கிரிக்கெட் – விளையாட்டுக்களை அழிக்க வந்த அரக்கன்

This entry is part [part not set] of 37 in the series 20070329_Issue

பாண்டித்துரை


கிட்டிபுல்ல காணாம் மக்க கிட்டி புல்ல காணோம். இனி கபடியும் வேணாம் மக்கா வேணாம் மக்க

நான் கடந்த நான்கு ஆண்டுகளாக கிரிக்கெட் பார்ப்பதில்லை. காரணம் மற்ற விளையாட்டுகளை ஆர்வமாக பார்பதே காரணம்.

2007 – உலககோப்பை

வழக்கம் போல தமிழகத்தில் தேர்வு நேரத்தில் வந்துள்ளது

கிரிக்கெட் போட்டிக்காக உள்டூர் விடுமுறை எல்லாம் கூட சில பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேசுடன் ஆன ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைந்தது நண்பர்கள் வாயிலாக அறியநேர்ந்தது. அந்தோ பரிதாபம். இந்த மாதிரி குட்டி அணிகளுக்கு எதிராக வீறு கொண்டு துவைக்கும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சினுக்கு என்னப்பா ஆச்சு!

2007 ம் ஆண்டு உலகபோப்பை போட்டிக்காக மட்டும் முதன்முதலாக அணிகளின் தரவரிசை அறிமுகபடுத்த பட்டது. ஆதில் முதல் 5 இடங்களில் இந்தியஅணியில்லை. ஆனால் உலக தரம் வாய்ந்த சச்சின் டிராவிட் கங்குலி சேவாக் என ? ஒருவேளை இவர்கள் எல்லாம் உள்ளுர் போட்டிகளில் விளையாடாமல் உலக போட்டிகளில் ஒரு போட்டியில் சிறப்பாக ஆடிவிட்டு அடுத்த ஒன்பது போட்டிகளில் கையை காலை பிடித்து விளையாடுவதாலே இவர்கள் உலகதரம் வாய்ந்த வீரர்கள் என அழைக்கப்படுகின்றனரோ அல்லது இவர்கள் போல் உலகில் யாரும் விளையாடதாலா!

அப்பப்ப சச்சின் என்ற ஒற்றை மனிதனை தலையில் தூக்கி வைத்துகொண்டல்லவா ஆடுகின்றனர். கொடுமைடா சாமி (சச்சின் மிக சிறந்த விரர் ஆனால் அவரது சாதனைகள் எல்லாம் எந்த எந்த அணிக்கெதிராக அப்படி சச்சினை மட்டும் வைத்து கொண்டு நாம் பெற்ற வெற்றிகள் எத்தனை- கிரிக்கெட வீரர் கபில்தேவ் கூறிய பத்திரிக்கை செய்தி) அவர்களை எல்லாம் சொல்ல கூடாது 5மேட்சில் தோற்று விட்டு 6வது மேட்சில் ஜெயித்ததும் தூக்கிவைத்து கொண்டாடும் ரசிகர்களை சொல்ல வேண்டும். இப்படி ஒரு ரசிகர் கூட்டம் இருக்கும் வரை இதை விடவும் கேவலமாக விளையாட தயங்ககூடாது!

பங்ளாதேஷ்உடன் ஆடிய முதல் ஆட்டத்தில்; பேட்டிங் அல்லது பீல்டிங் தேர்வுசெய்யும் வாய்ப்பு கிடைத்ததும் எந்த அண்ணன் சொல்லி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார்களோ. ஆஸ்திரேலியா இலங்கை எல்லாம் குட்டி அணிகளுக்கு எதிராக 300 400 என்று எடுப்பதை பார்க்கவும் ஆசை வந்து அடிக்க கௌம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்கையா. பங்களாதேஷ் கடைசி ஒரு ரன் எடுக்க ரொம்பதான் திணறியிருக்கும்னு நம்ம சச்சின் சேவாக் எல்லாம் நினைச்யிருப்பாங்க. பங்களாதேஸ் அணியினருக்கு ஒரு சலாம். இதை விட ஒரு கேவலமான ஒரு ஆட்டத்தை இந்தியா இனிச்சந்திக்காது என்று எல்லோரும் மனசை தேத்திக்குவோம் அப்படியே சந்தித்தாலும் ஆஸ்திரேலியாவில் 10 வருசததுக்கு;கு முன்னாடி தென்ஆப்பிரிக்காவல் 4 வருசத்துக்கு முன்னாடினு பழங்கதை பேசி காலத்தை ஓட்டிபுடுவாங்க.

பங்களாதேசுடன் ஆன ஆட்டம் பற்றி கிரிக்கெட் ஜாம்பவான்கள் கபில்தேவ் கவாஸ்கர் சொன்னது.

கபில்தேவ்: “ பேசுவதற்கு ஒன்றும் இல்லை. அவமானமாக இருக்கிறது. எப்படி வெல்ல வேண்டும் என்று பங்களாதேசிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டும்.

கவாஸ்கர்: பங்ளாதேஷ் வீரர்கள் மிகப் பிரமாதமாக ஆடினர். சுழற்பந்து வீச்சாள்களும் அபாரமாக பந்து வீசினர். இந்தியாவின் உலகக்கோப்பை முடிந்தது.

