிய எழுத்து நடையாலும் சம்பவத் தேர்வாலும் இவ் நாவல் அலுப்பூட்டுவதாக இல்லை. கதை நன்றாக நகர்த்தப்படுகிறது.
இன்னுமொன்றைச் சொல்ல வேண்டும், சமூகத்தின் விளிம்புநிலை மனிதர்களே மிகவும் இயல்பாக வருகின்றனர். அவர்களை விளிக்கையில் மாியாதையாகவும், ஏனையவர்கள் -ன் விகுதி சேர்த்தும் விளிக்கப்படுகின்றனர்.
நாவல் எழுதப்பட்ட விதம் எனக்கு விவிலியத்தையே ஞாபகப்படுத்தியது. உண்மைகளும் புனைவுகளும் சேர்ந்தவைகளே வரலாறாகின்றன, புராணங்களாகின்றன, ஏன் புனித நுாலாகவுமாகின்றன.
ஆனால் இவ் நாவலைப்படிப்பவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கம்பற்றி, புலிஇயக்கத்தால் நிகழ்த்தப்பட்ட உள் மற்றும் மாற்று இயக்க கொலைகள், வன்முறைபற்றி அதிகம் பேசப் போவதாக எதிர்பார்த்தால் அது இங்கே கிடைக்காது. இது ஒரு மனிதனின் கதை. ஆனால் அவ்மனிதனின் வாழ்க்கை, நடந்த சம்பவங்கள் பலமனிதர்களின் வாழ்வைப் பிரதிபலிக்கின்றது. அத்துடன் அவனது அனுபவங்களானது- இலட்சியங்கள1 சித்தாந்தங்கள், அதன் நடைமுறை பற்றிய கேள்விகளையும் எழுப்பி நிற்கின்றன. சமூகம் மற்றும் அரசியல் கொடுமைகள்பற்றி வரும் நாவல்கள் பெரும்பாலும் தீர் வுகளைச் சொல்லி வாசிப்பவர்க்கு மனஅமைதியையும், மறுபுறம் ஒரு பிரச்சாரத்தன்மையையும் தோற்றுவித்து ஒரு ஒற்றைப் படையான வாசிப்பை உருவாக்கின்றன. ஆனால் இவ்நாவல் தீர்ப்புக்களைச் சொல்லி ஒரு மூடுண்ட பிரதியாகி வாசகி,வாசகனுக்கு அலுப்பூட்டவில்லை. இது இந்தப் பிரதியின் வெற்றியென்றே கொள்ள வேண்டும்.
குஞ்சன்வயலின் உருவாக்கமும், குஞ்சனென்ற மனிதனின் சாதிய ஆதிக்கத்துக்கெதிரான அவனது எதிர்ப்புணர்வும் வாழ்வுக்கான போராட்டமும் பதிவாகியுள்ளது. இதை ஒரு குறியீடாகவும் கொள்ளலாம்.
பெண் பாத்திரங்களில் தாயான ெஐனோவா, தகப்பனின் கொடுமையை அநுபவித்து வந்தமனுசி வந்து போகிறார். ெஐயசீலி, சலங்கை பாத்திரங்கள் இயல்பாக படைக்கப்பட்டுள்ளன. தமயனுடன் நல்ல உறவு வைத்துள்ள தங்கை பிாின்ஸி, இவன்போலல்லாது வீட்டிற்குள்ளேயே யாவற்றையும் அமைதியாக தாங்க வேண்டியிருந்தவள், அவள்மேல் குடும்பமும் சமூகமும் நாடும் செலுத்தும் வன்முறையே இன்னும் மூர்க்கமானது. அவளே பின்னர் மனித வெடிகுண்டாய் மாறுகிறாள். எப்போது இவர்கள் எழுத ஆரம்பிப்பார்கள் ? ? ?
பெப்ரவாி.2002
- வழியோரம் நதியூறும்…
- குளிர் காலம்
- ரமேஷ் சுப்பிரமணியன் கவிதைகள்
- புவி யீர்ப்பு விசை.
- பின் தங்கிய சுவடுகள்
- டிராபிக் லைட்டுகள் பற்றிய முக்கியமான அறிவுகள்
- டாக்டரும் கத்திாிக்கோலும்.[டாக்டர் ஒருவர் பேஷண்ட் வயிற்றில் கத்தாிக்கோலை வைத்துத் தைத்துவிட்டார் என்ற செய்தி வாசித்தபின் உருவான
- குஞ்சன்வயலிலிருந்து தமிழீழத்தை நோக்கி…….சோபாசக்தியின் கொாில்லா — ஒரு விமர்சனம்
- மாட்ரிக்ஸ் (Matrix) என்ற திரைப்படத்தின் கேள்விகள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 8 -ஆ.மாதவனின் ‘பறிமுதல் ‘ – தர்மமும் சட்டமும்
- கேரட் சாதம்
- தேங்காய்பால் போண்டா
- ரேடியம் கண்டு பிடித்த மேடம் கியூரி
- அறிவியலாளர்கள் அரிசியின் மரபணு குறிப்பேட்டை விவரிக்கிறார்கள்
- மரபணு மாற்றப்பட்ட பருத்தியை பயிர் செய்ய இந்தியா அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.
- நம்மைப் பற்றி நாம்.
- மதுரையும் மல்லிகைபூவும்
- சின்ன கவிதைகள்
- இளமானே…!
- ஒரு தாயின் அழுகை
- பெரியாழ்வார்
- நகர் வெண்பா – 5
- தாயே! என்னிருப்பில் உன்னிருப்பறிந்தேன்!
- பேரூந்து இலக்கம் 86
- இஸ்ரேலும் இந்தியாவின் இடதுசாரிகளும் : கோஷங்கள் யாருக்காக ?
- பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் – இஸ்ரேல் பற்றி ஜனவரி 31, 1970இல் எழுதியது
- அனுபவ மொழிகள்
- தூண்டப்படாததும் தன்னிச்சையுமான இயல்பு
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி
- முஷாரஃபின் வாக்கெடுப்பு
- ஓநாய்க்கூட்டம்
- அண்ணாச்சி