கண்மணி அப்பா (அல்லது) அப்பாவின் கண்மணி

This entry is part [part not set] of 26 in the series 20050722_Issue

கற்பகம் இளங்கோவன்


‘கண்மணி… ‘ அப்பாவின் குரல்!

கண்மணி, அவசர அவசரமாக ?ாலுக்கு விரைந்தாள்.

வழக்கம் போல பிரமைதான்! எதற்கெடுத்தாலும், கண்மணி, கண்மணி என்று கொஞ்சலாக அழைக்கும் அப்பா

அவளிடம் முகம் கொடுத்துப் பேசி ஒரு மாதத்திற்கும் மேலாகிறது.

உலகச் சமாதானத்துக்காக என்னவெல்லாம் தீர்வுகள் கண்டுபிடிக்கலாம் என்று

அப்பாவும் மகளும் இதே ?ாலில் மணிக்கணக்காகப் பேசியிருக்கிறார்கள்.

இன்று.. இவர்களுக்கிடையே சமரசம் செய்துவைக்க, ஏதாவது ஒரு வழி பிறக்காதா,

என இருவருமே மெளனப் போராட்டத்தில் தவிக்கிறார்கள்.

சாய்வு நாற்காலியில் அமைதியாக பத்திரிகை வாசித்துக் கொண்டிருந்த அப்பாவை, தீர்க்கமாகப் பார்த்தாள் கண்மணி.

நான் உங்க பொண்ணு அப்பா.. வீராப்பும், கோபமும், எனக்கு மட்டும் எந்த விதத்தில் குறைந்து விடப் போகிறது ?

உங்கள் பிடிவாதம் இன்னும் எத்தனை நாள் நீடிக்கிறது பார்க்கலாம், என்று நினைத்துக் கொண்டு திரும்பியவள்,

அப்பா மூக்குக் கண்ணாடி இல்லாமல் படிப்பதை கவனித்தாள்.

சக ?மான சூழ்நிலையாக இருந்தால் ஓடிப்போய் கண்ணாடியை எடுத்து அவரிடம் நீட்டியிருப்பாள். இப்போது முடியவில்லை.

தவிப்பாக இருந்தாலும், அவரிடம் தோற்றுப்போகும் நிலையில் தற்போது அவள் இல்லை.

காயத்ரி மறைந்த போது, துக்கம் விசாரிக்க வந்த சொந்த பந்தங்கள் எல்லாம் ஒரு சில நாட்களில்

காணாமற் போக, மூன்று வயது கண்மணியோடு, தனியாக விடப்பட்டார் வேணு.

‘கண்மணி.. வாம்மா… ‘

ஒரே மகள் உடனே ஓடி வந்து மடியில் ஏறிக்கொள்வாள் என்று எதிர்பார்த்த வேணுவிற்கு,

குழந்தை மிரட்சியோடு சுவரோரம் அண்டிக் கொண்ட காட்சி பேரிடியாக இருந்தது.

எப்போதும் பி ?ின ? பயணங்கள்,அலுவலகம், என்று பணத்திற்காக தொலைத்த பொழுதுகளை, மகளோடு செலவிடத் தவறியதை எண்ணி கூனிக்குருகிப் போனார். தினமும் தாமதமாக வீட்டுக்கு வரும் இந்த மனிதரை, அப்பா என்று அறிமுகப் படுத்தியிருந்தாள் அம்மா.

அது தவிர… கண்மணி அது வரை அறிந்திருந்த ஒரே உலகம் அம்மா… அம்மா மட்டுமே!

‘கண்மணி… வாம்மா ‘ என்று மீண்டும் மென்மையான குரலில் அழைத்த அப்பாவைத் தவிர, வேறு யாருமே அருகில் இல்லாததை உணர்ந்த கண்மணி முதன் முதலாக, அப்பாவின் கரங்களுக்குள் சரண் புகுந்தாள்.

அன்றைக்குத் தாயுமானவராக மாறிய தந்தையை, இன்று, அடம்பிடிக்கும் ஒரு செல்ல மகனைப் பார்ப்பது போல

வாஞ்சையோடு பார்த்துவிட்டு, மீண்டும் தனது அறைக்குத் திரும்பினாள் கண்மணி.

நின்று நிதானமாக, தன்னையே கவனித்துவிட்டுப் போன மகளின் புன்னகையில், வேணுவுக்கு –

அப்பா.. அப்பா.. என்று அலறிக்கொண்டே பள்ளியிலிருந்து திரும்பிய எட்டு வயது கண்மணி தெரிந்தாள்.

என்னவோ ஏதோ என்று பதறியவரிடம் உள்ளங்கையில் பத்திரமாக மறைத்து வைத்திருந்த ஒரு பல்லைக் காட்டி,

‘பி.டி. நேரத்துல விளையாடும்போது, பல்லு கீழே விழுந்துருச்சுப்பா. அவ்ளோதான், உன் பல்லு வானத்த பார்த்துருச்சு.. இனி

திரும்ப வளரவே வளராதுன்னு சுமா சொன்னாப்பா, நெ ?மாப்பா.. ? ‘ என்றபடி கேவிக் கேவி அழுத மகளைத் தேற்றி,

வானத்தைப் பார்த்த அந்த பல்லுக்கு, மாமரத்தடியில் இறுதிச் சடங்கு நடத்திய ஞாபகம்.. சிரிப்பை வரவழைத்தது.

வானத்தைப் பார்த்த பல் என்னவோ மீண்டும் முளைத்துவிட்டது.

இப்போது, வாழ்க்கையை அல்லவா உள்ளங்கையில் வைத்துக் கொண்டு முரண்டு பிடிக்கிறாள்!

மீண்டும் அவரது மனத்தில் கவலை குடிகொண்டது.

காலார நடந்துவிட்டு வரலாம் என்று வெளியே பார்த்தார்.

வானம் உருமிக்கொண்டிருந்தது, இருட்டியிருந்தது. அடை மழை ஏதும் பெய்யாது. சின்னத் தூரல் வந்தால் வரலாம்.

எதற்கும் இருக்கட்டும் என்று குடையை எடுத்துக் கொண்டு வாசற்பக்கம் சென்றார்.

‘கண்மணி, அப்பா கொஞ்சம் வெளியே போய்ட்டு வர்றேம்மா ‘, தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டு தெருவுக்குள் இறங்கினார்.

தொலைபேசி ஒலித்தது. உள்ளே செல்லலாமா என்று நினைத்தவர், வேறாரு.. அவனாகத்தான் இருக்கும்.

தனக்கும் தன் மகளுக்கும் நடுவே புகுந்து, இப்படித் தவிக்க வைத்துக் கொண்டிருக்கும் சஞ்சீவ்!

சனியன் பிடிச்ச சஞ்சீவ், என்று வைதபடியே நடையைக் கட்டினார்.

‘ஓடி வருகையிலே.. என் முன்னே ஆடி வரும் தேரே… ‘ கல்லூரிக்குள்ளேயிருந்து தாவி ஓடி வரும்

கண்மணியைக் காணும் போதெல்லாம் வேணுவின் மனதுக்குள் பொசுக்கென்று ஒரு நந்தவனம் பூத்து அடங்கும்.

விதையொன்றை பத்திரமாகக் கண்ணுக்குள் வைத்து, மண்ணுக்குள் புதைத்து, அதனைப் பார்த்துப் பார்த்துப் பாதுகாத்து,

தினந்தோறும், அது கண்விழிக்கும் பொழுதுக்காய் தவமிருக்கும் தோட்டக்காரனைப் போன்றதுதான்,

ஒவ்வொரு தந்தையின் நிலையும்.

அந்தத் தளிர் மெல்ல எட்டிப்பார்த்து, இலைகள் வளர்த்து, நெடு நெடுவென்று கிளைகள் தழைத்து, பூத்து நிற்கும் காட்சி!

அடடா.. எத்தனைக் கோடி சுவர்க்கங்கள் கொடுத்தாலும், தன் செல்ல மகள் தூரத்தில் நளினமாக நடந்து வரும் அழகுக்கு

ஈடாகுமா.. ? பெருமிதத்தில் தன்னைமறப்பார் வேணு.

அப்படியொரு சமயம் காருக்குள் ஏற நினைத்த கண்மணி, அவனைக் கண்டதும் உற்சாகமானாள்.

அப்பா, ஒரு நிமி ?ம்பா.. என்று காத்திருக்க வைத்துவிட்டு. சஞ்சீவின் கைகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள்.

‘அப்பா.. இது சஞ்சீவ். சஞ்சீவ், இவர் என்னோட அப்பா. வேணுகோபால். ‘

‘வணக்கம் சார் ‘, என்றான் பவ்யமாக. வேறேதும் தோன்றவில்லை அப்போது.

கல்லூரி முடித்த கையோடு, சிறந்த வங்கியில் வேலைக்குச் சேர்ந்துவிட்டாள் கண்மணி.

அப்போது சஞ்சீவை மீண்டும் ஒருமுறை அறிமுகப்படுத்தினாள். ‘விரும்புகிறேன் ‘ என்று.

அன்று துவங்கியது இந்த பனிப்போர்… யோசித்தபடியே நடந்தார்.

எத்தனைக் காலமாக பழகுகிறார்கள் ? இவனை நம்பி ஒரே செல்ல மகளை எப்படி தருவது ?

அவளுக்கான வாழ்க்கைத் துணையைப் பார்த்து, பார்த்து, தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தேனே.

எப்போதும் போல என் கண்மணி, என் கண்ணுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று நினைத்தேனே.

சஞ்சீவ் என்னவென்றால், மல்டி மீடியா என்கிறான். குரும்படங்கள் என்கிறான், விளம்பர கம்பெனி…வெளிநாடு என்கிறான்!

அவனது திட்டங்களைக் கேட்டது முதல் வேணுவுக்கு நிலை கொள்ள வில்லை.

வ்ியாபாரம், பணம், புகழ் என்று அலைந்து அலைந்து காயத்ரியைக் கோட்டை விட்டது போதாதா ?

மேகம் தூரல் போடத்துவங்கியது.

சட சடவென்று சன்னல்கள் அடித்துக் கொள்ள, எழுந்து தாளிட்ட கண்மணி, இந்த மழையில் அப்பா வெளியே

சென்றிருக்கிறாரே, என்று கவலை கொண்டாள்.

எப்படியாவது அப்பாவைச் சமாதானப் படுத்த வேண்டும். சம்மதிக்க வைக்க வேண்டும்.

இதுவரை தனது எந்த கோரிக்கையையும் நிராகரிக்காத அப்பா,

சஞ்சீவ் விசயத்தில் இத்தனை உறுதியாக இருக்கிறார் என்றால், அவரது நியாயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இது குறித்து அவள் கவலை கொண்ட போது சஞ்சீவ் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன.

‘கண்மணி ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி.. அப்பா பதில் சொல்லலேன்னு கவலைப் படாதே.

நீ அவருக்கு ஒரே செல்ல மகள், அவரது தயக்கங்கள் எனக்கு நல்லா புரியுது.

குழந்தைப் பருவம் முதல் உன்னை பொத்திப் பொத்தி வளர்த்தவருக்கு, திடார்னு, மொத்தமா அந்தப் பொறுப்பை

என்கிட்ட ஒப்படைக்கறது ரொம்பவும் கடினமானச் செயலா இருக்கும்.

அவரது பயங்களையும், சந்தேகங்களையும் நாமதான் மெல்ல போக்கனும்.

இந்த சூழ்நிலையை ரொம்பவும் பொறுமையா கையாளனும்.

அவரது மனசு நோகும்படி நடந்துக்காதே. எப்போதும் போல அவரோடு சக ?மா இரு. ‘

‘நான் எங்கே உன்னை கடத்திகிட்டு வெளிநாடு போயிடுவேனோன்னு பயப்படறாரு. பாவம்.

அவரோட சின்ன வயசுல பி ?ின ?தான் முக்கியம்னு, உன்னோட அம்மாவை இழந்துட்டதா நினைக்கறார்.

அந்த குற்ற உணர்விலிருந்து அவர் இன்னமும் மீளல. ஆனா, நான் அப்படி இல்ல.. எனக்கு குடும்பம்தான்

முதலில், என்பதை அவருக்குப் புரிய வைக்கனும். உன்னை எந்த வித க ?டமும் வராம பாதுகாப்பேன்னு

அவருக்கு நம்பிக்கை அளிக்கனும். நான் இன்னொரு முறை அவரோட வந்து பேசறேன்.

இது ஒண்ணும் பெரிய வி ?மில்ல, சின்ன வயசுல உங்க அப்பா அரி ?டோடில் வர்க்கமா இருந்திருக்காரு.

அதாவது, To be is to Do – வாழ்வது செயலாற்றுவதற்காகத்தான் என்று நம்பற ரகம்.

நான் வால்டார் கட்சி , To do is to be – செயலாற்றுவது வாழ்வதற்காக. வேலை வாழ்க்கையை விழுங்கிவிடக்கூடாது.

நாம அதற்கு வாய்ப்பளிக்கக் கூடாது. ‘

‘வேணு சார்… என்னை தயவுசெய்து நம்புங்க. அப்புறம்.. ஃப்ராங்க் சினாட்ரா கணக்கா, dooo be dooo be dooo ன்னு,

வாழ்க்கையை வெறும் வேடிக்கைப் பாட்டா மாற்றிவிடுகிற ஆசாமி யார்கிட்டேயாவது, உங்க பெண்ணை மாட்டிவிட்டுடாதீங்கன்னு அவருக்கு விளக்கிச் சொல்லனும். ‘

சஞ்சீவின் பேச்சை நினைத்து அவள் முகத்தில் புன்னகை பூத்தது.

மழை விட்டிருந்தது.. சிறிய தூரல்தாம்.

அப்பாவோடு சதா மாமாவும் வீட்டுக்குள் நுழைந்தார்.

நனைந்திருப்பார்களோ என்று கண்மணி அவசர அவசரமாக சில டவல்களை எடுத்துக் கொண்டு

?ாலுக்கு விரைந்தாள்.

‘அப்பா நனையல கண்மணி. மழை வருவதற்கு முன்னேயே எங்க வீட்டுக்கு வந்துட்டார்.

இரண்டு பேருமா கலந்தாலோசிச்சு, பிறகு சஞ்சீவைப் பார்த்து பேசிட்டுதான் வர்றோம்.

என்ன வேணு.. ? ‘

‘ ?ம்ம்…ஆமாம்டா கண்மணி. ‘

அப்பா பேசிவிட்டார்! அவளுக்கு சந்தோசம் பிடிபடவில்லை.

‘நாளைக்கு சஞ்சீவோட அப்பா அம்மாவை வரச்சொல்லியிருக்கேம்மா ‘

நடப்பது நி ?ம்தானா என்பது போல கண்மணி அப்பாவையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.

‘என்ன ? கல்யாணப்பெண்ணெ.. நம்ப முடியலையா ? சஞ்சீவை எங்க எல்லோருக்குமே பிடிச்சிருக்கும்மா.

நீங்க இந்த காலத்துப் பிள்ளைங்க ரொம்ப தெளிவா இருக்கீங்க. வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிஞ்சவங்க.

வாழ்க்கைக்காக சம்பாத்தியம்… சம்பாத்தியத்துக்காக் வாழ்க்கை அல்ல என்று புரிஞ்சிகிட்டவங்க.

எங்க காலம் வேற. மொத்ததுல சஞ்சீவ் உன்னொட பழைய அப்பா மாதிரி,

உத்தியோகத்துக்கு அடிமைப்பட்டவரும் இல்ல, அதே சமயம் ?ர ?ர சம்போன்னு ப ?னை பண்ணுகிற ரகமும் இல்ல! ‘

‘டூபி..டூபி..டூ… ‘ இப்போது, ஃபிராங்க் சினாட்ரா, சதா மாமாவின் அவதாரமெடுத்து கண்மணியின் மனதுக்குள் ஒரு குதூகலக் கச்சேரியைத் துவக்கியிருந்தார்.

****

karpagamelangovan@yahoo.com

Series Navigation