கீதாஞ்சலி (20) – என் பணி இந்த உலகுக்கு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


நானிங்கு வாழ்ந்து வருவது,
உன்மீது
கானம் பொழியத்தான்.
உன் சன்னதி
மாளிகையில் இருக்கும்
மூலை
ஆசனம் ஒன்றில்
அமர்ந் திருக்கிறேன்.
வேலை செய்ய
எனக்கு
எதுவும் இல்லை நீ
வீற்றிருக்கும் சொர்க்க உலகில்!
எவ்விதக் குறிக்கோளும் இன்றி,
பயனற்றுப் போகும்
என் வாழ்க்கை
உன் உலகில்,
சீரற்ற கீதமாய்
சிதறி முறியும்!

உனது சன்னதியின்
காரிருளில்
நள்ளிராப் பொழுதில்
கடிகார
மணி அடிக்கும் போது,
உன்னை
மெளனமாய்த் துதிக்க,
உன் முன் நிற்கும்
எனக்கு
கட்டளை இடு,
கானம் இசைத்திட
என் வேந்தே!
குளிர்ந்த காலைத் தென்றல்
வீசும் வேளையில்
பொன் மயமான
வீணை நாண்களில் நாதம் எழுப்பி
கானம் பொழியும் போது,
என் முன்னே தோன்றி,
எனக்கு நீ
கெளரவம் அளித்திடு!

****
jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 25, 2005)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா