கபடி கபடி

This entry is part [part not set] of 23 in the series 20050609_Issue

வ.ஐ.ச.ஜெயபாலன்


நீலவானம் கடலாய் உருகி

தழுவும்
தென்னங்
கரைகளிலே

பசிய
வயல்களின்
பின்னே
கோபுர

முலை
நிமிர்த்தும்
ஊர்களிலே

தொட்ட
ஒளியை
பூவாய்
தெறிக்கும்

கொட்டும்
அருவிக்
கரைகளிலே

மண்ணில்
விழுந்த
சுவர்க்கமாக

மூடும்
செழித்த
காட்டினிலே

பசை
நாக்கோடு

பசித்த
பல்லி
மனிதர்கள்
திரியும்

சுவர்
தோப்பான
நகர்களிலே

தேசத்
தீவின்
பரப்பெல்லாம்

வீடு
விட்டு
விடுதலையாகி

வீசும்
காற்றாய்
சுழன்றவன்
நான்.

எந்தாய்
மண்ணில்

அடங்க
மறுத்தும்
கொடுமைகள்
எதிர்த்தும்

கவிதைகள்
பாடித்
திரிந்தேனே.

திரும்பாதே
ஓடென்கிற
அகால
மரணமே

திரும்பி
வா
என்கிற
தாய்
மண்ணே

ஏன்
விதியின்
பந்தாய்
உதை
பட்டேன்

என் ஊர்,
உலகென்று
கிழிபட்டேன்.

‘உன்
தேசம்
துறந்து
அகதியாய்
சிதை ‘ என

உலகத்
தெருவெலாம்
கலைப்பவன்யார்.

ஓயா தோடி
வழி
நெடுக

இழைத்ததே
எனது
கவிமனசு

கொஞ்ச
நேரம்
எனைத்
தேற்ற

கோட்டு
யாழை
யார்
இசைப்பார்.

கபடி
கபடி
கபடி
கபடி

களம் என்
நாடு
நுழைகிறதும்

கொலைக்
கரங்களைத்
தப்பி
ஓடுறதும்

கபடி
கபடி
கபடி
கபடி

visjayapalan@yahoo.com

Series Navigation