கிரிதரன் : நடுவழியில் ஒரு பயணம்

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

சந்திரவதனா


வணக்கம் கிரிதரன்,
உங்கள் நடுவழியில் ஒரு பயணம் http://www.thinnai.com/?module=displaystory&story_id=10611306&format=html திண்ணையில் படித்தேன். நல்ல பதிவு.

பணி முடிந்து இருப்பிடம் திரும்பும் சமயங்களில் இவ்விதம் ‘பஸ்’சினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சந்தர்பங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான பொழுதுகளிலொன்று. இவ்விதமான சமயங்களில் நகரை, நகர மாந்தரை, இரவை, இரவு வானை எல்லாமே இரசித்துக் கோண்டிருப்பது என் ஆர்வங்களிலொன்று. இவ்விதமான இரசித்தல் மூலம் நான் அறிந்து கொண்டவை ஏராளம். ஏராளம். நூல்கள், பத்திரிகைகள் போன்ற வெகுசன ஊடகங்கள் மூலம் நான் அறிந்தவற்றை விட இவ்விதமான பொழுதுகளில் நான் அறிந்து கொண்டவை உணர்ந்து கொண்டவை மிக மிக அதிகம்.

எனக்கும் பிடித்தமான பொழுதுகளில் இது ஒன்று. பல விடயங்களை உள் வாங்கி பல்வேறு கோணங்களிலும் சிந்திக்க வைக்கும் பொழுதுகள் அவை.

அன்றிரவு படுக்கையில் சாய்ந்த பொழுது இன்னும் போரின் உக்கிரத்துள் வதங்கிக் கொண்டிருக்கும் என் நாட்டின் என் மக்களின் ஞாபகங்கள் தான் எழுந்தன. நான் ஆனந்தமாகச் சயனித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் அங்கு ஒரு பச்சிளங் குழந்தையின் மெல்லுடல் குண்டுகளால துளைக்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஓரிளம் பெண்ணின் அநாதரவான ஓலத்தால் ஒரு கிராமத்தின் நள்ளிரவு அதிர்ந்து கொண்டிருக்கலாம். கனவுகளும் கற்பனைகளுமாக வாழ்வைத் தொடங்கிய ஓரிளங்குடும்பத்தின் இருப்பே மிருக வெறி பிடித்த மனிதர் சிலரால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கலாம். ‘ஷெல்’களால்இ பெருகும் இரத்த ஆறால் இன்னும் என்னெவெல்லாமோ நடந்து கொண்டிருக்கலாம்.

உண்மை. நானும் கூட சாப்பிடும் பொழுதுகளில் நான் இப்படிச் ரசித்துச் சுவைத்துச் சாப்பிடும் போது அங்கு இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கலாம் என்று எண்ணி வேதனை அடைவேன்..

நட்புடன்
சந்திரவதனா


chandra1200@gmail.com

Series Navigation

சந்திரவதனா

சந்திரவதனா