காதல் நாற்பது – 29 எந்நேரமும் உன் நினைவு !

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


உன்னையே நினைக்கிறேன் !
மரத்தின் மீது படர்ந்து
இரட்டைக் கயிறாகப்
பின்னிடும் கானகக் கொடிபோல்,
உன்னைச் சுற்றி மொட்டு விடும்
என் எண்ணங்கள் !
அகண்ட இலைகள் விரிந்து
விரைவில் கானகம்
மறைந்திடும் பச்சைப் போர்வையால் !
அந்தோ என் தென்னை மரமே !
இந்த எண்ணமதைப் புரிந்து கொள்:
என்னரியவன், உயர்ந்தவன்,
உன்னைத் தவிர்த்த எண்ணங்கள்
எதுவு மில்லை எனக்கு !
புதுப்பித்துக் கொள்ள
முடியும் உன் தோற்றத்தை
நொடிப் பொழுதில் !
வலுத்த மரம் ஒன்று கிளைகளைக்
குலுக்கி அடிமரம்
அமணம் ஆவது போல்,
உன்னைச் சுற்றிய
பசுமைப் பட்டை வளையமும்
படாரென்று விழுந்து
வெடித்துச் சிதறும் எத்திசையும் !
காரணம் நான்
இந்த உள்ளப் பூரிப்பின் ஆழத்தில்
காண்பது உன்னை !
கேட்பது உன்னை !
சுவாசிப்பது புதிய காற்றை,
உந்தன் நிழல் எல்லைக் குள்ளே !
அப்போது
உன்னை நினைப்ப தில்லை,
அண்டி உன்னருகில் நான்
அமர்ந்திருப்பதால் !

************
Poem -29

Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

I think of thee!–my thoughts do twine and bud
About thee, as wild vines, about a tree,
Put out broad leaves, and soon there’s nought to see
Except the straggling green which hides the wood.
Yet, O my palm-tree, be it understood
I will not have my thoughts instead of thee
Who art dearer, better! rather, instantly
Renew thy presence. As a strong tree should,
Rustle thy boughs and set thy trunk all bare,
And let these bands of greenery which insphere thee
Drop heavily down,–burst, shattered, everywhere!
Because, in this deep joy to see and hear thee
And breathe within thy shadow a new air,
I do not think of thee–I am too near thee.

**********
S. Jayabarathan [jayabarat@tnt21.com (July 9, 2007)]

Series Navigation

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா