காளியாய்க் கீழிறங்கி,கன்னிபோல் நெளிந்து ஆடி…..

This entry is part [part not set] of 20 in the series 20011001_Issue

கவியோகி வேதம்


காட்டுக்குத் தாளம் சொல்லிக் கொடுக்கவே
கங்கணம் பூண்டது சாரல்!-அது
பாட்டுக்குக் கல்லைக் கட்டித் தழுவிடும்
பயன்தான் பயணிகள் சேரல்!

வருகிற நீரால் பாதை அமைப்பதில்
வரிபோல் சமைக்கும் கவிஞன்!-அது
பருகவும் தந்துக் கற்கள் செதுக்கிட,
பாரெலாம் மெச்சும் கலைஞன்!

நதியாய்ப் பரவும் சாரலின் ஓடையால்
நடக்கும் உழவின் பயணம்:-முடிவில்
பதியாய் வரித்தே ‘வாரிதி ‘ மார்பினில்
பதமாய் அடங்கும் சயனம்!

Series Navigation