This entry is in the series 20050729_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


எந்தன் பெயருக்குள் புகுந்து கொண்ட
அந்த மனிதன்
பாதாளக் கிடங்கில்
அழுது கொண்டி ருக்கிறான்! அந்த
குழியைச் சுற்றிலும்
மதிலை எழுப்பி
அரண் கட்டுவதில் நான்
பரபரப்பாய் உள்ளேன்
எப்போதும்!
நாளுக்கு நாள் வானோங்கி
மேலெழும்
அரண்மதில் ஆக்கத்தால்
இருண்டு போன மறைவின் நிழலில்
உண்மையான
தன்னுணர்வை இழந்து போகிறேன்,
கண்ணொளி குன்றி!

மாபெரும் கோட்டை
எழுப்பி
மறைந்து கொண்டதில்
பெருமிதம் எனக்கு!
மண்ணாலும் மணலாலும் கட்டி
மதிலில்
துளைகளை மறைத்திட
சுண்ணம் பூசி விடுகிறேன்!
அல்லாவிடின்
அந்தப் பெயரில்
சிறு ஓட்டை விழுந்து விடும்!
பெயரைக்
காத்துக் கொள்ள
கவனமாக நானெடுக்கும்
ஒளிமறைவு முயற்சி
வழி திறக்கிறது,
என் சுயமதிப் புணர்வை
இழந்து போக!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (July 24, 2005)]

Series Navigation