காதல் நாற்பது (20) உன்னைத் தெரியாது ஓராண்டுக்கு முன்பு

This entry is part [part not set] of 29 in the series 20070510_Issue

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


நினைத்துப் பார்க்கும் போது நேசனே!
என்னரும் நேசனே!
ஓராண்டுக்கு முன் நான்
பனித் தளத்தில்
தனித்திருந்த போது நீ
இத்தரணி மீது இருந்தாய், ஆயினும்
எத்தடமும் காணேன்!
அமைதி மூழ்கிக் கிடந்தது!
உந்தன் குரல் செவியில் விழும் சமயம்
வந்திலது,
என் தொடர்புச் சம்பந் தங்களை
எண்ணிப் பார்த்தேன்,
ஒவ்வோர் சங்கிலிக் கோப்பாக!
உன்கரம் புரியப் போகும்
எவ்வித உடைப்பும்
முறிக்காது
அந்தச் சங்கிலிப் பிணைப்பை!
ஏனென்று வாழ்விலே ஆச்சரியம்
எழுவதும் விந்தைதான்!
இரவோ, பகலோ எதுவாயினும்
உன் உரையோ,
அல்லது உன்னரும் பணியோ
புல்லரிப்பு அளிப்ப தில்லை
உனக்கு!
ஏதோ உனக்குள்ள முன்னறிவால்
வெள்ளைப் பூ மலர்வதைக் கண்டாய்!,
நாத்திகர் மந்த புத்திக் காரர்!
ஊகிக்க முடியாது
அவரால்
ஊனக்கண் காணா கடவுளின்
இருப்பை !

********************
Poem -20
Sonnets from the Potuguese
By: Elizabeth Browing

Belovழூd, my Belovழூd, when I think
That thou wast in the world a year ago,
What time I sat alone here in the snow
And saw no footprint, heard the silence sink
No moment at thy voice, but, link by link,
Went counting all my chains as if that so
They never could fall off at any blow
Struck by thy possible hand,–why, thus I drink
Of life’s great cup of wonder! Wonderful,
Never to feel thee thrill the day or night
With personal act or speech,–nor ever cull
Some prescience of thee with the blossoms white
Thou sawest growing! Atheists are as dull,

**********

S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 7, 2007)]

Series Navigation