பெருமுடாவுடன் ஆன ஆட்டத்தில் இந்தியா 415 எடுத்து வெற்றி பெற்றதும் இன்னும் 5 அல்லது 6 பந்து யுவராஜ் நின்றிருந்தால் மற்றும் ஒரு உலகசாதனை நிகழ்திருக்கும் என்று சிலாகித்து கூறினர் என் நண்பர்கள். செத்த நாய் எப்பட கெடைக்கும் என்று காத்துகிட்டு இருந்திருப்பாங்களோ?

இலங்கையுடன் ஆன ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று விடும் வெற்றி பெற்றதும் போன் செய்வதாக சொன்ன நண்பன் போன் செய்யாத காரணத்தால் இந்தியா தோற்று விட்டிருக்ககூடும் எனும் நம்பிக்கையில் நண்பரை தொடர்பு கொண்டேன். அழ தொடங்கி விட்டார். பின் நமக்கு நேரமே சரியில்லைங்க என்று கூறியதோடில்லாமல் அவரது பிரார்தனை நம்பிக்கை பற்றி கூறினார். பங்களாதேஷ் பெருமுடாவுடன் ஆன ஆட்டத்தில் தோற்க வேண்டுமாம் பின் முன் மேற்குஇந்தியதீவில் தான் உலககோப்பை பெற்றோம் அதுவும் தட்டு தடுமாறி அது போல இப்பவும் நடக்குமாம். இது என்ன மாயதந்திரமா? விளையாட்டா? (பங்களாதேசுக்கு வாழ்த்து சொல்ல மனசு வரலையேங்க)

இந்திய கிரிக்கெட் அணி தோற்றதில் எனக்கு ஒரு சந்தோசம் என்னன்ன சிங்கப்பூரில் பல்லாயிரகணக்கான தோழர்கள் விடுப்பு எடுத்து 5வெள்ளி ( இந்திய மதிப்பில் விடுப்பையும் சேர்த்தால் ரூபாய் 700.00) கொடுத்து பார்கின்றனர். இது சிங்கப்ப+ரில் மட்டும். இன்னபிற நாடுகளில்? இப்ப தோத்ததால் அடுத்து பார்க்கவிருந்த ஆட்டத்திற்கான பணம் விரயம் ஆகமால் தடுக்கப்பட்டுள்ளது. இதுக்காகவாவது நாம சச்சின் டிராவிட் கங்குலி சேவாக் போனி பண்ணாத டோனிக்கெல்லாம் நன்றி சொல்லனும். (எப்ப அடிப்பாங்கனு புரிஞ்சுக்கவே முடியலைப்பா)

வருகின்ற விளையாட்டுகளிலும் தோற்றுபோங்க. அப்பத்தான் மற்ற விளையாட்டுகளை இந்தியர்கள் ரசிக்கக்கூடும்.

11 முட்டாள்கள் விளையாடும் விளையாட்டை 11000 ஆயிரம் முட்டாள்கள் பார்கின்றனர் என்று மேதை பெர்னாட்சா சொன்னார். ஆனால் இந்தியர்கள் 100 கோடி மக்கள் இப்ப முட்டாள ஆகிட்டாங்களே…………..

சரி ஆனது ஆனாச்சு

அடுத்து என்ன செய்யலாம்

ஆளுக்க ஒரு கருத்து சொல்லுவாங்க

எதோ நம்மலால முடிஞ்ச கருத்து நாட்டுக்கு

அடுத் 5 ஆண்டுக்கு இந்திய அணி சர்வதேச விளையாட்டு போட்டிகளில் விளையாட அனுமதிக்க கூடாது அல்லது
சச்சின் சேவாக் என்று பழம் கதையை சொல்லாமல் அவர்கள் எல்லோருக்கும் சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்து விட்டு புதிய ஒரு அணியை உருவாக்க வேண்டும்.
மேலை நாடுகளில் போல கிரிக்கெட் அணி தனியார் நிறுவனங்களுக்காக ஆடவில்லை சர்வதேசபோட்டிகளில் விளையாடும் போது இந்தியஅணிக்காகவும் துலிப் ரஞ்சி போட்டிகளில் விளையாடும் போழுது அந்த அந்த மாநில அணிக்காகவும் விளையாடுவதால் கிடைக்கும் புகழ் விளம்பர வருமானம் அத்தனையையும் நாட்டுக்கு தந்திட வேண்டும்.
எல்லாம் வேணாம்பா 50சதவிகிதம் விளம்பர வருவாயை தரட்டுமே மற்ற விளையாட்டு போட்டிகளை வழிநடத்த பயன் பெறுமே.

நம்ம தமிழகத்தை சேர்ந்த ஓட்டபந்தய வீராங்கனை சாந்தி சரியான காலணி கூட இல்லாமல் சாதித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த கால்பந்து வீரர் அகஸ்டின் தற்போதைய நிலமை நன்கு அறிந்தது. தமிழகத்தை சேர்ந்த தன்ராஜ்பிள்ளை இன்னமும் விளையாட்டிற்காக திருமணம் செய்ய வில்லை.

இவர்களுக்கெல்லாம் இந்திய அரசு என்ன செய்து விட்டது வரும்காலத்தில் என்ன செய்ய இருக்கிறது?

இப்படியே போனால் பால்தாக்கரே , ராமதாசு போன்றவர்களை மக்கள் வரவேற்க தயங்க மாட்டர்கள்.

எழுத்து: பாண்டித்துரை

Series Navigation

பாண்டித்துரை

பாண்டித்துரை